72 வயது ஜைன மூதாட்டி ஜீவ சமாதி அடைய விரதம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

72 வயது ஜைன மூதாட்டி ஜீவ சமாதி அடைய விரதம்

Added : பிப் 06, 2019 | கருத்துகள் (9)
ஜைன மூதாட்டி,ஜீவ சமாதி,விரதம்

ஆரணி: ஜீவ சமாதி அடைய, 72 வயது ஜைன மூதாட்டி, உணவு, நீர் அருந்தாமல் விரதம் இருந்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம், லக்னாபூரைச் சேர்ந்த, ஜைன மூதாட்டி பவாரிதேவி, 72. இவர், 2010ல், பெற்றோர் மற்றும் கணவரை இழந்த நிலையில், துறவியானார்.கடந்த, 18 ஆண்டுகளாக, இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் ஆலயங்களுக்கு சென்று, ஜைன மதத்தின் பெருமைகளை விளக்கி வந்தார்.

இந்நிலையில், ஜீவ சமாதி அடைய விரும்பி, ஜன., 31-ல், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த திருமலை அரிஹந்தகிரி ஜெயின் மடத்துக்கு வந்தார். பிப்., 1ல் விரதம் துவங்கி, உணவு, நீர் அருந்தாமல் இருந்து வருகிறார். அவரை, 12 மாதாஜிக்கள் கவனித்து வருகின்றனர். இரண்டொரு நாட்களில், ஜீவ சமாதி அடைவார் என, தெரிகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X