'பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் முன்னிலை பெற மம்தா முயற்சி' | Dinamalar

'பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில் முன்னிலை பெற மம்தா முயற்சி'

Updated : பிப் 06, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (36)
Advertisement
 'பிரதமர் வேட்பாளர் பந்தயத்தில்  முன்னிலை பெற மம்தா முயற்சி'


சென்னை: ''பிரதமர் வேட்பாளருக்கான பந்தயத்தில், தன்னை முன்னிலைபடுத்திக் கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, போலீசார் வாயிலாக, சி.பி.ஐ., அதிகாரிகளை கைது செய்துள்ளார்,'' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், தமிழ்மணி தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதில், யாருக்கும் சந்தேகமில்லை. இவ்வழக்கில், சம்பந்தப்பட்ட அதிகாரியான, கோல்கட்டா போலீஸ் கமிஷனர், வழக்கின் விசாரணை முதலில் நடைபெற்ற போது, சிறப்பு அதிகாரியாக இருந்தவர்.




எனவே, விசாரணைக்கு ஆஜராகி, அவரிடம் உள்ள விபரங்களை தரும்படி, சி.பி.ஐ., பல முறை, 'நோட்டீஸ்' அனுப்பியது; அவர் வரவில்லை.ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருப்பவர், தனக்கு இணையான அல்லது மேலுள்ள அதிகாரி அழைத்தால், அதை மதிக்க வேண்டும். அதை மதிக்காதவர், அரசு அதிகாரியாக இருக்கும் தகுதியை இழக்கிறார். சி.பி.ஐ., அதிகாரிகள் அழைத்ததற்கு, அவர் பதில் கூறவில்லை.சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடம் கைமாற்று கேட்கவோ, அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து கூப்பிடவோ செல்லவில்லை. அவர்கள், அரசு அதிகாரிகளாக, கடமையை செய்ய சென்றனர். அவர்களை, மாநில அரசை சேர்ந்த போலீசார் கைது செய்தது, சுதந்திர இந்தியாவில், இதுவரை நடக்காத, மிகக் கொடுமையான, கீழ்த்தரமான செயல்.இந்த செயலை, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தெரியாமல் செய்திருப்பார்களா என்று கேட்டால், சாதாரண குடிமகனாக கூட, நான் நம்பத் தயாராக இல்லை. சி.பி.ஐ., அதிகாரிகளை, போலீசார் வலுக்கட்டாயமாக, துாக்கி சென்றுஉள்ளனர்.முதல்வர் தைரியம் கொடுத்திருந்தால் மட்டுமே, மாநில போலீசார், இவ்வாறு நடந்திருப்பர். மம்தா, தன்னை பிரதமருக்கான ஓட்டப் பந்தயத்தில், முன்னிலை படுத்திக்கொள்ள எடுத்த முயற்சியே தவிர, வேறு எதுவும் இல்லை.இவ்வாறு, தமிழ்மணி கூறினார்.



வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
08-பிப்-201907:17:46 IST Report Abuse
வேலங்குடியான் அகங்காரம் கொண்ட இந்த பெண் அழிவது உறுதி....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-பிப்-201919:19:11 IST Report Abuse
Pasupathi Subbian ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை. தான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழுவதில்லை. இதை பொன்மன செம்மல் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் பாடிவைத்துள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
06-பிப்-201914:20:37 IST Report Abuse
karthik ஆசை இருக்கு அரசியாக, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X