கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லை உண்மை: போப் பிரான்சிஸ் | Dinamalar

கன்னியாஸ்திரிகளுக்கு பிஷப்கள் பாலியல் தொல்லை உண்மை: போப் பிரான்சிஸ்

Updated : பிப் 06, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (116)
Advertisement

வாட்டிகன்: மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகள் சிலர், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதான் என கத்தோலிக்க தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.





ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுவிட்டு கத்தார் செல்லும் வழியில் போப் பிரான்சிஸ், விமானத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது கடந்த வாரம் வாட்டிகனில் இருந்து வெளியாகும் பெண்கள் பத்திரிக்கை ஒன்றில், கன்னியாஸ்திரிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்தும், மதகுருமார்கள் மற்றும் பிஷப்புகளுக்கு எதிராக கன்னியாஸ்திகள் பாலியல் புகார்கள் அளித்து வருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.




அதற்கு பதிலளித்த போப் பிரான்சிஸ், இதுபோன்ற பிரச்னை அனைத்துப் பகுதியிலும் உள்ளது. இந்த கொடுமைகள் தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது என நினைக்கிறேன். அதனை தடுக்கும் பணிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். இது தொடர்பாக சில மதகுருக்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைக்காக நீண்ட காலமாக வாட்டிகன் போராடி வருகிறது. இது போன்ற கொடுமைகளை தடுக்க இன்னும் அதிகமாக தொடர்ந்து போராடுவோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
12-பிப்-201917:04:56 IST Report Abuse
Gnanam இறைவன் ஆணையும் பெண்ணையும் ஒன்றித்து வாழத்தான் படைத்திருக்கின்றான் அப்படியிருக்க ஏன் குருக்களுக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் திருமணம் செய்துகொள்ள தடை? திருமணம் செய்த தம்பதியரும் குவாகவும், கன்னியாஸ்திரியாகவும் ஊழியம் செய்யலாம் என்ற திருத்தும் கொண்டுவந்தால் இப்படிப்பட்ட பாலியல் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறலாம்.
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
10-பிப்-201907:31:14 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA மதம் என்று பொருத்தமாகத்தான் சொல்லியிருக்கிறான் .மதங்கள் ஒழியும் வரை உலகம் உருப்படப்போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
09-பிப்-201904:57:49 IST Report Abuse
meenakshisundaram மது மாது மாமிசம் இல்லாமலேயே மத போதனை இருக்க வேண்டும் ,இந்த மத போதகர்கள் இந்த மூன்றும் கட்டுப்பாடின்றி அனுபவிக்கவே இதற்க்கு வருகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.பின் போற்றுபவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.இதை மூழ்கியவர்கள் அடுத்தவர்களுக்கு போதனை செய்தல் உருப்படுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X