பொது செய்தி

இந்தியா

படைக்கு பழைய விமானம்: அரசியல்வாதிகள் உல்லாசம்

Updated : பிப் 06, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (64)
Share
Advertisement
புதுடில்லி : அதர பழைய போர் கருவிகளைக் கொண்டு போர் புரியவும், பழைய போர் விமானங்களில் பறக்கவும் விமானப்படை வீரர்கள் நிர்பந்திக்கப்படுவதாக சமீபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.புது விமானம் இல்லைபோர் விமானங்களின் விலை எப்போதுமே விலை அதிகம். இதனாலும், எதிர்க்கட்சிகளின் லஞ்ச புகாராலும் கடந்த 15 ஆண்டுகளில் புதிய போர்

புதுடில்லி : அதர பழைய போர் கருவிகளைக் கொண்டு போர் புரியவும், பழைய போர் விமானங்களில் பறக்கவும் விமானப்படை வீரர்கள் நிர்பந்திக்கப்படுவதாக சமீபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.


புது விமானம் இல்லை


போர் விமானங்களின் விலை எப்போதுமே விலை அதிகம். இதனாலும், எதிர்க்கட்சிகளின் லஞ்ச புகாராலும் கடந்த 15 ஆண்டுகளில் புதிய போர் விமானம் எதையும் ஐ.மு.கூட்டணி அரசு வாங்கவில்லை. பல்வேறு மாடல் போர் விமானங்களை ஆய்வு செய்து ரபேல் விமானங்களை வாங்கலாம் என 2006ல் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், பதவிக்காலம் முடியும் வரை ஒரு விமானம் கூட வாங்கப்படவில்லை. இப்போதுள்ள தே.ஜ.கூட்டணி அரசு தான் போர் தளவாடங்கள் வாங்கும் கொள்கையை மாற்றியது. அதன்படி, இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டனர். வாங்கும் நாட்டின் தலைவரும் விற்கும் நாட்டின் தலைவரும் நேரடியாக பேசி ஒப்பந்தம் செய்வது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.

இதனாலேயே, ரபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம் தனியாராக இருந்தாலும், பிரான்ஸ் நாட்டு அதிபரே நேரடியாக இது பற்றி இந்தியாவுடன் பேச்சு நடத்தினார். அதனாலேயே மொத்தம் வாங்கப்பட 126 விமானங்களில் 36 விமானங்களை பறப்பதற்கு தயார் நிலையில் இந்தியா வாங்குகிறது. இதில் முதல் செட் விமானங்கள் வரும் ஆகஸ்டில் இந்தியாவுக்கு வர உள்ளன.
latest tamil news


நிலைமை இப்படி இருக்க பெங்களூருவில் பிப்ரவரி 1 ம் தேதியன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானிகள் 2 பேர், பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தனர். இறந்த விமானப்படை வீரர் சமீரின் சகோதரர் சூஷந்த் தனது கோபத்தை கவிதை வடிவில் வெளியிட்டுள்ளார். சமீரின் மனைவி கரீமா தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.


latest tamil news


அதில், ஊழல் அரசியல்வாதிகள் ஒயின்களை அனுபவித்துக் கொண்டு உல்லாசமாக உள்ளனர். ஆனால் பழங்காலத்து போர் விமானங்கள், போர் கருவிகளை பயன்படுத்த விமானப்படை வீரர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். திறமையை பயன்படுத்தி நமது வீரர்களும் தற்போது வரை அவற்றை இயக்கி வருகின்றனர். வானத்தில் பறக்கும் வீரர்கள் எலும்புகளாக கீழே விழுகிறார்கள். ஆனால் கருப்பு பெட்டி மட்டும் கண்டுபிடிக்கப்படுகிறது.


latest tamil news


மிகவும் ஆபத்தான முறையில், உயிரை பணயம் வைத்து அவர்கள் பயிற்சி எடுக்கிறார்கள். பாராசூட் கூட தீப்பிடித்துள்ளது. பழங்கால இயந்திரங்களால் நமது வீரர்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இறந்த 2 விமானப்படை வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் டுவிட்டரில் ஹெஸ்டேக் ஒன்றை உருவாக்கி, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

2015 -16 ம் ஆண்டில் மட்டும் 35க்கும் மேற்பட்ட விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்திற்குள்ளாகின. இதில் 45க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 2011 ம் ஆண்டு முதல் விமானப்படை, ராணுவம், கடற்படைக்கு சொந்தமான 75 க்கும் அதிகமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்திற்குள்ளாகின. இதில் 80க்கும் அதிகமான வீரர்கள் பலியாகி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
07-பிப்-201914:26:54 IST Report Abuse
bal தமிழகத்தில் உள்ள டவுன் பஸ் கூட அப்படிதான்....காசு மட்டும் அரசியல்வாதிகள் கொள்ளை அடித்துவிட்டு மக்கள் ஓட்டை பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும். இதுதான் விதி.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
06-பிப்-201920:05:44 IST Report Abuse
Sivagiri நம்ம ஊரு போக்குவரத்து கழக பேருந்து டிரைவர்களும் இப்பிடித்தான் பொலம்புறாய்ங்க . . . எப்ப நேருவின் மகளே வா-ன்னு வரவேற்றாய்ங்களோ அப்ப பிடிச்சது சனி . . . டில்லியில் மட்றாஸிலும் . . . இன்னும் ஆட்டி படைக்குது . . .
Rate this:
skv - Bangalore,இந்தியா
07-பிப்-201904:18:01 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>சிறிது நன்னாயிருந்தாலும் அந்த பேருந்துகளின் கட்டணம் எவ்ளோ எகிறுது தெரியுமா அடுத்த ஸ்டாப்பிலே இறங்கினாலும் கூசாமல் 15ruuvaay வாங்கிர்ரானுகளே நடத்த்துனர்கள் பாடாவதி பஸ்களில் 5ரூவா என்றால் மினிமம் பளபளபஸ்லே போனால் 15 ,இதனால் மக்கள் போனால்போட்டும் என்று ஆட்டோல போறாங்க...
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
06-பிப்-201917:28:30 IST Report Abuse
Nallavan Nallavan Jeep scandal case என்று இணையத்தில் தேடினால் சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ ஊழல் தெரியவரும் ..... இந்தியா ஜனநாயகத்துக்கு லாயக்குப் படாது ..... சுயநலமிக்க, திருட்டு அரசியல்வாதிகள் மற்றும் புத்திகெட்ட மாக்களாகிய மக்களுக்கு ஊழல் மிகுந்த ஜனநாயகம் ஒரு சொர்க்கம் ..... சொறிபிடித்தவனுக்குச் சொறிந்துகொண்டே இருப்பதில் மட்டுமே இன்பம் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X