சபரிமலை தீர்ப்பை ஏற்கிறோம்: தேவசம் போர்டு 'பல்டி'

Updated : பிப் 06, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (74)
Advertisement

புதுடில்லி : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்பதாக கேரள தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.





சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என 2018 செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த உத்தரவை எதிர்த்து 50 க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. விசாரணையின் போது தங்கள் தரப்பு கருத்தை தெரிவித்த கேளர தேவசம் போர்டு, எங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறோம். சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதித்து, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயாராக உள்ளோம். பெண்களுக்கு எதிராக கடைப்பிடிக்கப்பட்டு வந்த தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளது.




சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த தேவசம் போர்டு, பிறகு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதாக அறிவித்தது. இதற்கு பந்தளம் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பக்தர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் தனது முடிவை மாற்றிய தேவசம் போர்டு, பக்தர்களின் நம்பிக்கையை மதிப்பதாக தெரிவித்தது.
தற்போது மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்பதாக தெரிவித்துள்ளது. கேரள அரசின் முடிவை பொறுத்தே சீராய்வு மனுக்கள் மீதான சுப்ரீம் கோர்ட்டின் முடிவு அமையும்.
விசாரணை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201900:37:11 IST Report Abuse
Tamilan அரசியல் சட்ட மூடர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கேரளாவில் இந்து மதத்தை அழிப்பதற்கான முதல் சங்கு ஊதப்பட்டுள்ளது. மடையர்களால் மடையர்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும். காட்டுமிராண்டிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201900:33:53 IST Report Abuse
magan எங்களுக்கு மத வெறியோ சொறியோ கெடயாது அப்படினா என்னென்று அயல் நாடுகளில் இருந்து வந்த மதத்தை சேர்நதவர்களுக்குத்தான் தெரியும் நாங்கள் வருத்தப்படுவதெல்லாம் எங்கள் நாடு மதம் மொழி கலாச்சாரம் அழிந்து விடகூடாது என்பது மட்டும் தான்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-பிப்-201900:33:32 IST Report Abuse
Tamilan அரசியல் சட்டத்தின் துணையோடு இந்தியாவை இந்து மதத்தை ஒழித்துக்கட்டும் சக்திகளின் பிடியில் சிக்கித்தவிக்கிறது தேவசம் போர்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X