வீட்டுக்கு சென்ற கனகதுர்கா; வெளியேறிய குடும்பத்தினர்| Dinamalar

வீட்டுக்கு சென்ற கனகதுர்கா; வெளியேறிய குடும்பத்தினர்

Updated : பிப் 06, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (56)
Advertisement
சபரிமலை,கள்ளப்பயணம்,கனகதுர்கா

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு கள்ளப்பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்த கனகதுர்கா, நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் கணவர் வீட்டிற்கு சென்றார். ஆனால் கணவர் வீட்டைப்பூட்டி சென்றுவிட்டதால், பூட்டை உடைத்து போலீசார் உள்ளே அனுப்பி வைத்தனர்.





சபரிமலையில், மாநில அரசு மற்றும் போலீசார் உதவியுடன் கள்ளப்பயணம் மேற்கொண்டு தரிசனம் செய்த கனகதுர்கா, தரிசனம் முடிந்த ஒரு வாரத்துக்கு பின், மலப்புரத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை, மாமியார், கட்டையால் அடித்து விரட்டினார். இதையடுத்து, தன்னை வீட்டிற்குள் அனுமதிக்க உத்தரவிடக்கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், கனகதுர்காவை போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்ல, நீதிமன்றம் உத்தரவிட்டது.




அதன்படி நேற்று அவர், கணவர் வீட்டுக்குச் சென்றார். ஆனால் முன்னதாகவே, கணவர் கிருஷ்ணன் மற்றும் குழந்தைகள், வீட்டை பூட்டிச் சென்று விட்டனர். போலீசார், கதவை உடைத்து, கனகதுர்காவை உள்ளே அனுப்பினர். அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுக தீர்வு ஏற்படும் என நம்புவதாக, கனக துர்கா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
12-பிப்-201907:38:38 IST Report Abuse
Subramanian Arunachalam முன்பு அடங்கா பிடாரி அங்கமுத்து என்று ஒரு சித்திர கதை தின தந்தியில் வரும் . அந்த பெண்மணி போல் இவர் இருக்கிறார் .இவருடைய கணவன் என்ன பாவம் செய்தானோ இப்போது இவள் மூலமாக அவமானத்தை சந்திக்கிறான் .
Rate this:
Share this comment
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
10-பிப்-201911:22:43 IST Report Abuse
Unmai vilambi விளம்பரத்திற்காக திருட்டுத்தனமாக அய்யப்பனை தரிசித்த கனகதுர்காவை ஐயப்பன் தான் காப்பாற்றவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
sakthi - Covai,இந்தியா
09-பிப்-201916:13:53 IST Report Abuse
sakthi நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்ப்புகள் அனைத்தும் சரியானது என்று தற்போதைய சூழலில் சொல்ல முடிவதில்லை ... யாரோ சில சுயநலவாதிகளுக்காக நீதிமன்றங்கள் தவறான தீர்ப்பை தருகிறதோ என என்ன தோன்றுகிறது. நேற்று கொடுத்த தீர்ப்பு இன்று மாற்றப்படுகிறது ... இன்று தரும் தீர்ப்புகளும் நாளை மாற்ற படலாம் ... மொத்தத்தில் நீதி கொல்லப்படுகிறது பல சமயங்களில் இது நாட்டுக்கு நல்லதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X