அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொச்சைப்படுத்தும், 'தினமலர்' : நெல்லையில் வைகோ ஆதங்கம்

Added : பிப் 06, 2019 | கருத்துகள் (37)
Advertisement
 கொச்சைப்படுத்தும், 'தினமலர்' : நெல்லையில் வைகோ ஆதங்கம்

திருநெல்வேலி: ''சென்னை, மதுரை, கோவை, 'தினமலர்' பதிப்புகளில், ம.தி.மு.க.,வை கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி செய்திகள் வெளியிடுகின்றனர்,'' என, அக்கட்சியின் பொதுச் செயலர், வைகோ தெரிவித்தார்.நெல்லையில் நேற்று நடந்த, கட்சி பிரமுகர் இல்ல மண விழாவில், வைகோ பேசியதாவது:சில பத்திரிகைகளில், - தினமலர் தவிர - செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு, 'பேக்கேஜ்' முறை வைத்துள்ளனர்.நான், சமூக நீதிக்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தி வருகிறேன். 25 ஆண்டுகளாக, 'ஸ்டெர்லைட்' ஆலை தொடர்பாக, போராட்டம் நடத்தி வருகிறேன். மதுரை, 'தினமலர்' பதிப்பில், 'ம.தி.மு.க., கூடாரம் மூடப்படும்' என, செய்தி வெளியிடப்பட்டுள்ளது.ம.தி.மு.க., குறித்து இழிவாக, கொச்சையாக, கேவலமாக, எத்தனையோ முறை, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கார்ட்டூன்களும் வெளியிடப்படுகின்றன.'ம.தி.மு.க, மாவட்டச் செயலர்கள் மாற்று கட்சிக்கு செல்கின்றனர்; கட்சி தேய்கிறது' போன்ற யூக செய்திகள் வெளியிட்டாலும், 'ம.தி.மு.க., கூடாரம் மூடப்படும்' என செய்தி வெளியிடுவதால், அவர்களுக்கு என்ன லாபம்? நான் இதுபோன்ற விமர்சனங்களை சந்தித்தவன், பார்த்தவன்.தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதுபோன்ற செய்திகளால் தொண்டர்கள் மனம் என்ன பாடு படும்! அவர்களின் இல்லத்தில் என்ன நினைப்பர்!இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
13-பிப்-201913:35:35 IST Report Abuse
S.P. Barucha போலியோ சொட்டு மருந்தை அறிமுகப்படுத்தினீர்கள், பொடா சட்டத்தை போராடி நீக்கினீர்கள், ஆனாலும் கூட நட்பில் பெரிதும் பாதிக்கப்படுகிறீர்கள்
Rate this:
Share this comment
Cancel
prem - Madurai ,இந்தியா
12-பிப்-201913:53:18 IST Report Abuse
prem வைகோ சமீப காலங்களாக மிகவும் சிறுமைப்பட்டுப்போனார்.... எல்லாம் மதமாற்ற குள்ளநரிகள் செய்த வேலை .... இதனை பெரிய தலைவரையே தனது குடும்பத்தில் உள்ளவர்களை மதம் மாற்றுகிறார் என்றால் இப்படி சக்தியற்ற தலைவர் நாட்டில் இருந்து என்ன.... இல்லாவிட்டால் என்ன...
Rate this:
Share this comment
Cancel
rmr - chennai,இந்தியா
12-பிப்-201911:27:18 IST Report Abuse
rmr இவரால் யாருக்கும் நன்மை கிடையாது இவரால் இவருக்கும் இவர் குடும்பத்துக்கும் தான் நன்மை. தமிழ் தமிழ் என்று தமிழர்களை ஏமாத்தும் தெலுங்கன் இவர் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X