சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆன்மிக சுற்றுலா மோசடி

Added : பிப் 06, 2019
Advertisement

வடபழனி: ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வதாக, பணம் பெற்று மோசடி செய்த, 'டிராவல்ஸ்' நிறுவன மேலாளரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர், மேரிதாசன், 41. இவரும், இவரது ஊரைச் சேர்ந்த, 34 பேர், ஜெருசலேமிற்கு, ஆன்மிக சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக, வடபழனி, ஆற்காடு சாலை, தோசி கார்டனில் செயல்பட்டு வந்த, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினார்.இதில், விசா, விமான டிக்கெட் மற்றும் தங்குமிடம் உள்ளிட்டவைக்கு, நபர் ஒன்றுக்கு, 1.10 லட்சம் ரூபாய் செலவாகும் என, தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மேலாளர் கார்த்திகேயன் கூறி உள்ளார்.இதையடுத்து, 2018 டிசம்பரில், இணை வங்கி பரிவர்த்தனை மூலம், 20.50 லட்சம் ரூபாயை கட்டி உள்ளனர்.ஜன., 7ம் தேதி சுற்றுலா செல்ல ஏற்பாடுகளை செய்வதாக, டிராவல்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதையடுத்து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது, 'தர முடியாது' என, அந்நிறுவன ஊழியர்கள் மிரட்டி உள்ளனர்.இது குறித்த புகாரையடுத்து, வழக்கு பதிவு செய்த வடபழனி போலீசார், டிராவல்ஸ் நிறுவன மேலாளர், கார்த்திகேயனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X