சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே பெயரில் உள்ள இருவருக்கு ஒரே எண்ணில், 'பான் கார்டு'

Updated : பிப் 07, 2019 | Added : பிப் 06, 2019 | கருத்துகள் (11)
Advertisement
ஒரே பெயரில் உள்ள இருவருக்கு ஒரே எண்ணில், 'பான் கார்டு'

திருச்சி: திருச்சி அருகே, ஒரே பெயரில் உள்ள இருவருக்கு, ஒரே எண் கொண்ட, 'பான் கார்டு' வழங்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, லால்குடி அருகேயுள்ள, கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. தனியார் நிறுவன ஊழியரான இவர், வருமானவரித் துறையால் அளிக்கப்படும், பான் கார்டை, ஏழு ஆண்டுகளுக்கு முன் வாங்கினார். அதன் எண்: டி.ஒய்.ஆர்.பி.எஸ்.6164பி. இவர், சில மாதங்களுக்கு முன், வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். வங்கி நிர்வாகம், 'உங்கள் பெயரில் லோன் உள்ளது, நகை அடமான கடன் உள்ளது; 'செக் பவுன்ஸ்' ஆகியுள்ளது' என்ற காரணங்களை கூறி, கடன் மறுத்துள்ளது.

கடனே வாங்காத செந்தில்குமார், இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்ததில், இதே எண் கொண்ட பான் கார்டு, லால்குடி அருகேயுள்ள, வாளாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது தெரிந்தது. இருவரின் பெயர், அப்பா பெயர், பிறந்த தேதி ஒன்றாக உள்ளது. பான் கார்டு எண்ணும் ஒன்றாக இருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாளாடி செந்தில், லோன், நகை கடன் பெற்றுள்ளார். ஆனால், பான் கார்டு குளறுபடியால், கீரமங்கலம் செந்தில், லோன் வாங்கியது போலும், 'சிபில் ஸ்கோர்' குறைவாக இருப்பது போலவும், கம்ப்யூட்டர் காட்டியுள்ளது.

வருமானவரி துறையின் முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் பான் கார்டு, ஒரே பெயர், பிறந்த தேதி, அப்பா பெயர் இருந்தாலும், ஒரே எண்ணில் வந்துள்ளது, அதன் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.இது குறித்து, இரு செந்தில்குமாரும், வருமானவரி துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
08-பிப்-201912:58:34 IST Report Abuse
M.COM.N.K.K. கையொப்பம் ஒரே மாதிரி இல்லையே அதைவைத்தே தவறை சரிசெய்திருக்கலாமே. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தது தவறுதான்.தவறு தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பாத்துக்கோ
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-பிப்-201913:16:17 IST Report Abuse
Natarajan Ramanathan கோடிக்கணக்கான நபர்களுக்கு பான்கார்டு வழங்கும்போது இதுமாதிரி சில சிறு தவறுகள் நடப்பதில் என்ன அதிர்ச்சி? மேலும் இது நடந்தது தான்+கிராஸ் ஆட்சியில். எனது மைத்துனருக்கு இரண்டு பான்கார்டுகள் வந்தன. ஒன்றை திருப்பி அனுப்பினான். (அதுவும் பத்தாண்டுகளுக்கு முன்பு)
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-பிப்-201915:11:57 IST Report Abuse
தமிழ்வேல் புதிய கார்டு 2016 இல் வாங்கினேன். பெயரில் 3 தவறு இருந்தது. அதை காப்பி எடுத்து கேபிடல் லெட்டரில் சிகப்பு மையால் திருத்தி நேரில் கொண்டுபோய் கொடுத்துவந்தேன். 1 தவறு இன்னும் அப்படியே உள்ளது. அங்கு (கிண்டி) வேலை செய்பவர்கள் அனைவருமே 30 வயதிற்குள்ளான படித்த (?) இளைஞர்கள் ....
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
07-பிப்-201911:45:09 IST Report Abuse
J.Isaac ஆதார் EVM எல்லாம் இதே நிலைதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X