அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் அன்னிய முதலீடு
21 சதவீதம் குறைவு: ஸ்டாலின்

சென்னை : ''தமிழகத்தில், அன்னிய முதலீடு, 21 சதவீதம் சரிந்துள்ளது,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் பேசினார்.

தமிழகம்,அன்னிய முதலீடு,21 சதவீதம்,குறைவு,ஸ்டாலின்


சென்னையில், நேற்று நடந்த, தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழாவில், அவர் பேசியதாவது: வைதீக திருமணங்களை நடத்தி வைக்க, புரோகிதர்களுக்கு எப்படி, 'டிமாண்ட்' இருக்குமோ, அதேபோல, சுயமரியாதை

திருமணங்களை நடத்தி வைக்க, எங்களை போன்றவர்களுக்கு அதிக, டிமாண்ட் உள்ளது.

வைதீக திருமணங்கள் பற்றி, ஸ்டாலின் இப்படி பேசி விட்டாரே என, 'வாட்ஸ் ஆப்'பில் சித்தரித்து, ஜோடித்து அனுப்ப ஆரம்பித்து விடுவர். அதைப்பற்றி, நான் கவலைப்படவில்லை.

முதலீட்டாளர்கள் முதல் மாநாட்டை, ஜெயலலிதா எப்படி ஆடம்பரமாக செலவு செய்து நடத்தினாரோ, அதைவிட அதிக செலவு செய்து, வீண் விளம்பரம் செய்து, இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதல்வர், இ.பி.எஸ்., நடத்தினார்.

சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு எல்லாம், 'கோட் - சூட்' அணிவித்து,

Advertisement

கட்டாயப்படுத்தி வரவழைத்து உள்ளனர். வங்கிகளில் கடன் வாங்கி, நோட்டீஸ் பெற்ற கம்பெனிகளின் முதலாளிகளும், இதில் அடக்கம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

சட்டசபையை கூட்டட்டும்; ஆதாரத்துடன் சொல்ல நான் தயார். அன்னிய முதலீடு, தமிழகத்தில், 21 சதவீதம் குறைந்து விட்டது. இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
07-பிப்-201920:54:46 IST Report Abuse

Ganesan.Nஇந்து மதத்திற்கு எதிராக பேசுவது ஸ்டாலினுக்கு வாடிக்கையாகி விட்டது. இந்து மதத்தை விமர்சிக்கும் ஸ்டாலின் துணிச்சலாக மற்ற மதத்தின் மரபைப் பற்றி பேச தயங்குவது ஏன். இந்து மதத்தில் நம்பிக்கையுள்ள எவரும் தி.மு.க விற்கு வோட்டு போடக்கூடாது.

Rate this:
Devanand Louis - Bangalore,இந்தியா
07-பிப்-201917:38:54 IST Report Abuse

Devanand Louisஸ்டாலினுக்கு தெரிந்தவையெல்லாம் - ஊழல் ,கொலை கொள்ளைகள்தான் ,வேறென்ன தெரியும் மற்றவர்களை கன்னத்தில் அறையத்தெரியும் , வேறொன்றும் தெரியாத கொமெடியன் தான் ஸ்டாலின் பேசுவதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது

Rate this:
sankar - Nellai,இந்தியா
07-பிப்-201917:37:45 IST Report Abuse

sankarசுடலை எங்கு வந்தாலும் கறுப்புக்கொடி காட்டுங்கள்

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X