சபைக்கு வராத ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள்: கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு

Updated : பிப் 07, 2019 | Added : பிப் 07, 2019 | கருத்துகள் (17)
Advertisement
சபைக்கு வராத ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள்: கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு

பெங்களூரு, : கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில். அமைச்சர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று துவங்கிய, இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில், கவர்னர், வஜுபாய் வாலா உரையாற்றினார். கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை' எனக் கூறி, பா.ஜ., உறுப்பினர்கள், , தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் உரையை பாதியிலேயே, முடித்து விட்டார்.





இந்நிலையில் காங். கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்;எல்.ஏ.க்கள் 5 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் என 7 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணித்ததால் அவர்கள் மும்பை சென்றுவிட்டதாகவும், அங்கு சொகுசு ரிசார்ட் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை தவிர மேலும் 11 எம்.எல்.ஏ.,க்கள், சபைக்கு வரவில்லை; கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே சபைக்கு வராத எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பா.ஜ.வுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது, அரசுக்கு மேலும் குழப்பத்தையும், பரபரப்புயும் ஏற்படுத்திஉள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
08-பிப்-201904:51:15 IST Report Abuse
sumutha - chennai புகழ் சார் தங்களின் மேலான கவனத்திற்கு மட்டும். காங்கிரசின் முன்னாள் தலைவர் இந்திராகாந்தியின் மண்டையை மதுரையில் வைத்து உடைத்து வெளிவந்த ரத்தம் பற்றி கலைஞர் சொன்னதும் சட்டசபையில் வைத்து ஜெயலலிதாவை மாநபங்கப் படுத்தியதும் சிதம்பரம் உதயகுமாரின் மரணமும் அவரின் தந்தையே இவன் என் மகன் இல்லை என சொல்லவைத்ததும் தனது மந்திரிசபையில். பங்கேற்ற மதுரையை சேர்ந்த மந்திரி ஒருவருக்கு நடந்த மரணமும் சென்னையில் நடை பயிற்சி சென்ற பாலன் அவர்களின் படு கொலையும் பெரம்பலூர் சாதிக்பாட்சா அவர்களின் தற்கொலையும்? தினகரன் அலுவலகம் திமுகவின் அன்பு தொண்டர்களால் தாக்க பட்ட போது அங்கு பணியாற்றிய உயிரோடு எரித்து கொல்லப்பட்ட மூன்று அப்பாவி இளைஞர்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டதும் இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து கொண்டிருந்தபோது எழுந்து நிற்க முடியாத நிலையிலும் வீல் சேரில் அமர்ந்தவாறே டெல்லிக்கு விமானமேறி நேரில் போய் முக்கியமான அமைச்சர் பதவிகளை அடிக்காத குறையாய் பெற்றதும் அதன் மூலம் ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நம் தேசத்திற்கு வருமான இழப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் திமுகா வை துவக்கிய அண்ணா அவர்களின் வளர்ப்பு மகன் பரிமளம் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதும் அண்ணாவிற்கு பிறகு முதல்வர் பதவிக்கு வந்த கலைஞர் அவர்களின் குடும்பத்தார் உறவினர்கள் அனைவரும் அவர்கள் சாப்பாட்டிற்கு வழியின்றி ஒவ்வொரு வேளை உணவிற்கும் போராடி வருவதும் தமிழக மக்களால் மறக்க முடியாதது. இது உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஞாபகத்தில் வந்துள்ளதா? நான் கூறியவற்றை உங்களால் உள்ளத்தில் நேர்மை மட்டும் வைத்து மறுக்க முடியுமா? மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் நான் எழ்தியதை பல முறை மீண்டும் மீண்டும் படித்து பார்த்து விட்டு இனி புகழ் பாடுங்கள். இதை பொறுமையாக படித்ததர்க்கு புகழ் சாருக்கு நன்றி.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
07-பிப்-201920:56:56 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மானங்கெட்டவன் ஊருக்கு பெரியவன் என ஏன் சொன்னார்கள் பெரியோர் ..அதென்ன மத சார்பற்ற ஜனதா தளம் என்பது ஒருவகை தானே. யாரை ஏமாற்ற மதசார்பற்ற ஜனதா தளமா????எப்படி.அதில் உள்ளவர்கள் என்னமதம் ஏதேனும் ஓர் மதத்தை சேர்ந்தவராகத்தானே இருக்கனும் ...அட்டவணை வகுப்பு என்பது என்ன?
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
07-பிப்-201916:22:05 IST Report Abuse
M.COM.N.K.K. அரசியல் என்பது எப்போதும் பரபரப்பாகத்தான் இருக்கவேண்டும் அப்போதுதான் பொதுமக்களுக்கும் மீடியாக்களுக்கும் ஒரு கிளுகிளுப்பாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X