ராபர்ட் வாத்ராவை விசாரிக்கவும் மம்தா எதிர்ப்பு

Updated : பிப் 07, 2019 | Added : பிப் 07, 2019 | கருத்துகள் (112)
Advertisement

கோல்கட்டா : கோல்கட்டா போலீஸ் கமிஷனிடம் சிபிஐ விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது ராபர்ட் வாத்ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.






ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவிடம் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று (பிப்.,06) 5 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மம்தா, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்காகவே இது போன்று நடத்தப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன என்றார்.




சிட்பண்ட் ஊழல் வழக்கில் முறையாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனரிடம் விசாரிப்பதற்காக 3 நாட்களுக்கு முன் சென்ற சிபிஐ அதிகாரிகளை கோல்கட்டா போலீசார் சிறைபிடித்தனர். அத்துடன் கமிஷனிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக மம்தா தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாத்ராவிடம் விசாரிக்கவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பண மோசடி வழக்கில் பிப்.,16 வரை இடைக்கால ஜாமின் பெற்றுள்ள வாத்ராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
13-பிப்-201907:11:34 IST Report Abuse
Ramasami Venkatesan பார்த்தீர்களா ஒரு ஊழல் கட்சி மற்ற ஊழலுக்கு எப்படி வக்காலத்து வாங்குகிறது என்று. ஆனால் சொல்வதோ நாங்கள் மூன்றாவது அணி காங்கிரஸுடன் கூட்டு இல்லை. இதுதான் மூன்றாவது அணியின் லட்சணம். இவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் .................. ஜோதி பாசுவின் கம்யூனிஸ்ட் ஆட்சியே மேல்.
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
07-பிப்-201917:49:19 IST Report Abuse
SaiBaba நேத்து ஒரு பெங்காலியோட வெலாவாரியா பேசினேன். இந்தம்மா தன் தாயாரோட ஸ்லம் ல தான் இருக்காம். செக்யூரிட்டி போர்ஸ் எல்லாம் அங்க தான் இருக்காம். ஒரு வெள்ளை சேலையும் ஹவாய் சப்பலூம் போட்டுக்கிட்டு எங்கன்னாலும் போயிருமாம். இது பேர்ல ஒரு பணம் காசும் இல்லையாம்.
Rate this:
Share this comment
sivan - Palani,இந்தியா
13-பிப்-201919:37:49 IST Report Abuse
sivan மடியில் கனம் இல்லையே சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் பயப்பட வேண்டும்?...
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
07-பிப்-201917:25:53 IST Report Abuse
rajan.  மம்முவாகிய நான் பிரதமரானால் சட்டம் போட்டு இந்திய பிரஜைகள் எல்லோரும் சாரதா சிட் பண்டின் வாடிக்கையாளர் ஆக்கபடுவீர்கள் என எச்சரிக்கிறேன் குறிப்பாக சிபிஐ இங்கு தலையிட அனுமதியில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X