பொது செய்தி

இந்தியா

கோல்கட்டா கமிஷனரை விசாரிக்க தயாராகும் சிபிஐ

Updated : பிப் 07, 2019 | Added : பிப் 07, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ தயாராகி வருகிறது.





கடந்த வாரம் கோல்கட்டா போலீசாரால் சிறைபிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் சில்லாங்கில் இருந்து டில்லி திரும்பி உள்ளனர். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் நாளை (பிப்.,08) முதல் ராஜீவ் குமாரிடம் விசாரணையை துவக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. விசாரணைக்கு தயாராவதற்காக ராஜீவ் குமாருக்கு 2 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜீவ் குமாரிடம் 80 முதல் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. கேள்விகள் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வைத்துள்ளது.




தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி பிப்.,28 க்குள் ராஜீவ் குமார், போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட வேண்டும். லோக்சபா தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதால் பிப்.,15 துவங்கி 20 ம் தேதிக்குள் அதிகாரிகள் இடமாற்ற பணிகளை முடிக்க வேண்டும் என முதல்வர் மம்தா ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார். அத்துடன் மேற்குவங்க அரசுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கு பிப்.,20 ல் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இது போன்ற பல்வேறு காரணங்களால் ராஜீவ் குமாரிடம் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் சிபிஐ.,க்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
07-பிப்-201921:02:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN களி தின்ன வையுங்கள் புத்தி வரட்டும் .என்னையா இது வேடிக்கை பள்ளிக்கூடத்தில் ஆசிரியரை மாணவன் கத்தியால் ......மிரட்டுவதுபோன்ற வன்முறை இதுவா நேர்மையாளனுக்கு அழகு.............மம்தா வருவார் ஜாமீன் எடுக்க...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-பிப்-201916:19:21 IST Report Abuse
Indhuindian அவர் எப்படி யூனிபாம்லயே வருவாரா? அதுக்கு முன்னாடியே அவருக்கு குடுத்த மெடலையெல்லாம் பிடிங்கிடுங்க.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
07-பிப்-201913:22:44 IST Report Abuse
 N.Purushothaman தீர்ப்பு எங்களுக்கு தான் சாதகமாக வந்துள்ளது என்று மமதை பேகமே கூறி விட்டார் ...இதில் இருந்தே கமிஷனர் நல்லவர் என்பது தெளிவாகிவிட்டது ...நல்லவரை சி.பி.ஐ விசாரிக்க சட்டத்தில் இடம் இல்லை என்பது கூடவா சி.பி.ஐ க்கு தெரியவில்லை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X