வருமான வரித்தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்

Updated : பிப் 07, 2019 | Added : பிப் 07, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி : வருமான வரித்தாக்கல் செய்வதற்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரேயா சென் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் ஆதார் - பான் இணைக்காமல் 2018 - 19 ம் ஆண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்ய டில்லி ஐகோர்ட் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து மேலும் சிலர் தங்களுக்கும் பான் - ஆதார் இணைப்பில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் டில்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று (பிப்.,06) நீதிபதிகள் சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இருப்பினும் வருமான வரித்தாக்கல் சட்ட பிரிவு 139ஏஏ.,வின்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
07-பிப்-201919:10:20 IST Report Abuse
Raghuraman Narayanan Brilliant move towards arresting black money. All those who have more than one PAN card and maintain dubious accounts will have trouble soon. So, we can expect next counter move by black money holders. Along with this move Government should tighten Binami Act as well. Then those who play with black money will have to dance and cry foul.
Rate this:
Share this comment
Cancel
hasan - Chennai,இந்தியா
07-பிப்-201917:49:10 IST Report Abuse
hasan ஓட்டு போட ஆதார் கட்டாயம் என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் அதையும் கட்டாயமாக்குங்கள் கனம் பொருந்திய நீதிபதிகளே
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
07-பிப்-201913:02:27 IST Report Abuse
uthappa இது தவறு என்று மம்தா போராட்டம் நடத்துவார், கனி மொழி, ராகுல், நாயுடு கலத்து கொள்வார்கள்.இங்கே போராளிகள் மாபெரும் போராட்டம் நடத்துவார்கள்.ஜாலி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X