அப்ரூவராக மாற இந்திராணி விருப்பம்: சிதம்பரம் குடும்பத்திற்கு சிக்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அப்ரூவராக மாற இந்திராணி விருப்பம்: சிதம்பரம் குடும்பத்திற்கு சிக்கல்

Updated : பிப் 07, 2019 | Added : பிப் 07, 2019 | கருத்துகள் (100)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அந்நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கில் வலுத்துள்ளது.



ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக வெளிநாடு முதலீடுகள் பெறப்பட்டதாக 2007 ம் ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ, எப்ஐஆர் பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றவாளிகளாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணியும், அவரது கணவர் பீட்டரும் கைது செய்யப்பட்டனர்.



மகளை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று, மும்பை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணியிடம் தொடர்ந்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் போது, முறைகேடாக வெளிநாடு முதலீடுகளை பெற்று தர கார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.10 லட்சம் கேட்டதாக இந்திராணி கூறி இருந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகிறது.



இதற்கிடையில் சிறையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அப்ரூவராக விரும்புவதாகவும் இந்திராணி கூறி டில்லி கோர்டுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து பிப் 7 (இன்று) இந்திராணியை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த டில்லி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்திராணி இன்று ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.



ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஏற்கனவே முன்ஜாமின் பெற்றுள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் இந்திராணி அப்ரூவராக மாறும்பட்சத்தில் பல உண்மைகள் வெளியில் வர வாய்ப்புள்ளது. இது ப.சிதம்பரம் குடும்த்தினருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201914:25:37 IST Report Abuse
Bhaskaran இந்த அம்மா தடுக்கில் போனால் அவர் கோலத்தில் போவார் அவருக்குத் தெரியாத சட்டத்தின் நெளிவு சுளிவுகளா கடைசியில் ஒருமண்ணும் நடக்கப்போவதில்லை இளிச்சவாயன் நடுத்தரமக்கள்தான்
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
12-பிப்-201910:43:32 IST Report Abuse
hasan குறுகிய காலத்தில் பி ஜே பி காரர்களும் ஜாமீனுக்கு கோர்ட்க்கு அலையும் காலம் வராமல் போகாது
Rate this:
Share this comment
Kanthi - Dallas,யூ.எஸ்.ஏ
12-பிப்-201918:25:48 IST Report Abuse
Kanthi சாபம் கொடுத்துட்டாராம் ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ...
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
08-பிப்-201902:58:29 IST Report Abuse
Indhiyan காங்கிரெஸ்க்காரன்னாலே , ஊழல் நாத்தம் தாங்க முடியல்லே . தோலை உரிச்சு காட்டி ஓட்டி விடுங்கப்பா. காமராஜரை தவிர 60 வருடங்கள் நாட்டை நாசமாக்கி விட்டார்கள். காந்தி இருந்திருந்தால் கோட்ஸே தேவையில்லை. இன்றைய காங்கிரஸ் நிலையை கண்டு அவரே போயிருப்பார். இத்தனைக்கும் பசி உள்துறை அமைச்சராய் இருந்தார். அவர் குடும்பத்திலேயே துளி கூட நாட்டுப்பற்று இல்லை. பாக்கி காங்கிரஸ்காரர்களை கேட்க வேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X