பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி இணை செயல்பாடுகளுக்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவு

Added : பிப் 08, 2019
Advertisement

கோவை,:அகமதிப்பீட்டு தேர்வுக்கான, 10 மதிப்பெண்களை, வருகைப்பதிவு, களப்பயணம், கல்வி இணை செயல்பாடுகளுக்கு, பிரித்தளிக்குமாறு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறை அல்லாத பாடங்களில், 10 மதிப்பெண்கள், அகமதிப்பீட்டு தேர்வுக்கு வழங்கப்படுகிறது.வருகைப்பதிவு முதற்கொண்டு, பள்ளி செயல்பாடுகளில், மாணவர்கள் காட்டும் ஆர்வத்தை பொறுத்து, மதிப்பெண்கள் பிரித்தளிக்கப்பட்டுள்ளன.இது குறித்த சுற்றறிக்கையை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். அதை பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பெண் வழங்க அறிவுறுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.சுற்றறிக்கை விபரம்சுற்றறிக்கையில், அகமதிப்பீட்டு தேர்வுக்கான 10 மதிப்பெண்களில், வருகைப்பதிவுக்கு இரு மதிப்பெண்கள், களப்பயணத்துக்கு இரு மதிப்பெண்கள், வகுப்பு தேர்வுக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.மீதமுள்ள இரு மதிப்பெண்களை, கல்வி இணை செயல்பாடுகளாக கருதப்படும், செஞ்சிலுவை, பசுமைப்படை, சாரணர் இயக்கம் உள்ளிட்ட சங்கங்கள், இலக்கிய மன்ற நிகழ்வுகள், விளையாட்டுக்கென பிரித்தளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு, 25 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், வருகைப்பதிவு மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்கு அதிகபட்சம், 5 மதிப்பெண் வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இம்முறைப்படி மதிப்பெண் வழங்குவதை, ஆய்வு செய்து உறுதி செய்யுமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X