பொது செய்தி

தமிழ்நாடு

மளிகை கடைக்காரர் உடல் உறுப்பு தானம்; ஆறு பேருக்கு மறுவாழ்வு

Added : பிப் 08, 2019 | கருத்துகள் (9)
Advertisement
மளிகை கடைக்காரர் உடல் உறுப்பு தானம்;  ஆறு பேருக்கு மறுவாழ்வு

மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் திண்டுக்கல் மளிகை கடைகாரர் காமராஜ் 43, வழங்கிய உடல் உறுப்பு தானத்தால் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

திண்டுக்கல்ஆத்துார் சித்தையன்கோட்டை காமராஜ். இவர் பிப்.,4 காலை மளிகை பொருட்களுடன் டூவீலரில் சென்றார். செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய்ரோட்டில் பின்னால் சென்ற மற்றொரு டூவீலர் காமராஜ் மீது மோதியது. தடுமாறி கீழே விழுந்ததில் காமராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிப்.,6 மூளைச்சாவு அடைந்தார். இருதயம், சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இயங்கின.

மனைவி இந்திராவிடம் உறுப்பு மாற்று தானம் குறித்து மருத்துவ குழுவினர் கூறினர். உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு பொருத்தி மறு வாழ்வு கொடுக்கலாம் என்ற யோசனையை ஏற்றார். ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் ஒரு சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வேறு வேறு நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசுமருத்துவமனைக்கும், இருதயம் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
09-பிப்-201906:32:27 IST Report Abuse
Chanemougam Ramachandirane .உடல் உறுப்பு தானம் கொடுக்க முன் வந்த குடும்பத்திற்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் இந்த மீளா துயரத்திலும் முன் வந்து கொடுத்தது அவர்களின் மனிதாபம் ஆன செயலை வரவேற்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
08-பிப்-201910:18:02 IST Report Abuse
raghavan இவர் செய்ததோ தானம். மிகவும் நல்ல செயல்தான். ஆனால், தனியார் மருத்துவமனைகள் அதை வைத்து நல்ல வியாபாரம் செய்து இருக்கும். இந்த கொடுமைகளை யார் தடுப்பது. உறுப்பு மாற்று சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Srinivasan Indumathi - chennai city,இந்தியா
08-பிப்-201914:28:27 IST Report Abuse
Srinivasan Indumathiஎஸ் i also wish to donate my body organs only to good heart poor people. i do not know whom to contact for that?...
Rate this:
Share this comment
raghavan - Srirangam, Trichy,இந்தியா
08-பிப்-201917:48:15 IST Report Abuse
raghavanMadam, you can visit here - s://www.notto.gov.in/ . Toll Free No.1800114770...
Rate this:
Share this comment
Cancel
08-பிப்-201909:10:44 IST Report Abuse
ருத்ரா மளிகை கடைக்காரரின் மாளிகை மனம். வாழ்த்துக்கள் ஐயா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X