பொது செய்தி

தமிழ்நாடு

நீண்ட நாட்களுக்கு பின் தமிழகத்திற்கு மத்திய அனல், அணு மின்சாரம்

Added : பிப் 08, 2019
Advertisement

நீண்ட நாட்களுக்கு பின், மத்திய மின் நிலையங்களில் இருந்து, தமிழகத்திற்கு, 5,000 மெகா வாட்டிற்கு மேல், மின்சாரம் வழங்கப்படுகிறது.க்ஷ

பொதுத்துறையை சேர்ந்த, தேசிய அனல் மின் கழகம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்திய அணுமின் கழகம் ஆகிய நிறுவனங்களுக்கு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில், அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் இருந்து, தமிழகத்திற்கு, தினமும், 6,138 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மத்திய மின் நிலையங்களில் உள்ள அலகுகளில், பழுது, பராமரிப்பு, நிலக்கரி தட்டுப்பாடு உள்ளிட்ட ஏதேனும் ஒரு காரணத்தால், அடிக்கடி, மின் உற்பத்தி பாதிக்கிறது.இதனால், தமிழகத்திற்கு, 4,500 மெகா வாட் வரையில் மட்டுமே, மின்சாரம் கிடைக்கிறது. மின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ள மின்சாரத்தை முழுவதுமாக வழங்குமாறு, மின் வாரியம், மத்திய மின் துறை அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின், மத்திய தொகுப்பில் இருந்து, நேற்று, தமிழகத்திற்கு, 5,160 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டது. இதே அளவிற்கு, தொடர்ந்து கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X