மனைவியை கூறு போட்டதை நடித்துக் காட்டிய கொடூரன் தலை, உடல் பாகங்களை தொடர்ந்து தேடும் போலீசார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை கூறு போட்டதை நடித்துக் காட்டிய கொடூரன் தலை, உடல் பாகங்களை தொடர்ந்து தேடும் போலீசார்

Added : பிப் 08, 2019 | கருத்துகள் (7)
Advertisement
 மனைவியை கூறு போட்டதை நடித்துக் காட்டிய கொடூரன்  தலை, உடல் பாகங்களை தொடர்ந்து தேடும் போலீசார்

சென்னை:நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, மனைவியை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசியவர் கொலை செய்த விதம் குறித்து போலீசாரிடம் நடித்துக் காட்டினார்.

பெருங்குடி குப்பை கிடங்கில் இருந்து ஜன. 21ம் தேதி பெண்ணின் வெட்டப்பட்ட கை கால்களை மீட்ட பள்ளிக்கரணை போலீசார் அந்த உடல் உறுப்புகளுக்கு சொந்தமான பெண்ணை கண்டறிய இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடினர்.

பல்வேறு முயற்சிகளில் தோல்வி கண்ட நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இந்நிலையில் கன்னியாக்குமரியைச் சேர்ந்த ஒரு பெண் போலீசாரை தொடர்பு கொண்டார்.'சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய என் மகள் சந்தியாவின் அலைபேசி ஜன.18ல் இருந்து 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் அவரது கணவர் பாலகிருஷ்ணனுக்கும் சந்தியாவுக்கும் பிரச்னை உள்ளது.

எனது மகள் என்ன ஆனாள் என்றே தெரியவில்லை' என தெரிவித்தார். இந்த கொலையில் துருப்பு சீட்டாக கிடைத்த இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசாருக்கு சந்தியாவின் கணவரான துாத்துக்குடி டுவிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 51 குறித்து முழு தகவல்கள் கிடைத்தன.

சென்னை ஜாபர்கான்பேட்டை காந்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரித்தபோது மனைவியை கொலை செய்து உடல் உறுப்புகளை அறுத்து குப்பை தொட்டிகளில் வீசிய தகவல் கிடைத்தது.

மேலும் குப்பை கிடங்கில் மீட்கப்பட்ட உடல் உறுப்புகளில் சிவன் பார்வதி உருவம் பச்சை குத்தப்பட்டிருந்தது. 'டிராகன்' டாட்டூ ஆகியவற்றை கொண்டு கொலையானது சந்தியா என்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் நேற்று மதியம் ஆலந்துார் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஸ்டார்லி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்திரேட் விசாரணையில் 'நான் திட்டமிட்டு கொலை செய்யவில்லை; இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து தாக்கியதில் சந்தியா இறந்துவிட்டாள்' என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதையடுத்து பாலகிருஷ்ணனை பிப். 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும் படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் குவிந்த நிலையில் 'நான் கொலை செய்யவில்லை' என்று கூறியபடி பாலகிருஷ்ணன் சென்றார்.


நடித்து காட்டினார்

சந்தியாவை கொலை செய்த விதம் குறித்து ஜாபர்கான்பேட்டை வீட்டில் பாலகிருஷ்ணன் நடித்து காட்டினார்.அப்போது இருவருக்கும் என்ன வாக்குவாதம் ஏற்பட்டது; சந்தியாவை சுத்தியலால் தாக்கியது எப்படி; கொலை நடந்த மறுநாள் கத்தி மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் உடலை கூறுபோட்டு சாக்கு மூட்டையில் கட்டியது குறித்து பாலகிருஷ்ணன் நடித்துக் காட்டினார்

அவர்கொடுத்த தகவல்களின் படி சந்தியா உடலை அறுப்பதற்காக கத்தி இயந்திரங்கள் வாங்கிய கடைகளில் போலீசார் விசாரணை நடத்தினர். பின் உடல் உறுப்புகளை மூட்டையாக கட்டி வீசிய இடத்தையும் அடையாளம் காட்டினார்.


காரணம் என்ன

சினிமா மோகத்தில் இருந்த சந்தியா தன்னை எப்போதும் அழகுபடுத்திக் கொண்டிருப்பார். சந்தியாவை விட பாலகிருஷ்ணன் 16வயது மூத்தவர். இதனால் இளமையாக காணப்படும் மனைவி மீது அவருக்கு எப்போதும் சந்தேகப்பார்வை இருந்தது.துாத்துக்குடி டூவிபுரம் பகுதி பா.ம.க. மாவட்ட செயலாளராக இருந்த பாலகிருஷ்ணன் 2006ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் துாத்துக்குடி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு சந்தியாவை நிறுத்தினார்.

பிரசாரத்திற்கு சந்தியா சென்றபோது தனது மொபைல் போன் எண்ணை பலரிடம் கொடுத்திருந்தார். அதன் மூலம் ஏராளமான ஆண் நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டது.அந்த பழக்கத்தின் அடிப்படையிலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். மேலும் சென்னையில் தங்கி சினிமா வாய்ப்பு தேடியபோது சென்னையிலும் ஆண் நண்பர்களின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்களுடன் நள்ளிரவு வரை வெளியில் சுற்றுவது உடலில் 'டாட்டு' வரைந்து கொள்வது என இருந்துள்ளார்.இந்நிலையில் கணவருடன் தகராறில் ஈடுபட்ட சந்தியா ஒரு கட்டத்தில் பாலகிருஷ்ணனை பிரிந்து சைதாப்பேட்டையில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.அப்போது ஒரு தொழில் அதிபருடன் சந்தியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாலகிருஷ்ணன் சந்தியாவை பலமுறை எச்சரித்துள்ளார்.

அது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு நடந்துள்ளது. சந்தியா விவாகரத்து பெறும் முயற்சியில் ஈடுபட்ட போது அவரை கொலை செய்ய வேண்டும் என பாலகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.அதன் படியே இந்த கொலை நடந்ததாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தேடல் தொடர்கிறது

சந்தியாவின் இரண்டு கால்கள் கை தொடை பகுதிகள் கிடைத்துள்ள நிலையில் இடது கையுடன் சேர்ந்த உடல் தலை ஆகியவை போலீசாருக்கு கிடைக்கவில்லை.இதையடுத்து நேற்று அதிகாலை முதல் பெருங்குடி குப்பை கிடங்கில் 'பொக்லைன்' இயந்திரங்கள் உதவியுடன் சந்தியாவின் மற்ற பாகங்களை போலீசார் பல மணிநேரம் தேடினர்.மேலும் ஜாபர்கான்பேட்டை பகுதியில் செல்லும் அடையாறு கரையோரம் முதல் சைதாப்பேட்டை வரை பல பகுதிகளிலும் போலீசார் சந்தியாவின் உடல் உறுப்புகளை தேடினர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Kumar - Chennai,இந்தியா
12-பிப்-201914:38:39 IST Report Abuse
Vasanth Kumar இதில் யார் மீது தவறு என்றல் அந்த பெண்ணின் மீது தான் ஏன்னா புருஷன் இருக்கும் போதே பலரோட பழக்கம் வச்சிக்கிட்டு இருந்தா இந்த கதி தான் .எந்த புருசனும் தன் பொண்டாட்டி பத்தினியா இருக்கணும்னு தான் ஆசைப்படுவான்
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Palakkarai,இந்தியா
12-பிப்-201910:56:06 IST Report Abuse
S.prakash கொலை செய்யப்பட்ட விதத்தை வைத்து ,ஜாமீன் இல்லாமல் விசாரணை செய்து ஒவ்வொரு துண்டிற்கும் ஐம்பது வருட கடுங்கவல் தண்டனை வழங்க வேண்டும். நீதிபதிகள், அதிகாரிகள், அரசியல் வாதிகள் இவ்வாறு பாதிக்க படும்போதுதான், வீரியம் புரியும். சிறைச்சாலை நரகமானால், சமூகம் சொர்க்கமாகும். அதுவரை நாடு சீரழியும்.
Rate this:
Share this comment
Cancel
Thulasingam Jayaram Pillai - Chennai,இந்தியா
12-பிப்-201905:39:12 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai அவரவரின் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவர்களுக்கே உரியது. நடத்தை பிடிக்கவில்லையெனில், விவாகரத்து மட்டுமே முடிவெனக் கொள்ள வேண்டும். அது கணவனாகவே இருந்தாலும் கொலை குற்றமே, தகுந்த தண்டனை அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X