பெட்ரோல் பங்க்குகள் துவக்கம் அறிவிப்பிற்கு எதிராக வழக்கு

Added : பிப் 08, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மதுரை:இந்தியாவில் புதிதாக 65 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளை துவக்கும் அறிவிப்பிற்கு எதிராக தாக்கலான வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு:இந்தியாவில் 56 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. மேலும் 65 ஆயிரம் பெட்ரோல் சில்லரை விற்பனை பங்க்குகளை துவக்க எண்ணெய் நிறுவனங்கள் 2018 நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டன.

விதிகள்படி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை பெற்ற பின் அறிவிப்பு வெளியிட வேண்டும். அந்நடைமுறை பின்பற்றப்படவில்லை. சுற்றுச் சூழலை பாதுகாக்க படிப்படியாக இயற்கை எரிவாயு மூலம் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என 1991ல் மத்திய அரசு அறிவித்தது. உலக பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இந்தியா பங்கேற்றது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மூலம் அதிகளவில் வாகனங்கள் இயக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. புதிதாக 65 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகள் துவக்கும் அறிவிப்பானது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமையும். அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அய்யாக்கண்ணு குறிப்பிட்டார். நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
08-பிப்-201909:03:04 IST Report Abuse
Subramanian Sundararaman These petrol stations can be converted as gas stations as per the demand . Extraction of shale gas is opposed by farmers already.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
08-பிப்-201908:57:56 IST Report Abuse
Subramanian Sundararaman The fuel consumption is proportional to the number of vehicles and the distance they travel and not dependent on the number of fuel stations. For the national carriers it will be convenient to have fuel stations at shorter intervals. The move will also generate employment opportunities. It is surprising that how lawyer Ayyakkannu has inferred that the number of fuel stations will increase pollution.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
08-பிப்-201915:50:28 IST Report Abuse
DarmavanGovt should control production of automobiles to control pollution...This type of increase do not indicate development but destruction ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X