அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதவாக்கரை பட்ஜெட்: ஸ்டாலின் கருத்து

Updated : பிப் 08, 2019 | Added : பிப் 08, 2019 | கருத்துகள் (85)
Share
Advertisement

சென்னை: தமிழக பட்ஜெட், ஏழை எளிய மக்கள் எந்த வகையிலும் பயன்பெற முடியாத உதவாக்கரை பட்ஜெட் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

பட்ஜெட் தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சங்கீத வித்துவான் பாடுவது போல திரும்ப திரும்ப சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார். ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்பெற முடியாத உதவாக்கரை பட்ஜெட். செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்துவதைத் தான் இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது. குறிப்பாக தமிழகம் போராட்ட களமாக விளங்கி கொண்டுள்ளது.



latest tamil news




அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொடர்ந்து போராடும் சூழ்நிலை உருவாகி அதன் மீது அரசு கடுமையான நடவடிக்கை எல்லாம் எடுத்து பலரை சஸ்பெண்ட் செய்து உள்ளனர். அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், 2 குழுக்கள் அமைத்தது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அவற்றை எப்படி நிறைவேற்ற போகிறது என்பது பட்ஜெட்டில் தெரிவிக்கப்படாதது ஏமாற்றம். வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான எந்த அறவிப்பும் வெளியிடப்படவில்லை.


latest tamil news



4 லட்சம் கோடி கடன், உள்ள நிலையில், வருவாயை பெருக்க எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. மாநில அரசின் கடன், வருவாய் பற்றாக்குறை அதிகமாகி , நிதிமேலாண்மை மோசமாகும் நிலயில் பட்ஜெட் அமைந்துள்ளது. 110 விதியை பயன்படுத்தி அறிவிப்பு வெளியிட்டார்களோ, அதேபோல், ஏட்டு சுரைக்காயாக இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு விளம்பரத்திற்கு செய்துவிட்டு, அதனை செலவு செய்யாமல், பொருளாதார தோல்வி அடைந்துள்ளது.

பட்ஜெட்டில் விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை. நெல் கொள்முதலுக்கு குறைந்த விலை உள்ளது. கரும்பு ஆதார விலையை உயர்த்தவில்லை. பட்ஜெட், திவாலான கம்பெனி போல் உள்ளது. கொடநாட்டில் எப்படி கொள்ளையடித்தார்களோ தமிழகத்தில் அப்படி கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SakthiBahrain - Manama,பஹ்ரைன்
09-பிப்-201911:33:06 IST Report Abuse
SakthiBahrain இதுவே ஒரு உதவாக்கரை ...இது பொய்.... தமிழ் நாட்டையே பாதி தின்னு கடன்காரண ஆக்கினது உங்க உடும்பத்தான்
Rate this:
Share this comment
Cancel
sri -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201923:36:08 IST Report Abuse
sri இவரே ஒரு உதவாக்கரை
Rate this:
Share this comment
Cancel
vel -  ( Posted via: Dinamalar Android App )
08-பிப்-201923:35:32 IST Report Abuse
vel இவரே ஒரு உதவாக்கரை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X