ராகுல் அருகே பிரியங்காவுக்கு இருக்கை ஒதுக்காதது ஏன்?

Updated : பிப் 08, 2019 | Added : பிப் 08, 2019 | கருத்துகள் (28)
Advertisement

புதுடில்லி : காங்., பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு பிரியங்கா கலந்து கொண்ட காங்., கமிட்டி கூட்டத்தில் அவருக்கு, கட்சி தலைவரும் சகோதரருமான ராகுல் அருகே இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதற்கு அரசியல் வட்டாரத்தில் புது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.






முறைப்படி அரசியலில் நுழைவதாக அறிவித்த பிரியங்காவிற்கு ஜன.,23 ல் உ.பி., கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சி பொறுப்பேற்ற பிறகு நேற்று (பிப்.,7) நடந்த கட்சியின் முதல் கூட்டத்தில் பிரியங்கா கலந்து கொண்டார். கட்சி தலைவர் ராகுல் தலைமையில் நடந்த கூட்டத்தில், பிரியங்காவிற்கு ராகுல் அருகில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. பக்கவாட்டில், உ.பி., மேற்கு மண்டல பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதிராதித்ய சிந்தியா அருகில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. இது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.




உ.பி.,யில் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் 44 தொகுதிகளை பிரியங்காவும், மற்றவற்றை ஜோதிராதித்ய சிந்தியாவும் கவனித்துக் கொள்ள உள்ளனர். இவர்கள் இருவரும், பிப்., 11 ம் தேதி ராகுல் பிரசாரத்தை துவங்கி வைத்த பிறகு, பிரசாரம் செய்ய உள்ளனர். அதன் பிறகு லக்னோவில் 3 நாட்கள் தங்கும் பிரியங்கா, அங்கு அலுவலகம் அமைத்து, உள்ளூர் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அலகாபாத் உள்ளிட்ட நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்யவும் பிரியங்கா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.




சமீபத்தில் காங் தலைமை அலுவலகத்தில் ராகுல் அறைக்கு அருகில், அவர் துணை தலைவராக இருந்த போது பயன்படுத்திய அறை, பிரியங்காவிற்கு ஒதுக்கப்பட்டது. இது கட்சிக்குள் விரிசல் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியதை உணர்ந்த கட்சி தலைமை, பிரியங்காவிற்கு ஒதுக்கிய அறையில் ஒரு பகுதியை ஜோதிராத்ய சிந்தியாவிற்கும் ஒதுக்கியது.
கட்சியில் மற்ற பொதுச்செயலாளர்களுக்கு என்ன நிலை உள்ளதோ, அதையே பிரியங்காவிற்கும் கடைபிடிக்க வேண்டும் எனவும், அவருக்கு கட்சியில் சிறப்பு அந்தஸ்து ஏதும் வழங்கப்படவில்லை என்ற எண்ணம் கட்சியினருக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சி கூட்டத்தில் ராகுல் அருகே இருக்கை ஒதுக்காமல், பிரியங்கா மற்ற பொதுசெயலாளர்களுடன் அமர வைக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் காரணம் இது தான் என கூறப்படுகிறது.




Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
09-பிப்-201917:12:39 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பிராடும் பிராடும் கொள்ளை அடிச்சால் காங்கிரஸ் என்று அருத்தம் என்ன செய்ரது அண்ணா அவன் வாய்திறந்தால் புளுகென்று தங்கைக்கு நன்னாவே தெரியும் புருசனும் பிராடு அம்மாவும் பிராடு அண்ணனோ பஃராடுகம் புழுகுண்ணி என்பது நாடே அறிஞ்ச விஷயம் உண்மைக்கு அர்த்தமே தெரியாத குடும்பமாச்சுதே கண்ராவிகளா டெபாசிட்டைக்கூட கிடைக்காமல் தொக்கவேண்டும் இந்த பிராட்டுக்கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
09-பிப்-201904:19:48 IST Report Abuse
Chakkaravarthi Sk என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி தெரியட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
08-பிப்-201923:03:47 IST Report Abuse
R. Vidya Sagar சே. . . காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகம் எவ்வளவு நன்றாக இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X