வேகமாக உருகும் இமயத்தின் பனி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வேகமாக உருகும் இமயத்தின் பனி!

Added : பிப் 08, 2019 | கருத்துகள் (1)
Advertisement
வேகமாக உருகும் இமயத்தின் பனி!

பூமி வெப்பமயமாதல், துருவப் பகுதிகளை மட்டுமல்ல, இமயமலைத் தொடரையும் உருக்கி வருகிறது.
தற்போது உள்ளபடியே வளிமண்டல வெப்பம் தொடர்ந்தால், அடுத்த, 80 ஆண்டுகளில், இமயமலையை போர்த்தியிருக்கும் பனி படலத்தில், 36 சதவீதம் உருகி, பள்ளத்தாக்குகளை நோக்கி நீராய் ஓடிவிடும் என, வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
உலகில் உள்ள மொத்த பனிப் பாறைகளில், மூன்றில் ஒரு பங்கு, இமாலய பகுதியில் தான் உள்ளன.
இந்தியா உட்பட பல நாடுகளைக் கொண்ட வல்லுனர் குழு அண்மையில், 'ஹிந்து குஷ்-ஹிமாலய மலைத்தொடர் மதிப்பீடு' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் தொழில்புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையிலிருந்து, 1.5 டிகிரி செல்ஷியஸ் உயர் வெப்பநிலையை தக்கவைத்துக் கொண்டாலே, இமய மலையின் பனிப் பாறைகளில் கணிசமானவை உருகிவிடும் என, கவலை தெரிவித்து உள்ளது.
இதனால், அப்பகுதியில் வாழும், 25 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்ட, சுற்றுச்சூழல் சார்ந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், வல்லுனர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-பிப்-201900:12:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மோடிக்கு "ஐநாவின் சுற்று சூழல் விருது" வழங்கப்பட்டதாம்.. ஆனால் இமயமலை உருகவைக்கும் அளவுக்கு நிலக்கரி பயன்பாடு. குறைக்கமாட்டோமென்று இதே மோசடி அரசாங்கம் சுற்றுசூழல் பேச்சுக்களில் முரண்டு பிடிக்கிறது. ஆனால் விருதை மட்டும் காசு கொடுத்தாவது வாங்கி விடுகிறார்கள். ஊழலை ஐநாவுக்கும், உலகவங்கிக்கும் கொண்டு சென்று சேர்த்து விட்டார்கள் இந்திய ஊழல் வியாதிகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X