'யானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்த வேண்டும்'

Updated : பிப் 08, 2019 | Added : பிப் 08, 2019 | கருத்துகள் (34)
Advertisement
mayawati,elephant statue,மாயாவதி,உச்ச நீதிமன்றம்,யானை சிலை

புதுடில்லி: 'உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை சிலைகளை பெருமளவில் நிறுவினார். இதற்காக, அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்ய, அதற்கான செலவுத் தொகையை, செலுத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.




கடந்த, 2008ல், உ.பி., மாநில முதல்வராக பதவி வகித்த, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில், பகுஜன் சமாஜ் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவத்தை சிலைகளாக வடிக்கச் செய்து, நிறுவினார்.


இழப்பு:

இதற்கு, பல நுாறு கோடி ரூபாய் செலவானது. இதை எதிர்த்து, 2009ல், வழக்கறிஞர் ரவிகாந்த், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பின், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், இன்று(பிப்.,08) விசாரணைக்கு வந்தது.





மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதாவது: இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக காலம் ஆகும் என்பதால், தற்காலிக கருத்தை தெரிவிக்கிறோம். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவ சிலைகளை பெருமளவில் நிறுவியதால், மாநில அரசுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.


இறுதி தீர்ப்பு:




இதை ஈடு செய்ய, சிலைகள் நிறுவியதற்கான செலவு தொகையை, மாயாவதி, அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த வழக்கு, ஏப்., 2ல் மீண்டும் விசாரிக்கப் படும். அப்போது, விசாரணைக்கு பின், இறுதி தீர்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbiah.N - Karaikudi.,இந்தியா
09-பிப்-201919:23:49 IST Report Abuse
Subbiah.N மக்கள் நலன் அல்லாத செலவுகள் எதுவாக இருந்தாலும் அதை ஆளும் கட்சி தன சொந்த கட்சியின் மூலம்தான் செய்யவேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
A R J U N - sennai ,யூ.எஸ்.ஏ
09-பிப்-201911:06:06 IST Report Abuse
A R J U N உ பி பெரிய மாநிலம் அதில் தொண்ணூறு சதவீத இடத்தில யானைகளை வைத்திருக்கிறது இந்த ஜென்மம். யானையை நிறுவி தனது சிலையும் நிறுவி இப்போது இந்த மா.நிலத்தில் இடமில்லை.நல்ல தீர்ப்பு..100 கோடி அழட்டும்
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-201909:21:52 IST Report Abuse
மதுவந்தி யானை இருந்தாலும் ஆயிரக் கணக்கில் செலவு. சிலையாக நின்றாலும பல்லாயிரக் கணக்கில் செலவு. அரசியலில் நிரந்தர வெற்றி என்று நினைத்து செலவிட்ட மக்கள் பணமா? திருப்பி செலுத்ததான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X