10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு
தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினருக்கான, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

10 சதவீத இடஒதுக்கீடு,சுப்ரீம் கோர்ட்,தடை,மறுப்பு


பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, பார்லி மென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, இது சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம், பா.ஜ., ஆட்சி நடக்கும் சில மாநிலங்களிலும், காங்., ஆட்சி நடக்கும் சத்தீஸ்கரிலும், அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், தொழிலதிபர், பூனாவாலா தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: இட ஒதுக்கீட்டுக்கு, பொருளாதாரம் மட்டுமே வரையறையாக இருக்க முடியாது. அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தை, இந்தச் சட்டம் மீறுகிறது. உச்ச நீதிமன்றம், 'இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக் கூடாது' என, ஏற்கனவே கூறி உள்ளது.

இப்போது, புதிய, 10 சதவீதத்தை சேர்த்தால், இடஒதுக்கீடு, 60 சதவீதமாகிவிடும்; இது, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். அதனால், இந்த இடஒதுக்கீடு சட்டத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுமுன், நேற்று விசாரணைக்கு வந்தது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு உடனடியாக தடை விதிக்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர். பூனாவாலா மனு தொடர்பாக, மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு, மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவையும், முந்தைய மனுக் களுடன் சேர்த்து விசாரிக்க முடிவு செய்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
09-பிப்-201921:21:04 IST Report Abuse

r.sundaramஅர்களே இது மட்டும் போதாது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டிலும் ஐம்பது சாதமானம் பொருளாதார ரீதியில் பிற்பட்டவருக்கு என உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்த சமூகம் ஒட்டுமொத்தமாக முன்னேறும். இல்லையென்றால் அந்தந்த சமூகத்தில் உள்ள முன்னேறியவர்கள் திரும்ப திரும்ப இடஒதுக்கீடு வசதியை அனுபவிப்பர்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-பிப்-201914:23:57 IST Report Abuse

Pugazh Vஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரத்தான் வேண்டும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-பிப்-201914:17:17 IST Report Abuse

Pugazh Vஏழை/ பணக்காரன் அடிப்படையில் இட ஒதுக்கீடு சாத்தியமே அல்ல.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X