அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஒவ்வொருவருக்கும் தலா
ரூ.53 ஆயிரம் கடன்!

சென்னை: தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கிய, 2.02 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு அறிவித்தது.

தலைக்கு,ரூ.53 ஆயிரம்,கடன்அரசின் மொத்த கடன், வரும் நிதியாண்டில், 3 லட்சத்து, 97 ஆயிரத்து, 496 கோடி ரூபாயாக இருக்கும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அந்த கடனை, மொத்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு பகிர்ந்தால், தலா, ஒரு கார்டுதாரருக்கு, 1 லட்சத்து, 96 ஆயிரத்து, 780 ரூபாய் கடன் உள்ளது.


தமிழகத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 7.21 கோடி மக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளில், அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.அதன்படி, தற்போது சராசரியாக, 7.50 கோடி மக்கள் இருப்பர். அரசின் கடன் சுமையை, தனி ஒரு நபரிடம் பகிர்ந்தால்,தலா, ஒருவருக்கு, 52 ஆயிரத்து, 999 ரூபாய் கடன் உள்ளது.


ஜி.எஸ்.டி.,யில் ரூ.54 ஆயிரம் கோடி வருவாய்: நிதித்துறை செயலர் விளக்கம்''வரும் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வாயிலாக, 53 ஆயிரத்து, 739 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்,'' என, நிதித்துறை செயலர், சண்முகம் தெரிவித்தார்.


சென்னை, தலைமை செயலகத்தில், அவர் அளித்த பேட்டி: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, 2019 - 20ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டின், மொத்த மதிப்பீடு, 2 லட்சத்து, 68 ஆயிரத்து, 501 கோடி ரூபாய். அதில், வருவாய் வரவுகள், 1 லட்சத்து, 97 ஆயிரத்து, 721 கோடி ரூபாய். செலவுகள், 2 லட்சத்து, 12 ஆயிரத்து, 35 கோடி ரூபாய்.


வருவாய் பற்றாக்குறை, 14 ஆயிரத்து, 314 கோடி ரூபாய். மூலதன செலவுகளுக்கு, 31 ஆயிரத்து, 251 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை, 44 ஆயிரத்து, 176 கோடி ரூபாய். பட்ஜெட்டில், முக்கிய அம்சமாக, 38 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில், நீர் பாசனம், மக்கள் நல வாழ்வு, கட்டமைப்பு திட்டங்கள் அடங்கும்.


கடன் அளவை கட்டுப்படுத்தி, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை குறைக்க, பட்ஜெட்டில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில், வருவாய் பற்றாக்குறை, 19 ஆயிரத்து, 319 கோடி ரூபாயாக இருக்கும் என, திருத்த மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, 2019 - 20ல், 14 ஆயிரத்து, 314 கோடி ரூபாயாக குறைக்கப்படும்.


நிதி பற்றாக்குறை, மாநில உற்பத்தி மதிப்பில், 2.85 சதவீதமாக உள்ளது. இது, வரும் நிதியாண்டில், 2.56 சதவீதமாக குறைக்கப்படும். மத்திய அரசு, தமிழகத்திற்கு அனுமதித்திருக்கிற, நிகர கடன் பெறக் கூடிய அளவு, 51 ஆயிரத்து, 800 கோடி ரூபாய். ஆனால், பட்ஜெட்டில், 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டும், கடன் வாங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது.


இந்த ஆண்டில், வரி வருவாயில் முன்னேற்றம் காணப்படுகிறது. இது, தொடர்ந்து இருக்கும். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால், இந்த ஆண்டில், அதன் வாயிலாக, அதிக வரி வருவாய் கிடைத்தது. மாநில அரசின் சொந்த வரி வருவாய், 17.54 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வாயிலாக கிடைத்த வருவாய், 8 சதவீதம் அதிகரித்துள்ளது.


நடப்பு நிதியாண்டில், டிசம்பர் வரை, ஜி.எஸ்.டி., வாயிலாக, 33 ஆயிரத்து, 198 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. முழு ஆண்டில், 45 ஆயிரத்து, 625 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டில், 53 ஆயிரத்து, 739 கோடி ரூபாயும் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


ஜி.எஸ்.டி., வரி வசூல், ஆண்டுக்கு, 14 - 15 சதவீதம் என்றளவில், வளர்ச்சி கண்டு வருகிறது. ஜி.எஸ்.டி., வளர்ச்சி விகிதத்தில், நாட்டில், மஹாராஷ்டிராவிற்கு அடுத்த இடத்தில், தமிழகம் உள்ளது. எல்லா அரசுகளும், கடன் வாங்கி தான், முதலீடு செய்யும்; செலவும் செய்ய வேண்டும். கடன் குறித்து, வெளியில் இருந்து, எது வேண்டுமானாலும் பேசலாம். நிர்வாகத்தை நடத்தும்போது தான், அதில் உள்ள பிரச்னைகளை சமாளித்து, தீர்வு காண முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


நிறுவன சொத்து பரிமாற்றத்துக்கு பதிவு கட்டணம்:'நிறுவனங்கள் மறுகட்டமைப்பின் போது நடக்கும், சொத்து பரிமாற்றங்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் வசூலிக்கப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், அசையா சொத்துக்கள் பரிமாற்றத்தில், 7 சதவீதம் முத்திரை தீர்வை; 4 சதவீதம் பதிவு கட்டணம் விதிக்கப்படுகிறது. இது, தனி நபர்கள் இடையிலான சொத்து பரிமாற்றத்துக்கும் பொருந்தும். ஆனால், நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்படும் போதும், மறுகட்டமைப்பின் போதும், அசையா சொத்துக்கள், ஒரு பெயரில் இருந்து, வேறு பெயருக்கு பரிமாற்றம் செய்யப்படுகின்றன. பெரும்பாலாலும், இது, வழக்கமான விற்பனையாக கருதப்படுகிறது.


இத்தகைய பரிமாற்றங்களை விற்பனையாக கருதக்கூடாது என, தொழில் நிறுவனங்கள் வலியுறுத்துவதால், பத்திரப் பதிவில் குழப்பம் நீடித்து வருகிறது.


இதற்கு தீர்வாக, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு: நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அல்லது மறுகட்டமைப்பு தொடர்பான சொத்து பரிமாற்றங்களுக்கு, சந்தை மதிப்பில், 2 சதவீதம் முத்திரை தீர்வை அல்லது நிறுவன பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பில், 0.6 சதவீதம் வசூலிக்கப் படும்.


இதில், எது அதிகமோ, அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இத்த கைய பரிமாற்றங்களுக்கான பதிவு கட்டணம், அதிகபட்சமாக, 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும். இதனால், நிறுவன சொத்து பரிமாற்ற பதிவு குழப்பத்துக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.


2,000 மின்சார பஸ்கள் வாங்கப்படும் 'லேப்டாப்' வழங்க ரூ.1,362 கோடிஅரசு அலுவலர், ஓய்வூதியர் நலன்:பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட,
ஸ்ரீதர் குழு; ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட, சித்திக் குழு அறிக்கைகள், அரசின் பரிசீலனையில் உள்ளன. அரசு பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களுக்கான, புதிய மருத்துவக் காப்பீடு திட்ட தவணைத் தொகை செலுத்த, 253 கோடி மற்றும், 299 கோடி ரூபாய் செலவிடப்படும்.


போக்குவரத்து துறை:துாய்மையான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், மின்சார பஸ்களை இயக்கும் திட்டத்தில், நாட்டில் முதலாவதாக, தமிழகம் கையெழுத்திட்டுள்ளது. ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடம் கடன் பெற்று, 5,890 கோடி ரூபாய் செலவில், 2,000 'பி.எஸ்., 6' தரத்திலான பஸ்கள்; சென்னை, மதுரை, கோவைக்கு, 2,000 மின்சார பஸ்கள் வாங்கப்படும்.


ஓய்வூதியர் நிதிக்கு கடன்:ஓய்வுகால பலன்கள், ஓய்வூதிய நிலுவைகளை வழங்க, 376 கோடி ரூபாய்; குறுகிய கால கடனாக, 1,323 கோடி ரூபாய் என, 1,696 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. டீசல் விலை உயர்வை சமாளிக்க, 333 கோடி ரூபாய்; மாணவர்களின் பயணக் கட்டண சலுகையாக, 766 கோடி ரூபாய்; டீசல் மானியமாக, 250 கோடி ரூபாய் செலவிடப்படும்.


பள்ளிக் கல்வி துறை:எட்டாண்டுகளில், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து, 33 ஆயிரத்து, 519 ஆக உள்ளது. பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட, இலவச திட்டங்களுக்காக, 1,657 கோடி ரூபாய்; மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க, 314 கோடி ரூபாய்; 'லேப்டாப்' வழங்க, 1,362 கோடி ரூபாய்; அரசு பள்ளிகளின் உள்கட்டமைபை மேம்படுத்த, 381 கோடி ரூபாய் செலவிடப்படும்.


மத்திய அரசின் நிலுவை:மத்திய அரசின் திட்டங்களான, அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்காக, 2,109 கோடி ரூபாய்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத்திற்காக, 1,092 கோடி ரூபாயை, மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது. இந்த திட்டங்கள், 2019 - 2020ம் ஆண்டு முதல் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் என, உருவாக்கப்பட்டுள்ளது.


இதற்காக, 2,791 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்க, 249 கோடி ரூபாய் செலவிடப்படும். இத்திட்டத்தில் இதுவரை, 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். பள்ளிக் கல்வி துறைக்கு, 28 ஆயிரத்து, 758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


உயர் கல்வி :ராமேஸ்வரத்தில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பெயரில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிறுவப்படும். முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்விக் கட்டணத்துக்காக, 460 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. 'ரூசா' என்னும், தேசிய உயர் கல்வி திட்டத்தில், 10 பல்கலைகள், 65 அரசு கல்லுாரிகளில், 269 கோடி ரூபாய் செலவில், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 382 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.


பல்கலைகளுக்கான தொகுப்பு நிதியில், 20 ஆண்டுகளுக்கு பின் திருத்தம் செய்யப்பட்டு, அண்ணாமலை பல்கலைக்கு, 250 கோடி ரூபாய் உட்பட, பல பல்கலைகளுக்கு, 538 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. உலகத் தரமான கற்பிக்கும் கருவிகள், அண்ணா பல்கலை மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு வழங்கப்படும். இதற்காக, அண்ணா பல்கலைக்கு, 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.


வேட்டி, சேலைக்கு ரூ.490 கோடிதொழிலாளர் நல வாரியம்:* தொழிலாளர் நல வாரியம் சார்பில், பல்வேறு பகுதிகளில், 31.66 கோடி ரூபாயில், தொழிலாளர்கள் தங்கும் அறைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் ஓய்வூதிய பயன் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்கும்

* அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களுக்கு மானியம் வழங்க, 148 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


திறன் மேம்பாடு:* வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக பயிற்சி அளிக்க, 200 கோடி ரூபாய்; பிரதம மந்திரி திறன் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 51.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


கைத்தறி துறை:* கைத்தறி மற்றும் துணி நுால் துறைக்கு, 1,170 கோடி ரூபாய்; கைவினை மற்றும் கதர் துறைக்கு, 211 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* முதன்மை நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின், கைத்தறி பொருட்களின் விற்பனைக்கு, அரசு மானியம் வழங்க, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* ஏழை குடும்பங்களுக்கு, விலையில்லா சேலைகள், வேட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு, 490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


விரைவில் வீட்டுவசதி கொள்கை:தமிழகத்தில், அனைத்து தரப்பு மக்களும் வீட்டுவசதி பெற, மாநில நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கையை, அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. ஏழை, நடுத்தர மக்களும், வீட்டுவசதி சந்தையை எளிதில் அணுகி, வீடு வாங்கு வதற்கான சூழல் உருவாக்கப்படும். சொற்பமாக உள்ள நில ஆதாரங்களை, முறையாகவும், திறம்படவும் பயன்படுத்த, 'மாநில நில பயன்பாட்டு கொள்கை' வடிவமைக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட வளர்ச்சியை உறுதி செய்ய, மாநிலம் முழுமைக்குமான, ஒரு முன்னோடி திட்டத்தை, நகர், ஊரமைப்பு இயக்ககம், இரண்டு ஆண்டுகளுக்குள் தயார் செய்யும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


20 ஆயிரம் பசுமை வீடுகள்:வரும் நிதி ஆண்டில், 20 ஆயிரம், சூரியசக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்ட, 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறைக்கான அறிவிப்புகள்:


* ஊரக வளர்ச்சி துறைக்கு, 18 ஆயிரத்து, 273 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், வரும் நிதி ஆண்டுக்கு, தமிழக அரசின் பங்காக, 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது

Advertisement

* பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டத்தின் கீழ், வரும் நிதி ஆண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசின் பங்காக, 2,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* முதல்வரின், சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடுகள் திட்டத்தில், வரும் நிதி ஆண்டில், 20 ஆயிரம் வீடுகள் கட்ட, 420 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீபெரும்புதுார் அருகே வருகிறது நீர்த்தேக்கம்'வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்:

* நான்கு லட்சம் வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில், சென்னையில், 2,000 கோடி ரூபாய் செலவில், வாகன நிறுத்தம் அமைக்கப்படும்

* 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக, 1,700 கோடி ரூபாயில், ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்

* ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், ஒரத்துார் நதி குறுக்கே, நீர்த்தேக்கம் அமைத்தல்; குறிஞ்சிப்பாடி தாலுகாவில், பாலாற்றின் படுகையை மறு சீரமைத்தல்; சிதம்பரம் தாலுகாவில் உள்ள பேரம்பட்டு அருகில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, புதிய வெள்ளத் தடுப்பு மதகு அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 284 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்

* மதுரை மாவட்டத்தில், திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தாலுகாக்களை உள்ளடக்கிய, புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்

* வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில், விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தில், இயற்கை மரணம் ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாய்; விபத்தால் ஏற்படும் மரணத்திற்கு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். விபத்தால் ஏற்படும், நிரந்தர ஊனத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்

* மீன் வளத்துறையில், 80 ஆழ்கடல் மீன்பிடி படகு குழுக்களுக்கு, செயற்கைக் கோள் தொலைபேசி மற்றும் நவீன தொலை தொடர்பு சாதனங்கள் வழங்கப்படும்

* வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு, உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சி அளிப்பதற்கான, ஐந்து மாவட்டங்களில் பயிற்சி மையங்கள், அரசு - தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும். இதில், ஆண்டு தோறும், 10 ஆயிரம் வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள், பயிற்சி பெற்று, வேலைவாய்ப்பு பெறுவர்.


பழம், காய்கறி சாகுபடிக்கு ரூ.50 கோடியில் ஊக்குவிப்பு திட்டம்பழம் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க, முதல்வரின் சிறப்பு திட்டம், 50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

* ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, இடிமின்னலுடன் கூடிய மழை, இயற்கை தீவிபத்து போன்றவற்றில் ஏற்படும் இழப்புகளும், பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படும். பயிர் காப்பீட்டிற்கு, மாநில அரசின் பங்களிப்பாக, 621 கோடி ரூபாய் வழங்கப்படும்

* நுண்ணீர் பாசன திட்டம், 1,361 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். 84 கோடி ரூபாய் மானிய உதவியுடன், 2,000 சூரியசக்தி பம்ப் மோட்டார்கள், விவசாயிகளுக்கு வழங்கப்படும்

* 25 மாவட்டங்களில், 101 கோடி ரூபாய் செலவில், 5,000 ஒருங்கிணைந்த பண்ணை குழுக்கள் அமைக்கப்படும்

* சாதாரண நெல்லுக்கு, 1,800 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு, 1,840 ரூபாயும், கொள்முதல் விலையாக வழங்கப்படும்

* நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை, 180 கோடி ரூபாய்; கரும்பு கொள்முதலுக்கு ஊக்கத்தொகை, 200 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது

* பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க, முதல்வரின் சிறப்பு திட்டம், 50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

* சென்னைக்கு அருகில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஒருங்கிணைந்த உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை, விரைவில் வெளியிடப்படும்

* இயற்கை விவசாயத்தை மேம்படுத்த, இயற்கை வேளாண்மை சான்றளிப்பு மையங்கள் அமைக்கப்படும்.


பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் 1.97 லட்சம் வீடுகள் கட்டப்படும்'பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 1.97 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும். சென்னையில், ஆற்றங்கரையோர மக்களுக்காக, 38 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கான அறிவிப்புகள்:

* பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 1.09 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக, தமிழக அரசின் முதற்கட்ட பங்களிப்பாக, 2,662 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* சென்னை மற்றும் புறநகரில், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக குடியமர்த்த, 4,647 கோடி ரூபாயில், 38 ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும்

* சென்னை தவிர்த்த நகர்ப்புறங்களில், ஏழை மக்களுக்கான வீட்டுவசதி திட்டங்களை மேற்கொள்ள, 5,000 கோடி ரூபாய் நிதி, ஆசிய வளர்ச்சி வங்கியில் கடனாக கோரப்பட்டுள்ளது

* ஏழை மக்களுக்கான குறைந்த விலை வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள, தமிழ்நாடு உறைவிட நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தில், அறிவுசார் பங்குதாரராக இணைந்துள்ள தேசிய வீட்டுவசதி வங்கி, 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது

* தமிழகத்தில், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு பணிகளுக்காக, பட்ஜெட்டில், 6,265 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நீதிபதி கவுண்டர் - Dharapuram,இந்தியா
09-பிப்-201920:57:24 IST Report Abuse

நீதிபதி கவுண்டர்பொருளாதா அறிவு 1967ல் மறைந்து விட்டது .. . திராவிட இயக்கம் என்று தமிழகத்தில் கால் வைத்ததோ அன்றே....பொருள் நாசம், குல நாசம், வளர்ச்சி நாசம், தமிழகத்தை தமிழர்களே ஆட்சி செய்ய விடாமல் செய்ததன் விளைவு......இப்போ தமிழன்தான்..ஆட்சி ..ஆனால் இலவசத்தை எப்படி நிறுத்துவது என தெரியாமல், தெரிந்தாலும் மக்கள் மீண்டும் வாக்களிப்பார்களா என்ற பயத்தில்......ஆட்சி நடக்கிறது........நல்லது நடக்கிறதோ இல்லையோ கெட்டது இல்லை என சந்தோசம்.......

Rate this:
skv - Bangalore,இந்தியா
09-பிப்-201917:09:11 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>மக்களின் துட்டெல்லாம் அரசியல்வியாதிகளிடமே இருக்கே ஏழைகளின் துட்டெல்லாம் டாஸ்மாக்கிமூலம் உறிஞ்சுறானுக ரெண்டுகலகமும் கொடியே ஏ பொறந்துடுன்னா இருக்கானுக கிராமத்துல புதுஜாமுக்காலம் லே குந்திண்டு பேசினால் முகவின் மகன் என்ன இல்லையா ஆயிருவாகலா ?????? மக்களே மனம் திருந்தானும் இல்லேன்னா தமிழா உனக்கு ஓட்டை சட்டியும் இருக்காதுய்யா

Rate this:
senthil kumar - sivakasi,இந்தியா
09-பிப்-201916:09:05 IST Report Abuse

senthil kumarபழனிச்சாமி & கோ சொத்துக்கள் எவ்வளவு? உறவினர்கள் டெண்டர் எவ்வளவு? கருப்பு பணம் எவ்வளவு? இதே போல் அனைத்து மந்திரிகள் ஊழல் பணம் கஜானாவுக்கு வரட்டும். அப்புறம் கேட்கலாம் இந்த கதை கட்டுரை?

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X