அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மாநிலத்தின் நிதி நிலை
மத்திய அரசால் பாதிப்பு!'

சென்னை: ''நிலுவை தொகைகளை விடுவிப்பதில், மத்திய அரசு செய்யும் தாமதம், மாநிலத்தின் நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மாநிலத்தின்,நிதி நிலை,மத்திய அரசால்,பாதிப்புபட்ஜெட் உரையில், அவர் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி.,யை, சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில், தமிழகம் ஒன்றாக உள்ளது. ஜி.எஸ்.டி.,யில் கிடைக்கும் வருவாயில், தமிழகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றுள்ளது. எனினும், மாநிலங்களுக்கு இடையிலான, ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாயில், 2017 - 18ம் ஆண்டில் கிடைக்க வேண்டிய, 5,454 கோடி ரூபாய்; ஜி.எஸ்.டி., வரியில், 455 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை, மத்திய அரசிடமிருந்து, தமிழகத்திற்கு இதுவரை வரவில்லை.


இந்த நிலுவை தொகைகளை விடுவிப்பதில், மத்திய அரசு செய்யும் தாமதம், மாநிலத்தின் நிதி நிலையின் மீது, பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் கல்விக்கான உதவித்தொகை திட்டத்தில், மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், மத்திய அரசின் நிதிச்சுமை, மாநில அரசுக்கு மாற்றப்பட்டு, தமிழகத்தின் நிதிப் பொறுப்பு, 354 கோடி ரூபாயில் இருந்து, 1,526 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


நீண்ட காலமாக, நிலுவையில் உள்ள தொகையை விடுவிக்கும்படி, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தியது. எனினும், மத்திய அரசு இதுவரை, 986 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை. 14வது நிதிக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்திய பின், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களில், அதன் பங்கை கணிசமாக குறைத்துள்ளது. அந்த திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகளில், மத்திய அரசு செய்த மாற்றங்களால், மாநில அரசின் நிதிச்சுமை, மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு, பன்னீர் கூறினார்.


கல்வி உதவித்தொகைக்கு ரூ.291 கோடி; இலவச சைக்கிள்களுக்கு ரூ.139 கோடிசுற்றுலா:உலக சுற்றுலா பயணியரை கவரும் வகையில், சுற்றுலாத் தலங்களில், உணவகம், விடுதி, போக்குவரத்து வசதிகள், தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படும். 100 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின், திட்ட தயாரிப்பு நிதியின் வழியாக, புதிய வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும்.


மாற்றுத் திறனாளிகள் நலம்:ஏற்கனவே உள்ள திட்டங்கள் தொடரும் நிலையில், தசை சிதைவு, மூளை, தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்காக, 3,000 சிறப்பு சக்கர நாற்காலிகள், 3,000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க, 572 கோடி ரூபாய் செலவிடப்படும்.


ஹிந்து சமய அறநிலைய துறை:அன்னதானத் திட்டம், குடமுழுக்கு, கிராம கோவில்களுக்கு, ஒரு கால பூஜை ஆகிய திட்டங்கள் தொடரும். இந்த ஆண்டு, 281.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


சிறுபான்மையினர் நலம்:சிறுபான்மையினர் நலத் துறைக்கு, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மொழி, மத சிறுபான்மையினர் மாணவர்களுக்காக, 16 விடுதிகள் பராமரிப்பு, தேவாலயங்கள், மசூதிகள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.


சமூக நலம்:ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு பணிகள் திட்டத்தை செயல்படுத்த, 2,052 கோடி ரூபாய்; திருமண நிதியுதவி திட்டங்களுக்கு, 726.32 கோடி ரூபாய்; மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு, 250 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. விலைவாசி உயர்வை சமாளித்து, சத்துணவு திட்டத்தை தொடர, ஏற்கனவே வழங்கப்படும் நிதியுடன், கூடுதலாக, 98 கோடி ரூபாய் சேர்த்து, 1,772 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'கெனோயிங், கயாகிங்' விளையாட்டு மையம்; தமிழக உடற்கல்வி, நீர் விளையாட்டு பல்கலையில், இறகுப்பந்து விளையாட்டு, மேஜைப்பந்து விளையாட்டுகளுக்கு, சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், உலகத்தர நீச்சல் குளம்; சென்னையில், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில், சிறுமியர் விடுதி கட்டப்படும். தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, விளையாட்டு வீரர்கள் பதக்கம் பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில், 7.48 கோடி ரூபாய் செலவிடப்படும். கிராம பஞ்சாயத்துகளில், விளையாட்டு போட்டிகள் நடத்த, 25 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.


ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம்:புதிதாக, 20 விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கு, 40 கோடி ரூபாய்; பள்ளி, கல்லுாரி மாணவர்களின் உணவு கட்டணத்துக்காக, 103.35 கோடி ரூபாய் செலவிடப்படும். ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலனுக்காக, 482.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


பிற்பட்டோர் நலம்:மாணவர்களின், பள்ளி கல்வி உதவித் தொகையை தொடர, 291 கோடி ரூபாய்; பள்ளி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு, சைக்கிள்கள் வழங்க, 139 கோடி ரூபாய்; விடுதி மாணவர்களின் உணவுச் செலவுக்காக, 79.23 கோடி ரூபாய் செலவிடப்படும்.


உயர்கல்வி:உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில், மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால், 354 கோடி ரூபாயில் இருந்து, 1,526 கோடி ரூபாயாக, செலவு உயர்ந்துள்ளது. மத்திய அரசு வழங்க வேண்டிய, 986 கோடி ரூபாய், நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில், உயர் கல்வி உதவித் தொகைக்காக, 1,857 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்க, 71 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.


ரூ.726 கோடியில் 256 ரயில்வே பாலம்தமிழகத்தில், புதிதாக, 256 ரயில்வே மேம்பாலங்கள், 726 கோடி ரூபாய் செலவில்


கட்டப்பட உள்ளன. ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், சாலை, பாலம், சிறுபாலங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள, 4,570 கோடி ரூபாய் செலவிடப்படும். சிவகங்கை கோட்டத்தில் உள்ள, 622 கி.மீ., சாலைகள், 715 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். சென்னை சுற்றுவட்ட சாலை திட்டத்திற்கு, கடனுதவி பெற, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் இறுதிக்கட்ட பேச்சு நடந்து வருகிறது.


ஆடுகள் வழங்க ரூ.198 கோடி ஒதுக்கீடுகால்நடை பராமரிப்பு, பால்வள துறை: மரபு திறன்மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை பயன்படுத்தி, 100 கோடி ரூபாய் செலவில், புதிய உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில், இதுவரை, 8.72 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. இத்திட்டத்திற்கு, வரும் நிதியாண்டில், 198.75 கோடி ரூபாய் செலவிடப்படும் பால் பதப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த, 200 கோடி ரூபாய் செலவிடப்படும். மரபு திறன்மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை பயன்படுத்தி, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய, உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.


உள்ளாட்சிக்கு ரூ.4,412 கோடி நிதிஉள்ளாட்சி அமைப்புகளுக்கு, சிறப்பு செயல்பாட்டு நிதி உதவியாக, 4,412 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. பட்ஜெட்டில், உள்ளாட்சித் துறைக்கான அறிவிப்புகள்:

* மாநில நிதிக்குழு பரிந்துரையின்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, 6,573 கோடி ரூபாய்; ஊரக உள்ளாட்சிகளுக்கு, 5,164 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகள் மானியத்திற்காக, 5,178 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* மத்திய நிதிக்குழு பரிந்துரையின்படி, 2017 - 18ல், 560 கோடி ரூபாய்; 2018 - 19ல், 3,852 கோடி ரூபாய் என, சிறப்பு செயல்பாடு மற்றும் அடிப்படை நிதியாக, 4,412 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.


'அம்மா' பசுமை மி்ன்சார கிராமம்'டெடா' எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமை வாயிலாக, 'அம்மா பசுமை கிராமம்' என்ற, மின்சார கிராமங்கள் அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* தேனி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், 1,125 கோடி ரூபாய் செலவில், 250 மெகா வாட் திறனில், மிதக்கும் சூரியசக்தி மின் திட்டங்கள் அமைக்கப்படும்

* சாகுபடிக்கு பயன்படாத, சமுதாய மற்றும் பட்டா நிலங்களில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஊக்குவிக்கப்பட உள்ளது. இதற்காக, 5 மெகா வாட் திறனில், ஊரக புதுப்பிக்கத்தக்க மின் பூங்காவுடன், அம்மா பசுமை கிராமம் என்ற, நிலையான மின் கிராமங்கள், டெடா வாயிலாக ஏற்படுத்தப்படும்

* பட்ஜெட் மதிப்பீடுகளில், எரிசக்தி துறைக்கு, 18 ஆயிரத்து,560.77 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


போலீசில், 9,975 பேருக்கு வேலை'காவல் துறைக்கு, புதிதாக, 9,975 போலீசார் தேர்வு செய்யப்படுவர்' என, பட்ஜெட்டில், அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்டில், காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான அறிவிப்பு:

* தமிழக காவல் துறைக்கு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, 9,975 போலீசார் தேர்வு செய்யப்படுவர்

* நவீனமயத்துக்கு, 111.57 கோடி ரூபாய் உட்பட, காவல் துறைக்கு, 8,084 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறைக்கு, 403.76 கோடி ரூபாய்; சிறைத் துறைக்கு, 319.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* நீதி நிர்வாகத் துறைக்காக, 1,265.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


உணவு மானியம் ரூ.6,000 கோடி* உணவு மானியத்திற்கு, 6,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது

* பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, ஒவ்வொரு குடும்பத்திற்கும், 1,000 ரூபாய் வழங்கிய வகையில், 1,985 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

* பொது வினியோக திட்டத்தை, கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்துவதற்கு, நிதி உதவியாக, 334 கோடி ரூபாய் செலவிடப்படும்.


'ஸ்மார்ட் சிட்டி'க்கு ரூ.1,650 கோடிதமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகளுக்கு, வரும் நிதியாண்டில், 1,650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக துறைக்கான அறிவிப்புகள்:

* மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 11 ஆயிரத்து, 776 கோடி ரூபாய் மதிப்பிலான, 326 பணிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்ட பணிகளுக்காக, 1,650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 'அம்ருத்' திட்ட பணிகளுக்காக, 1,450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* நகர்ப்புற முன்னோடி திட்டத்துக்காக, 302 கோடி ரூபாய்; ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி இயக்கத்துக்கு, 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்துக்கு, 836 கோடி ரூபாய்; ஊரக பகுதிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு, 1,558 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


வனப்பகுதியை சுற்றி உயிர் வேலிநகரமயமாதல் காரணமாக ஏற்படும் பிரச்னைகளில் இருந்து, சென்னையை சுற்றியுள்ள வனப் பகுதிகளை பாதுகாக்க, 25 கோடி ரூபாயில், 'கான்கிரீட்' மற்றும் உயிர் வேலி அமைக்கப்படும். அடையாறு, கூவம் நதிகளின் மறு சீரமைப்பு, பள்ளிக்கரணை சதுப்பு நில மீட்டெடுப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு, 300 கோடி ரூபாய் செலவிடப்படும் வனத்துறைக்கு, 445 கோடி ரூபாயும், சுற்றுச்சூழல் துறைக்கு, 32 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.


சுகாதார துறைக்கு ரூ.12,563 கோடி'உலக வங்கி கடனுதவியுடன், 2,685 கோடி ரூபாய் செலவில், தமிழக சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு, 12 ஆயிரத்து, 563 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு, 1,363 கோடி ரூபாய்; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு, 959.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

* குழந்தைகள் நல பரிசு பெட்டகம், சஞ்சீவ் திட்டங்கள், 'சானிட்டரி நாப்கின்கள்' வழங்கும் திட்டம், தொடர்ந்து செயல்படுத்தப்படும்

* உலக வங்கி கடனுதவியுடன், 2,685.91 கோடி ரூபாய் செலவில், தமிழக சுகாதாரத சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

Advertisement


* மருத்துவமனைகளுக்கு தேவையான உபகர ணங்கள் வாங்க, மூன்று ஆண்டுகளுக்கு, 247 கோடி ரூபாய் செலவிடப்படும். பட்ஜெட்டில், சுகாதாரத்துறைக்கு, மொத்தம், 12 ஆயிரத்து, 563 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 925.39 கோடி ரூபாய் அதிகம்.


ரூ.10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க முடிவுதமிழக அரசு, வரும் நிதியாண்டில், பயிர் கடனாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட்டில், கூட்டுறவு துறை அறிவிப்பு:

* நடப்பாண்டில், 8,000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 9.37 லட்சம் பேருக்கு, 6,118 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. உரிய காலத்தில், பயிர் கடனை திருப்பி செலுத்துவோருக்கு, வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது

* வரும் நிதியாண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பயிர் கடன்கள் மீதான வட்டி தள்ளுபடிக்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


அத்திக்கடவு திட்டத்துக்கு சூரிய மின் சக்தி வசதிபல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக, நீர் வளத்துறைக்கு, 5,983 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதில் உள்ள திட்டங்கள்:

* பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளை, புனரமைக்கும் குடிமராமத்து திட்டத்திற்கு, 300 கோடி ரூபாய்

* ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள, சிறிய பாசன ஏரிகள் புனரமைக்கப்படும்

* ஏரிகள், அணைக்கட்டுகள் புனரமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், நீர்செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட, பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கு, 235 கோடி ரூபாய்

* இரண்டாம் கட்டமாக, அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், 2020 முதல், ஐந்து ஆண்டுகளுக்கு, 610 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 37 அணைகள் புனரமைக்கப்படும்

* காவிரி பாசன பகுதிகளில், பருவநிலை மாற்ற தழுவல் திட்டம், 960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இத்திட்டத்திற்கு, 478 கோடி ரூபாய்

* அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக, சுய பயன்பாட்டிற்காக, 'நபார்டு' வங்கி நிதியுதவியுடன், 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சூரிய ஒளி மின் திட்டம் செயல்படுத்தப்படும்.


மெட்ரோ ரயிலுக்கு ரூ.2,681 கோடி ஒதுக்கீடுசென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, தமிழக பட்ஜெட்டில், 2,681 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், 45.01 கி.மீ., முழு வழித்தடமும், இம்மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான, 9 கி.மீ., நீட்டிப்பு திட்டம், 2020 ஜூனில் பயன்பாட்டுக்கு வரும்

* மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் வரை, மெட்ரோ பேருந்து பணிமனை வரை, மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன


இரண்டாவது திட்டம்:


* சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில், மூன்று வழித்தடங்களில், 118.90 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது

* முதற் கட்டமாக, மாதவரத்தில் இருந்து, சோழிங்கநல்லுார்; மாதவரத்தில் இருந்து, கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலான, 52.01 கி.மீ., திட்டத்தை செயல்படுத்த, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, 20 ஆயிரத்து, 196 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது

* இத்திட்டத்துக்கு, 40 ஆயிரத்து, 941 கோடி ரூபாய், மொத்த மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள, மாநில அரசு, நிர்வாக அனுமதி அளித்து உள்ளது. இத்திட்டத்துக்கு, இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில், 2,681 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவக்கப்படும்.


சிறு நிறுவனங்களுக்காக தனி தொழில் மின் பாதைகுறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு, தனியாக, தொழில் மின் பாதை அமைக்கப்பட்டு, சீரான மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

* தமிழக மின் ஆளுமை முகமையில், 'வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான உயர் மையம்' ஏற்படுத்தப்படும்

* உலக முதலீட்டாளர் மாநாட்டில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 10.45 லட்சம் பேர், வேலைவாய்ப்பு பெற உள்ளனர். மேலும், 33 ஆயிரத்து, 206 கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடு பெறப்பட்டுள்ளது

* சென்னை, ஓசூர், சேலம், கோவை மற்றும் திருச்சியில், தமிழக பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி முனையங்களை, மத்திய அரசு துவங்கியுள்ளது. இதில், வானுார்தி மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பவர்களுக்கு, உரிய ஊக்கம் அளிக்கப்படும்

* தமிழகத்தில், தொழில் துவங்குவதற்கு சாதகமாக, தொழில் மேம்பாட்டு திட்டம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, 88 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது

* புதிய தொழில் நிறுவனங்களுக்கான நிலத் தேவைகள் அதிகரித்திருப்பதால், திருமுடி வாக்கம் மற்றும் ஆலத்துார் தொழிற்பேட்டைகள் விரிவுப்படுத்தப்படும்

* அரசு தொழிற்பேட்டைகளில் இயங்கி வரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தடையற்ற மின்சாரம் பெற, தனியாக தொழில் மின்பாதை அமைக்கப்பட்டு, சீராக மின் வினியோகம் வழங்கப்படும்

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான, வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு மையம் என்ற, புதிய அமைப்பு ஒற்படுத்தப்படும்.
Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-பிப்-201914:39:05 IST Report Abuse

Pugazh Vஇந்த பட்ஜெட் டை தமிழிசை பாராட்டினார். ஆனால் மத்திய அரசால் தான் நிதிநிலை ப்ரச்னை என்று ஓபிஎஸ் சொல்கிறார்.

Rate this:
ravisankar K - chennai,இந்தியா
09-பிப்-201913:56:20 IST Report Abuse

ravisankar K//...தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்று சிபிஐ ரெய்டுக்கு...//... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கதைதான் ... இதற்கும் சிபிஐ ரைடுக்கும் என்ன சம்பந்தம் ??.. ஒபிஸ் கேட்பது தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிதான் ....இது வர தாமதமாகிறது என்றுதான் கூறியுள்ளார் ....IGST 5454 கோடி பாக்கி உள்ளது ... ஜி.எஸ்.டி., வரியில், 455 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வர வேண்டும் . இதைத்தான் குறிப்பிட்டுள்ளார் ... யாரும் தென்னகத்தை கொள்ளையடித்து வடக்கில் செலவு செய்ய முடியாது ... இங்கிருக்கும் கொள்ளயர்கள் அப்படி விடுவார்களா ??......எப்படியாவது வட நாட்டான் கை காலில் விழுந்து நிதியை வாங்கி அவர்களுக்கு வர வேண்டிய கமிஷன் முறையாக பெறுவார்கள் .....அதனால் வடக்கு வாழும் தெற்கு தேயும் என்ற கவலை வேண்டாம் ......

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-201909:37:08 IST Report Abuse

Mani . V"நாங்கள் ஏற்கனவே இருந்த நிதிகளை கொள்ளையடித்து விட்டதால், வீண்விரயம் செய்து விட்டதால், நிலுவை தொகைகளை விடுவிப்பதில், மத்திய அரசு செய்யும் தாமதம், மாநிலத்தின் நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது".

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X