உதவாக்கரை பட்ஜெட்: ஸ்டாலின் கோபம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உதவாக்கரை பட்ஜெட்
ஸ்டாலின் கோபம்

சென்னை: ''மக்களுக்கு, எந்த வகையிலும் பயன்பட முடியாத, ஒரு உதவாக்கரை, பட்ஜெட்டாக உள்ளது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

Budget,D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,பட்ஜெட்,ஸ்டாலின்



ஸ்டாலின், தி.மு.க., தலைவர், : சங்கீத வித்வான் பாடுவதுபோல, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், திரும்ப திரும்ப, சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். இந்த பட்ஜெட், ஏழை மக்களுக்கு, எந்த வகையிலும் பயன்பட முடியாத, ஒரு உதவாக்கரை, பட்ஜெட்டாக அமைந்துள்ளது.


வரவுக்கு, செலவு செய்ய வேண்டிய அரசு, வாங்கிய கடனுக்கு, வட்டி செலுத்துவதை, இந்த பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான, எந்த அறிவிப்பும் இல்லை. 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. வருவாயை பெருக்க, எந்த அறிவிப்பும், பட்ஜெட்டில் இல்லை.


வெறும் ஏட்டு சுரைக்காயாக உள்ளது. விளம்பரத்திற்காக, நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, அதை செலவே செய்யாமல், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தோல்வியை, இந்த அரசு அடைந்துள்ளது. நிதி நிலையை பொறுத்தவரை, திவாலான கம்பெனி போல, அரசு உள்ளது.


ராமசாமி, சட்டசபை காங்., தலைவர் : தமிழக மக்களை ஏமாற்றக்கூடிய பட்ஜெட். இதில், எந்தவித நன்மையும் இல்லை. இதை முழுமையாக, காங்கிரஸ் ஏற்கவில்லை.


தினகரன், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர்: பற்றாக்குறையும், கடன்களும் நிரம்பி வழியும் பட்ஜெட்டை, பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். பல இடங்களில், மத்திய அரசு, எப்படி எல்லாம், தமிழகத்தை ஓரவஞ்சனை செய்து வருகிறது என கூறி, புலம்பி உள்ளார். வருவாயை பெருக்குவதற்கான, ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் எதுவும், பட்ஜெட்டில் இல்லை. கடன், 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கழுத்தை நெரிக்கும் கடன்களுக்கான வட்டியாக மட்டும், ஆண்டுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தப்படுகிறது.


தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சி: விவசாயிகள் கடன் ரத்து, மதுக் கடைகள் குறைப்பு குறித்து, பட்ஜெட்டில் எதுவும் தெரிவிக்கப்படாதது, ஏமாற்றம் அளிக்கிறது. மாசி மாத குளிரை எதிர்பார்த்த நிலையில், பங்குனி புழுக்கத்தை, பட்ஜெட் தந்துள்ளது.


தமிழிசை, தமிழக பா.ஜ., தலைவர்: பட்ஜெட்டை, குறை கூற வேண்டும் என்பதற்காக, ஸ்டாலின், 'விவசாயிகளுக்கு எதுவுமில்லை, விவசாயத்திற்கு ஒன்றுமில்லை' என, கூறியுள்ளார். பயிர் பாதுகாப்பிற்கு மட்டும், 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்: சென்னையில், இரண்டு லட்சம் வாகனங்களை நிறுத்தும் வகையில், பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டம், அந்தப் பகுதிகளில், நெரிசலை அதிகரிக்கவே வழிவகுக்கும்.


சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், 500 மின்சார பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும், சென்னை மெட்ரோ ரயில் சேவை, வண்டலுார் வரை நீட்டிக்கப்படும் என்பதும், வரவேற்கப்பட வேண்டியவை.


Advertisement

வைகோ, ம.தி.மு.க., பொதுச்செயலர்: உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அறிவிப்பு இல்லாதது, அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் காட்டுகிறது. ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கு, எந்த அறிவிப்பும் இல்லை. மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப, புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் எதுவும் இல்லை.


முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்: மக்களின் எதிர்பார்ப்புகள் எதையும் பிரதிபலிக்கவில்லை. அரசுத் துறைகளின், நடைமுறை வேலைகளின், விபரத் தொகுப்பாகவே, நிதியமைச்சரின் உரை அமைந்திருக்கிறது.

'அரசு எதிர்கொண்ட கடினமான சவால்!'

பட்ஜெட் உரையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழக அரசு, அமைதியை நிலைநாட்டி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சமூகப் பொருளாதார வளர்ச்சியை பெருக்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியை பெருக்கி, கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை ஒழிப்பதற்கான கடினமான சவாலை, அரசு எதிர்கொண்டுள்ளது. நிதிநிலை மேலாண்மை வழுவாமல், சவால்களுக்கு தீர்வு கண்டு, மக்களின் நலனை மேம்படுத்தும் வகை யில், பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. சமச்சீரான சமூகப் பொருளாதார மேம்பாட்டை, தமிழ் சமுதாயம் பெறவும், ஏழைகள் வாழ்வில் முன்னேறவும், அனைத்து நலத் திட்டங்களையும், செம்மையாக செயல்படுத்தி, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக, தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு, அவர் கூறினார்.



Advertisement

வாசகர் கருத்து (29+ 87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
11-பிப்-201911:02:10 IST Report Abuse

Nisha Rathiஸ்டாலின் தனது பெயரை பட்ஜெட் மூலம் தெளிவாக கூறியுள்ளார் உதவாக்கரை என்று உண்மை சுடாலின் நீ உதவாக்கரை தான்

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
09-பிப்-201921:36:46 IST Report Abuse

Tamilselvanதரம் கேட்ட நாலாந்தர பேச்சு . சுடலை திருந்தவே மாட்டார் .

Rate this:
s t rajan - chennai,இந்தியா
09-பிப்-201921:33:14 IST Report Abuse

s t rajanதமிழர்களின் மேல் அக்கறை இல்லாமல் கொள்ளையடித்து வாழும் தில்லு முல்லு கலகத்தினரை விட உதவாக்கரை இந்நாட்டில் யாரும் உண்டோ ?

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X