பொது செய்தி

இந்தியா

மே.வங்க போலீசாரின் போலியான உளவு அறிக்கை: அம்பலப்படுத்திய 'ஸ்டிங்' ஆபரேசன்

Updated : பிப் 09, 2019 | Added : பிப் 09, 2019 | கருத்துகள் (40)
Advertisement
BJP,Bengal,rath yatra,போலி,உளவு அறிக்கை

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் அமித்ஷாவின் ரதயாத்திரைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததன் பின்னணியில் மாநில உளவுத்துறையின் பொய்யான அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலையொட்டி மேற்குவங்க மாநிலத்தில் தனது தேர்தல் பிரசார ரத யாத்திரையை பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 2018 டிச.,7, 9 மற்றும் டிச.,14 ஆகிய தேதிகளில் நடத்திட திட்டமிட்டார். இந்த யாத்திரைக்கு அனுமதித்தால் மத நல்லிணக்கத்திற்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் வித்திடும் என மாநில அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து பா.ஜ., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அப்போது மேற்குவங்க அரசு தனது மாநில உளவுத்துறை போலீசாரின் அறிக்கையை சமர்பித்தது.இந்நிலையில் மாநில போலீசாரின் உளவுத்துறை அறிக்கை உண்மையானது தானா என்பது குறித்து இந்தியா டுடே டி.வி.சானல் '' ஸ்டிங் ஆபரேசன்'' செய்தது.


பொய்யான அறிக்கை

இது குறித்து மாநில போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை இந்தியா டுடே டி.வி.சானலின் ஸ்டிங் ஆபரேசன் தெரிவித்துள்ளதாவது; மேற்குவங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்ட எஸ்.பி. கூறுகையில், பா.ஜ. ரத யாத்திரை திட்டம் குறித்தும், மாநில உளவு அறிக்கை விவரம் எதுவும் எங்களிடம் வரவில்லை என்றும், ஹவுரா மாவட்ட ரூரல் எஸ்.பி. கூறுகையில், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மேலிடத்தில் இருந்து எந்த வித சுற்றறிக்கையும் வரவில்லை என்றும், உளளூர் போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான பழைய வழக்கு விவர பதிவுகளை வைத்து அவசர கதியில் பொய்யான அறிக்கை தயாரிக்குமாறு மேலிடத்தில் இருந்து தங்களுக்கு அழுத்தம் தரப்பட்டது என்றும் அந்த ஸ்டிங் ஆபரேசன் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் மூலம் பா.ஜ.மீது மம்தாவிற்கு ஏற்பட்ட கோபம் காரணமாகவே பா.ஜ., ரத யாத்திரைக்கு தடை விதித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
12-பிப்-201912:38:16 IST Report Abuse
Ramamoorthy P முறைகேடாக எல்லை தாண்டி வந்த வங்க தேசிகளை ஓட்டு வங்கியாக பயன்படுத்துபவர். இவருக்கு நாட்டு பாதுகாப்பு குறித்து எந்தவிதமான கவலையும் கிடையாது. இவரை பதவியிலிருந்து இறக்கி வங்கதேசத்துக்கு விரட்டவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Subbiah.N - Karaikudi.,இந்தியா
09-பிப்-201919:07:26 IST Report Abuse
Subbiah.N மேற்கு வங்க மக்கள் ஏன் இவ்வளவு முட்டாளாய் இருக்கிறார்கள்.ஒரு அயோக்கிய அரசியல்வாதியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதின் காரணம் என்ன?
Rate this:
Share this comment
Ramesh - Bangalore,இந்தியா
11-பிப்-201918:19:50 IST Report Abuse
RameshSame like TN people for last 50+ years who were /are supporting only DMK and ADMK...Most corrupted party next to Congress in India.......
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
09-பிப்-201914:57:59 IST Report Abuse
Ramamoorthy P வளரும் பாஜகவின் செல்வாக்கால் மம்தா மறை கழண்டு திரிகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X