அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்வி யாதவுக்கு உத்தரவு

Updated : பிப் 09, 2019 | Added : பிப் 09, 2019 | கருத்துகள் (33)
Advertisement
அரசு பங்களாவை காலி செய்ய தேஜஸ்வி யாதவுக்கு உத்தரவு

புதுடில்லி: 'பீஹார் மாநில, முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, தேஜஸ்வி யாதவ், அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்தபோது, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த, தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவி வகித்தார்.




நோட்டீஸ்அப்போது அவருக்கு, பாட்னாவில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன்.பின், பா.ஜ., வுடன் கூட்டு சேர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து, துணை முதல்வர் பதவி பறிபோன, தேஜஸ்வி யாதவ், அரசு பங்களாவை காலி செய்யும்படி, மாநில அரசு சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.அவர் காலி செய்ய மறுத்ததால், பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், அரசு பங்களாவை காலி செய்யும்படி, தேஜஸ்வி யாதவுக்கு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தேஜஸ்வி யாதவ் மேல் முறையீடு செய்தார். தள்ளுபடிஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, தேஜஸ்வி யாதவின் மனுவை தள்ளுபடி செய்தது.'அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும்; நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbiah.N - Karaikudi.,இந்தியா
09-பிப்-201918:45:36 IST Report Abuse
Subbiah.N அரசியல்வாதிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் ஒரு மாத காலம் கெடு விதித்து வீட்டைக் காலி செய்ய சட்டங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் காலி செய்யவில்லை என்றால் வலுக்கட்டாயமாக காலி செய்யவேன்டும்.
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
09-பிப்-201917:31:15 IST Report Abuse
Viswam வீட்டை காலி பண்ண சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. தேர்தல் வர்றதால அவரை வீட்டை விட்டு மோடி அரசு விரட்டறாங்கன்னு ஒரு கருத்துவேற லாலு ரத்தமாச்சே, கோர்ட் வழியாக ஆப்பு அடித்தால்தான் சரிவரும். இந்த ரத்தம் இப்படின்னா, இதைவிட கேவலம் முலாயம் ரத்தம் அகிலேஷ் யாதவ் செஞ்சது. வீட்டை உடைச்சு தொம்சம் செஞ்சு முடிஞ்சா ரிப்பேர் பண்ணுங்கன்னு சொல்லிட்டு லக்னோவ் அரசாங்க வீட்டை காலி செஞ்சாரு. இவங்களெல்லாம் நம்ம எதிர்காலமாம், மோடியை ஒழிக்க மெகா கூட்டணி யாம். ஜனங்க எல்லாத்தயும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
09-பிப்-201917:13:41 IST Report Abuse
SaiBaba லாலுவிற்கு மகனாகப் பிறந்து விட்டு இவன் நல்லவனக வாழ வாய்ப்பில்லை. இவன் நேர்வழியைக் கடைபிடித்தால் லாலு இவனைக் கொன்றிருப்பார். சுடலையின் கதையும் அதேதான். குடும்பங்களிலேயே, மொத்த குடும்பமும் அராஜக வழியில் செல்லும் போது ஒருவர் தப்பிப்பிழைக்க வாய்ப்பில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X