கோல்கட்டா கமிஷனரிடம் சி.பி.ஐ.,விசாரணை: வக்கீல் படை பரிவாரங்களுடன் வந்தார்

Updated : பிப் 09, 2019 | Added : பிப் 09, 2019 | கருத்துகள் (19)
Advertisement

ஷில்லாங்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம் மேகாலயா ஷில்லாங் நகரில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையை துவக்கினர். விசாரணைக்காக கமிஷனர் ராஜிவ்குமார் தனது வக்கீல் படை பரிவாரங்களுடன் வந்தார்.






சாரதா சிட்பண்ட் பண மோசடி வழக்கு விவகாரம் தொடர்பாக கடந்த 3 ம்தேதி கோல்கட்டா சென்ற சிபிஐ அதிகாரிகளுக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வாரன்ட் உள்ளதா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சிலரை சிறை வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மம்தா தர்ணா நடத்தினார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நிலைமையை சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.





இதனையடுத்து கமிஷனர் ராஜிவ்குமார் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று (பிப்.9) மீண்டும் கமிஷனர் மேகலாயா ஷில்லாங் சென்று ஆஜரானார். அவருடன் வக்கீல்கள் பலர் வந்திருந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் கமிஷனரிடம் விசாரித்து வருகின்றனர்.


சரியாக விசாரிக்காத கமிஷனர்


கமிஷனர் சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான ஆவணங்களை அழித்தார் என்பது முக்கிய குற்றச்சாட்டு. தொடர்புடைய குற்றவாளிகளை கமிஷனர் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் சிபிஐ தரப்பு குற்றச்சாட்டு.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Govindarajan. - chennai ,இந்தியா
09-பிப்-201919:30:07 IST Report Abuse
S.Govindarajan. இந்த அதிகாரியை கைது செய்ய உச்சநீதி மன்றத்தை அணுக வேண்டும். மம்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Subbiah.N - Karaikudi.,இந்தியா
09-பிப்-201918:24:13 IST Report Abuse
Subbiah.N மம்தா மிரட்டித்தான் அனுப்பியிருப்பார். அவருக்குத்தான் சந்திர பாபு ,ஸ்டாலின் போன்ற உத்தமர்கள் ஆதரவு கொடுக்கிறார்களே.
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
09-பிப்-201917:54:37 IST Report Abuse
S.kausalya அவர் குடுமி இவர் கையில், இவர் குடுமி அவர் கையில் என நினைக்கிறேன். இருந்தும் அவரை நம்பாமல் வக்கீல்களை உடன் அனுப்பி வைத்துள்ளார் மம்தா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X