சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

புலம்பல் வந்து விட்டது முலாயமுக்கு!

Updated : பிப் 10, 2019 | Added : பிப் 09, 2019
Advertisement
புலம்பல் வந்து விட்டது முலாயமுக்கு!

'கர்நாடக முதல்வர் குமாரசாமி, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான, தேவ கவுடாவுக்கு, எவ்வளவு மரியாதை தருகிறார். நமக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ' என, கவலைப்படுகிறார், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரான, முலாயம் சிங் யாதவ்.நாட்டில், தற்போதுள்ள மூத்த அரசியல்வாதிகளில், முலாயமும் ஒருவர். அவருக்கு, 79 வயதாகிறது. உத்தர பிரதேச முதல்வராக, மூன்று முறை பதவி வகித்தவர். மத்திய அமைச்சராகவும் இருந்தார்.மாயாவதி உள்ளிட்ட, எத்தனையோ அரசியல்வாதிகளை சமாளித்த முலாயம் சிங், தன் மகன், அகிலேஷ் யாதவிடம் தோற்று விட்டார். சமாஜ்வாதி கட்சியை கைப்பற்றிய அகிலேஷ் யாதவ், தந்தையை முழுவதுமாக ஓரம் கட்டினார்.தற்போது லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, எல்லா கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன. கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின், பகுஜன் சமாஜுடன், கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு விவகாரத்தை எல்லாம் முடித்து விட்டது.ஆனால், இதுபற்றி, கட்சியின் நிறுவனரும், தன் தந்தையுமான, முலாயமிடம், ஒருமுறை கூட கலந்தாலோசிக்கவில்லை, அகிலேஷ். முடிவுகளை எல்லாம், அவராகவே எடுத்து விட்டார்.'எனக்கு, இதற்கு மேலும் அவமானம் தேவையா... அரசியலும் வேண்டாம்; எந்த பதவியும் வேண்டாம், ஆளை விடுங்கள்' என, புலம்புகிறார், முலாயம் சிங்.
இரக்கம் காட்டுங்களேன்!
'பகைவர்களையும், நண்பர்களாக மாற்றும் வித்தை, எங்கள் தலைவர் அமித் ஷாவுக்கு மட்டுமே கைவந்த கலை' என, பெருமிதப்படுகின்றனர், பா.ஜ.,வினர். சமீபத்தில், ஆந்திர மாநிலத்தில், சூறாவளி சுற்றுப் பயணம் செய்தார், அமித் ஷா. இங்கு, லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளதால், கிராமம் கிராமமாகச் சென்று, வாக்காளர்களை சந்தித்து, ஆதரவு திரட் டினார். அமித் ஷாவின் இந்த சுற்றுப் பயணத்தில், அவருடன் வந்த அனைத்து நிர்வாகிகளுமே, காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு வந்தவர்கள் தான்.அமித் ஷா, பஸ் யாத்திரையை துவக்கி வைத்தபோது, அதற்கு தலைமை வகித்தவர், பா.ஜ., மாநில தலைவர், லட்சுமி நாராயணா. இவர், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.ஆந்திராவில், காங்., ஆட்சி நடந்தபோது, அமைச்சராக பதவி வகித்தவர். அமித் ஷா அழைப்பை ஏற்று, பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.பா.ஜ., பொதுக் கூட்டங்களில், அமித் ஷாவின் உரையை, தெலுங்கில் மொழி பெயர்த்தவர், முன்னாள் முதல்வர், என்.டி.ராமாராவின் மகள், புரந்தேஸ்வரி. இவரும், காங்கிரசில் இருந்து வந்தவர் தான். மன்மோகன் சிங் தலைமையிலான அரசில், அமைச்சராக இருந்தவர்.இதுதவிர, காங்கிரசில் இருந்து, பா.ஜ.,வுக்கு தாவிய பல தலைவர்களும், இந்த சுற்றுப் பயணத்தில், அமித் ஷாவுக்கு பக்க பலமாக இருந்தனர்.ஆந்திராவில் உள்ள காங்., கட்சியினரோ, 'எங்கள் நிர்வாகிகள் எல்லாரையும், உங்கள் பக்கம் இழுத்தால், நாங்கள் எப்படி கட்சி நடத்த முடியும்? கொஞ்சம் இரக்கம் காட்டுங்கப்பா...' என, கதறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X