சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : பிப் 10, 2019 | Added : பிப் 09, 2019 | கருத்துகள் (1)
Advertisement
'டவுட்' தனபாலு

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நிலுவை தொகைகளை விடுவிப்பதில், மத்திய அரசு செய்யும் தாமதம், மாநிலத்தின் நிதி நிலையில், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
டவுட் தனபாலு: நிதி நிலை பாதித்தாலும் பரவாயில்லை... உறவு பாதிக்கக் கூடாது என்பதால் தானே, அழுத்தம் தராமல் இருந்தீங்க... இது தொடர்பா, காரசாரமாக கேள்வி எழுப்பின, தம்பிதுரையையும், 'அது, கட்சிக் கருத்தல்ல'ன்னு, கழற்றி விட்டீங்க... ஆமா, நிலுவை தொகையையே பெற முடியாத நீங்க, இணக்கமாக இருந்து, புதிதாய் எதைச் சாதிப்பீங்க என்ற, 'டவுட்'டுக்கு, என்ன பதில் தயாரிக்கப் போறீங்க...!
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்: 'மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பாட்னா பல்கலைக்கு, மத்திய பல்கலை அந்தஸ்து தருவோம்' என, ராகுல் கூறியுள்ளார். மத்தியில், காங்., தலைமையிலான அரசு இருந்தபோது, அந்த அந்தஸ்தை ஏன் தரவில்லை?டவுட் தனபாலு: இது தானே அரசியல்வாதிகளின் பிறவிக் குணம்... இப்போ, உங்களையே எடுத்துக்கங்க... காங்., கூட்டணியில் இருந்தவரை, 'மத்திய, பா.ஜ., அரசு, பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கணும்'னு, கடுமையாக வலியுறுத்தி வந்தீங்க... இப்போ, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததும், அந்தக் கோரிக்கையையே மறந்துட்டீங்களே... அது மாதிரித் தான், இதுவும் என்பதில், 'டவுட்'டே வேண்டாம்...!
வனத்துறை அமைச்சர், சீனிவாசன்: காவிரி நீர், திண்டுக்கல், நத்தம் பகுதிக்கு முறையாக வந்து சேராததற்கு காரணம், தி.மு.க., தான்.
டவுட் தனபாலு: ஆட்சியை விட்டு, தி.மு.க., இறங்கி, எட்டு வருஷம் ஆகப்போகுது... இன்னமும் அவர்களையே குறைகூறிக் கொண்டிருந்தால் எப்படி... நீர்நிலைகள் துார் வாருதல் மற்றும் குடிமராமத்துப் பணிகளுக்கு, பல கோடி ரூபாயை ஒதுக்கினீங்களே... அது, எங்கே ஒதுங்குச்சு என்பது தானே, கடைமடை விவசாயிகளின், 'டவுட்'டாக இருக்கு...!-----
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ்: முசாபர்பூர் காப்பக சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கை, டில்லி நீதிமன்றத்துக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு, பீஹாரை ஆளும் நிதிஷ் குமார் அரசு தான் காரணம். ஆனால், இதற்கெல்லாம், நிதிஷ் ஒரு போதும் வெட்கப்பட மாட்டார்.
டவுட் தனபாலு: 'வெட்கம், மானம், ரோஷம், நேர்மை பத்தி, யாரெல்லாம் பேசுவது என்பதற்கு, நாட்டில் ஒரு வரைமுறையே இல்லாமப் போயிடுச்சு... ஊழல் வழக்கில் ஜாமினில் வந்தவர்களும், பல வழக்குகளின் தீர்ப்புகளை எதிர்நோக்கி நிற்பவர்களும், இதைப் பத்தி எல்லாம் பேசலாமா'ன்னு, எவரும், 'டவுட்' எழுப்பினால், யாருக்குங்க சங்கடம்...!

தி.மு.க., தலைவர், ஸ்டாலின் மகன் உதயநிதி: கருணாநிதி அல்லது ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று தான், மக்கள் ஓட்டு போட்டனர். இ.பி.எஸ்., முதல்வராக வந்தது எப்படி? மக்கள் விரும்பாத முதல்வர், பதவியில் நீடிப்பது, தமிழகத்தில் மட்டும் தான்.

டவுட் தனபாலு: 'தாத்தா கருணாநிதி முதல்வராக வரணும்னு தான், 2016ல், மக்கள் ஓட்டுப் போட்டாங்க... தற்போது ஏதாவது எதிர்பாரா வகையில், இந்த ஆட்சி, பெரும்பான்மையை இழந்தால், தந்தை ஸ்டாலின், முதல்வராக முயற்சிக்கக் கூடாது... பொதுத் தேர்தலைச் சந்தித்து தான், அந்த நாற்காலியில் அமரணும்'னு, சொல்ல வருவதாக எடுத்துக்கலாமா என்பது தான், என்னோட, 'டவுட்!'
பிரதமர் நரேந்திர மோடி: விமானப்படை வலுவாக இருப்பதை, காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால் தான், 'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தை எதிர்க்கிறது.
டவுட் தனபாலு: இது தொடர்பாக, நீங்க முதற்கொண்டு, மத்திய அமைச்சர்கள் வரை, பலரும் விளக்கம் அளித்தும், 'ரபேல் விவகாரத்தில் தவறு நடந்திருக்கு' என்ற பல்லவியை, ராகுல் விடுவதாக இல்லை... நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி, எது எதற்கோ வழக்குப் போட்டு, வாயடைக்க வைக்கும் நீங்க, இந்த விவகாரத்தில், ராகுலை விட்டு வைத்திருப்பது ஏன்கறது தான், மக்களின், பெரும், 'டவுட்'டாக இருக்கு...!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-பிப்-201910:37:04 IST Report Abuse
D.Ambujavalli சும்மா சும்மா ராகுல் கூவுவதும் நீங்களும் 'அவர் செத்த குதிரையை அடிக்கிறார்' என்று கருத்துக்களை அல்லி வீசுவதும் எதோ ஸ்கூல் பிள்ளைகள் 'mun பேச்சு கா நீ மட்டும் யோக்கியமா?' என்று லாவணி பாடுவதுபோதான் இருக்கிறது பேசாமல் கோர்ட்டில் சந்தித்து அவர் வாயை அடைக்க ஏன் தயக்கம்? வர்மாவையெல்லாம் சாட்சிக்கு அழைத்துசிடுவார்களே என்ற பயமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X