பொது செய்தி

இந்தியா

கோல்கட்டா கமிஷனரிடம் முதல் நாளில் 8 மணி நேரம் விசாரணை: நாளையும் தொடரும்

Updated : பிப் 09, 2019 | Added : பிப் 09, 2019 | கருத்துகள் (7)
Advertisement

ஷில்லாங்: சாரதா சிட்பண்டு மோசடி தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமாரிடம், மேகாலயா தலைநகர் ஷில்லாங் நகரில் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். நாளையும் (பிப்.,10) விசாரணை நடைபெற உள்ளது.சாரதா சிட்பண்ட் பண மோசடி வழக்கு விவகாரம் தொடர்பாக கடந்த 3 ம்தேதி கோல்கட்டா சென்ற சிபிஐ அதிகாரிகளுக்கு போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை. வாரன்ட் உள்ளதா என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சிலரை சிறை வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மம்தா தர்ணா நடத்தினார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நிலைமையை சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.


இதனையடுத்து கமிஷனர் ராஜிவ்குமார் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து கமிஷனர், மேகலாயா தலைநகர் ஷில்லாங் சென்று, காலை 11. 30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவருடன் வக்கீல்கள் பலர் வந்திருந்தனர். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 8 மணி நேரம் விசாரணை நடந்தது. பின்னர் இரவு 7.30 மணியளவில் கிளம்பி சென்றார். அவரிடம் நாளையும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
09-பிப்-201922:10:20 IST Report Abuse
A.George Alphonse Ayyo Pavam.Hereafter all the Political Parties who are Mega Koottani with the CM of WB will slowly come out one by one and finally only the CM of WB will remain alone before the Lokh Sabha election of 2019 without any doubt.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
09-பிப்-201921:45:10 IST Report Abuse
வல்வில் ஓரி அரை மணி நேரத்துக்கு ஒரு தடவ குண்டு இல்லாத சோடா குடுத்து உண்மையை புடு குங்க அதே சோடா ரெண்டு அவரோட தலைவியை குடிக்க சொல்லி குடுத்து வுடுங்க
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
09-பிப்-201921:36:23 IST Report Abuse
Devanatha Jagannathan இவனை கிடுக்கி பிடி போட்டு விசாரிச்சு மும்தாவின் வண்டவாளங்களை வெளிகொண்டுவரணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X