பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி அருணாச்சல் பயணத்திற்கு சீனா எதிர்ப்பு: இந்தியா பதிலடி

Updated : பிப் 09, 2019 | Added : பிப் 09, 2019 | கருத்துகள் (33)
Advertisement

பீஜிங்: பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதற்கு, பதிலடி கொடுத்துள்ள நமது வெளியுறவு அமைச்சகம், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனக்கூறி உள்ளது.







வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதனால் நமது தலைவர்கள் அருணாச்சல பிரதேசம் செல்லும் போதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அருணாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, அங்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். மேலும், மாநிலத்திற்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமானம் மற்றும் மின்சாரம் என பல வசதிகள் பா.ஜ., ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய அரசு மாநிலத்தை புறக்கணித்ததாக கூறினார்.






பிரதமரின் பயணம் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: இந்தியா - சீனா எல்லை பிரச்னையில் எங்களது நிலைமை மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளது. அருணாச்சல பிரதேசம், இந்தியாவிற்கு சொந்தமானது என்பதை சீன அரசு அங்கீகரிக்கவில்லை. இந்தியா சீனா எல்லையில் உள்ள கிழக்கு பகுதிக்கு எந்த தலைவர்கள் சென்றாலும் நாங்கள் எதிர்ப்போம். இந்திய தரப்பானது, இரு நாட்டு நலன்களை மனதில் வைப்பதுடன், அதனை மதிக்க வேண்டும். எங்களின் கவலைகளை புரிந்து கொண்டு, எல்லை பிரச்னையில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் எனக்கூறினார்.

இது தொடர்பாக நமது வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்து வெளியிட்ட அறிக்கை: அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இந்திய தலைவர்கள் மற்ற பகுதிகளுக்கு செல்வதை போல், அருணாச்சல பிரதேசத்திற்கும் சென்று வருகின்றனர். இதனை பல தருணங்களில் சீனாவிடம் தெரிவித்து விட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
10-பிப்-201910:07:03 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ மணி ஐயர் /சசி தரூர் கீழ்த்தரமா பேசுனாங்களா ? ok அப்போ இவரும் பேசலாம்.... //// தமிழ்வேல் ..... இந்தக் கிண்டலை ரசிச்சேன் ...... ரபேல் விமானத்தை யாரும் 2016 வரைக்கும் வாங்கல .... அதனால நாமும் வாங்கக் கூடாது ..... இதுக்கும் மேல சிந்திச்சுராதீங்க .... அலர்ஜி ......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-பிப்-201914:10:43 IST Report Abuse
தமிழ்வேல் இதைப்பத்தி விபரமா பலதடவை எழுதிட்டேன் ஜீஜி. 25 வருட பழைய டேகினாலஜி. பலநாடுகளால் "25 வருடங்களாக மறுக்கப்பட்ட" விமானம். காங் ஒப்பத்ததிலிருந்து எழுதி வருகின்றேன். இதை புரிந்து கொள்வது சிலருக்கு சிரமம்தான். // ரபேல் விமானத்தை யாரும் 2016 வரைக்கும் வாங்கல .... அதனால நாமும் வாங்கக் கூடாது ..... இதுக்கும் மேல சிந்திச்சுராதீங்க .... அலர்ஜி ......//...
Rate this:
Share this comment
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
10-பிப்-201909:06:41 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி சீனா தீபத்தை ஆக்கிரமித்தை இந்தியா ஏற்றுக்கொள்ளக் கூடாது. இது ஒன்றுதான் சீனாவை வழிக்கு கொண்டுவர ஒரே வழி.
Rate this:
Share this comment
Cancel
Tamil Nesan - Chennai,இந்தியா
10-பிப்-201908:46:45 IST Report Abuse
Tamil Nesan வெளிநாட்டு கொள்கையில் இன்றளவும் இந்தியாவை தலை நிமிர வைத்திருப்பவர் மோடி. காங்கிரசால் வெளிநாட்டிற்கு பணத்தை சுருட்டி கொண்டுதான் செல்ல முடிகிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X