பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
திட்டவட்டம்!
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல்
சீனாவுக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

புதுடில்லி: வட கிழக்கு மாநிலமான, அருணாச்சல பிரதேசத்துக்கு, பிரதமர் மோடி நேற்று சென்றார். இதற்கு, அண்டை நாடான சீனா, கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, 'இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி அருணாச்சல்' என, வெளியுறவு அமைச்சகம், சரியான பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா, சீனா, அருணாச்சல பிரதேசம்வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, சீனா, பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு, இந்தியா பல முறை ஆதாரபூர்வமாக பதில் அளித்தும், சீனா தன் புலம்பலை நிறுத்தவில்லை.அருணாச்சல பிரதேசத்துக்கு, ஜனாதிபதி, பிரதமர் என தலைவர்கள் யார் சென்றாலும், சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைக்க, அருணாச்சல பிரதேசத்துக்கு நேற்று சென்றபோதும், சீனா வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது பற்றி, சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர், ஹுவா சுன்யிங், சீன வெளியுறவு அமைச்சக இணையதளத்தில் கூறியிருப்பதாவது: சீனா - இந்தியா இடையிலான எல்லைப் பிரச்னையில், சீனாவின் நிலை தெளிவாக, உறுதியாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை, இந்தியாவின் பகுதியாக, சீனா ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. அங்கு, இந்திய தலைவர்கள் யார் சென்றாலும், சீனா தன் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இருநாடுகளின் நலன் கருதி, இந்தியா செயல்பட வேண்டும். சீனாவின் நிலைக்கு, இந்தியா மதிப்பளிக்க வேண்டும். இந்தியா - சீனா இடையிலான நல்லுறவு தொடர வேண்டும். அதை பாதிக்கும் வகையில், இந்தியா பிரச்னை ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கு, இந்தியா தக்க பதிலடி தந்துள்ளது.


வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு செல்வது போல், அருணாச்சலுக்கு, ஜனாதிபதியும், பிரதமரும் செல்கின்றனர். இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி அருணாச்சல் என்பது, சீனாவிடம் பல முறை ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், சீனா வீண் பிடிவாதம் செய்கிறது. அருணாச்சலுக்கு இந்திய தலைவர்கள் செல்வதை, யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அறிக்கையில்கூறப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே, இதுவரை, 21 முறை, எல்லை பிரச்னை பற்றி பேச்சு நடத்தியும், தீர்வு காணப்படவில்லை.

ரூ.4,000 கோடி திட்டங்கள் :

அருணாச்சல பிரதேச தலைநகர், இடாநகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 4,000 கோடி ரூபாய் திட்டங்களுக்கு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அருணாச்சல பிரதேசத்தில் முதல்வர், பெமா காண்டு தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், இடாநகருக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, ஹொல்லோங்கி பகுதியில், பசுமை விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார். லோஹித் மாவட்டத்தில், ௧௨௫ கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட, விமான நிலையத்தை திறந்து வைத்தார். அருணாச்சல பிரதேசத்துக்கான புதிய, துார்தர்ஷன் சேனலான, 'டிடி அருண் பிரபா' வையும், மோடி துவக்கி வைத்தார். டிக்ராங் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள, 110 மெகாவாட் நீர் மின் ஆலையையும், பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜோட் பகுதியில், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான இந்தியக் கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டியதுடன், 50 சுகாதார மையங்களையும், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் திறந்து வைத்தார். இத்திட்டங்களின் மதிப்பு, 4,000 கோடி ரூபாய்.


'மக்கள் பாடம் புகட்டுவர்' :

திரிபுரா மாநிலம்அகர்தலாவில் நடந்த, பா.ஜ., கூட்டதில், பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகளுக்கு, இப்போது ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது. என்னை எப்படியாவது திட்டி ஏளனம் செய்து, கேவலப்படுத்த வேண்டும். இதற்காக, ஒரு ஒலிம்பிக் போட்டியே நடக்கிறது. ஊழலில் சிக்கி திளைத்து, அரசியலில் கலப்படம் செய்த கட்சிகள், டில்லியிலும், கோல்கட்டாவிலும் ஒன்று சேர்ந்து, கைகுலுக்கி கொள்கின்றன. லோக்சபா தேர்தலில், இவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement'பிரித்தாளும் சூழ்ச்சி' :

அசாம் மாநிலம், சங்சாரியில் நடந்த, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: டில்லியில், 'ஏசி' அறைக்குள் இருந்து சிலர், குடியுரிமை மசோதா பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு, வட கிழக்கு மாநில மக்கள் மீது, அக்கறை இல்லை. வெளிநாட்டில் இருந்து, வட கிழக்கு மாநிலங்களில் புகுந்து, இங்குள்ள வளத்தை சுரண்டுவோர் யார் என, அனைவருக்கும் தெரியும். ஊடுருவலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெறாது. இவ்வாறு அவர் பேசினார்.

கறுப்பு கொடி :

அசாமில் ஊருவிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் பொருட்டு, அம்மாநிலத்தில் குடிமக்கள் தேசிய பதிவேடு தயாரிக்கப்பட்டது. இதன்படி, குடியுரிமை மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து, ஆறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் ஹிந்துக்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு, குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அசாம் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. வட கிழக்கு மாநிலங்களில், இரண்டாவது நாளாக நேற்று சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடிக்கு, பல இடங்களில் கறுப்பு கொடி காட்டப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
10-பிப்-201918:06:40 IST Report Abuse

Viswamஅருணாச்சல பிரதேஷ் பகுதியை சீனா சைலெண்டா தூக்கினத்துல காங்கிரெஸ்யும் கம்யூனிஸ்ட்டையும் திட்டக்கூடாதாம், அங்கே நடக்குற கூத்தெல்லாம் தெரியாம சீன புகழ் வேற ஒருத்தர் பிரச்சார வீடியோ லெவெலுக்கு பாடறாரு ஒருத்தர் இங்கே எங்கேயும் இல்லாத சென்சார்ஷிப் /கண்காணிப்புக்கு பேர் போன இடம் சீனா. பட்டிதொட்டியெல்லாம் போஸ்டர் அடிச்சு எதிர்காலமே வருக, சூரியனே எழுந்திரு, தமிழே வருக இன்னுசொன்னா காணாமப்போவாங்க. எந்த IP அட்ட்ரஸுலிருந்து அரசுக்கு எதிரே கருத்து வருதோ ஆளை புடிச்சு காயடிச்சு மங்கோலியா சைடு அனுப்பிடுவாங்க.இஸ்லாம் மதத்தை எவ்வளவு முடியுமோ அடக்கி வச்சிருக்காங்க, சர்ச்சியெல்லாம் கண்காணிக்கறாங்க. அட ஒரு கூகிள் கூட கிடையாது. சினிமா எத்தனையோ தடை செஞ்சு இருக்காங்க . எல்லை பிரச்சினை ஊருக்குள்ள நம்ம எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கலாம், ஆனா சீனாக்காரனுக்கு எதிரா அரசுக்கு ஆதரவா இருக்கனும்ன்னு சொன்னதை புரிஞ்சுக்கலை.கடவுள் தான் காப்பாத்தணும்

Rate this:
Antony Raj - tirunelveli,இந்தியா
10-பிப்-201915:52:13 IST Report Abuse

Antony Rajஜப்பான், இந்தியா, வியட்நாம், சவுத் கொரியா, ரஸ்யா, மங்கோலியா, தைவான் மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் சரியான தண்டனை கொடுத்தது மட்டுமில்லாமல், சவுத் சீனா கடல், திபெத் ஆகியவற்றை விடுவிக்க வேண்டும்.

Rate this:
sankar - trichy,இந்தியா
10-பிப்-201915:25:14 IST Report Abuse

sankarபடேல் சிலைக்கு சீனாவில் இருந்து இரும்பு வந்தது. பாகிஸ்தானில் இருந்து கூடத்தான் அரிசி வருது . வியாபாரம் வேறு . நமது நாட்டில் நிலம் வேறு . உங்க இடத்துல கடை போட்ட கடைக்காரரிடம் வாடகை வாங்கிட்டு கடைய கொடுத்துருவீங்களா ???

Rate this:
Anandan - chennai,இந்தியா
10-பிப்-201921:50:23 IST Report Abuse

Anandanஇரும்புத்தாது அதிகம் உற்பத்தி பண்றது இந்தியா அப்புறம் எதுக்கு சீனாவிடம் இருந்து இரும்பு வருது. பக்கோடா பாய்ஸ் கொஞ்சம் உண்மையை தெரிஞ்சுக்கோங்க, உண்மையை பேசுங்க. சிலை பாகங்கள் இங்க செய்யமுடியுமா சீனாவிடம் இருந்து வாங்கினாங்க. இந்த லட்சணத்தில் இந்தியா வளருதாம். ...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X