அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
5+1!
அ.தி.மு.க.,விடம் பா.ம.க., - தே.மு.தி.க., 'டிமாண்ட்'
பா.ஜ., உட்பட ஏழு கட்சிகள் கூட்டணியில் சேர விருப்பம்
சிதம்பரம், கிருஷ்ணகிரியை விட்டுத்தர ராமதாஸ் மறுப்பு

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியை மிஞ்சும் வகையில், மெகா கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., தரப்பில், பல்வேறு கட்சிகளுடன், ரகசிய பேச்சு நடக்கிறது.

பா.ம.க., அதிமுக, தேமுதிக, கூட்டணி

பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை, அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க., - தே.மு.தி.க., தலா ஐந்து தொகுதிகளையும், தலா ஒரு ராஜ்யசபா, 'சீட்'டும் கேட்பதால், கூட்டணியை இறுதி செய்வதில், அ.தி.மு.க.,வுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., சார்பில், தென்சென்னை, மத்திய சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், தென்காசி, பொள்ளாச்சி, பெரம்பலுார், வேலுார், சிவகங்கை, திருநெல்வேலி என, 13 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழிசைக்கு, தென்சென்னை; பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கன்னியாகுமரி;

நயினார் நாகேந்திரனுக்கு, திருநெல்வேலி; வானதி சீனிவாசனுக்கு, திருப்பூர் கேட்கப்பட்டுள்ளது.ஆகியோர், முயற்சித்துகோவையில், பா.ஜ.,விற்கு செல்வாக்கு அதிகம் என்பதால், அதையும் கேட்கிறது. அங்கு போட்டியிட, சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம், மாநில பொருளாளர் சேகர் வருகின்றனர்.

புதிய தமிழகம் கட்சிக்காக, தென்காசி; இந்திய ஜனநாயக கட்சிக்காக, பெரம்பலுார்; புதிய நீதிக்கட்சிக்காக, வேலுார் தொகுதிகளை, பா.ஜ., தரப்பில் கேட்டுள்ளனர். இவற்றில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, தென்சென்னை, பெரம்பலுார், தென்காசி, வேலுார் ஆகிய தொகுதிகளை மட்டும் தர, அ.தி.மு.க., முன்வந்துள்ளது. பா.ம.க., மற்றும் தே.மு.தி.க., சார்பில், தலா, ஐந்து லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா, 'சீட்' கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், பா.ம.க.,வுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி, சிதம்பரம்; தே.மு.தி.க.,விற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலுார் தொகுதிகளை ஒதுக்க, அ.தி.மு.க.,வில் சம்மதம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளுடன், கூட்டணி பேச்சு நடந்து வருகிறது. எத்தனை தொகுதிகள் என்பது, இன்னமும் முடிவாகவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும், எத்தனை தொகுதி என்பது முடிவான பின், அதிகாரப்பூர்வ பேச்சு நடக்கும். அப்போது தான், எந்த தொகுதி என்பது முடிவாகும்' என்றனர்.

Advertisement

கூட்டணிக்கு தடை - இரண்டு தொகுதிகள் :

அ.தி.மு.க., - பா.ம.க., இடையே, கூட்டணி பேச்சில் உடன்பாடு ஏற்பட, இரு தொகுதிகள் தடையாக உள்ளன. வட மாவட்டங்களில், 10 சதவீதத்திற்கும் அதிகமாக, பா.ம.க.,வுக்கு ஓட்டு வங்கியுள்ள, ஆறு லோக்சபா தொகுதிகள் உள்ளன. அவற்றை, இரு கட்சிகளும் சமமாக பிரிப்பது என்றும், ஓட்டு வங்கி குறைவாக உள்ள தொகுதிகளையும், அவ்வாறே பங்கிடலாம் என்றும், அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அதாவது, தர்மபுரி, அரக்கோணம், ஆரணி ஆகிய, மூன்று தொகுதிகள், பா.ம.க.,வுக்கு, சிதம்பரம், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகள், அ.தி.மு.க.,வுக்கு என்று, பேச்சு நடத்தப்பட்டது. இதில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், திருமாவளவனை எதிர்த்து, பா.ம.க., தான் போட்டியிட வேண்டும் என, அக்கட்சி விரும்புகிறது. அதேபோல், கிருஷ்ணகிரி தொகுதியையும், பா.ம.க.,வே கேட்கிறது. இவ்விரண்டையும் விட்டுத் தர, அ.தி.மு.க., முன்வராததால், உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
13-பிப்-201912:29:17 IST Report Abuse

ganapati sbமாயா முலாயமால் உபியில் இழப்பதை விட கூடுதலாக தமிழகத்தில் வென்று விடுவார்கள் மீண்டும் வேண்டும் மோடியின் தனி மெஜாரிட்டி ஆட்சி

Rate this:
Ramalingam chennai - chennai,இந்தியா
13-பிப்-201913:59:00 IST Report Abuse

Ramalingam chennai சூப்பர் சார் ...

Rate this:
Anandan - chennai,இந்தியா
18-பிப்-201905:33:22 IST Report Abuse

Anandanஅண்ணே கணபதி, உறக்கத்தில் இருந்து விழித்தெழுங்கள். உங்களோட கூட்டணி சேர்ந்தால் அவர்கள் ஊழலற்றவர்களா? அடேங்கப்பா என்னெவொரு தேர்தல் கொள்கை. உபதேசம் ஊருக்குத்தான்? ...

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
12-பிப்-201916:52:41 IST Report Abuse

Jaya Ramஇதில் அதிமுக தர சம்மதித்துள்ள தொகுதிகள் நியாயமானதே இதை அப்படியே கூட்டணியாக உருவெடுத்தல் நலம் அனைவருக்கும் ஏற்படும் நன்மை இல்லையேல் அனைவரும் வீழ்வது உறுதி ஏனென்றால் இதில் ஜெயித்து வரும் உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள் இதைவிடுத்து பாஜக தங்கள் தகுதி அறிந்து நடந்தால் ஒரு சீட் உள்ள நிலையில் கூடுதல் எண்ணிக்கையில் அவர்களின் கட்சி எம்பிக்கள் உருவாகுவார்கள்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-பிப்-201911:41:05 IST Report Abuse

இந்தியன் kumarஇந்த தேர்தல் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் ஊழல் அம்மாஜி ஊழல் கலைஞர் இல்லாமல் நடக்கும் மாபெரும் தேர்தல் மக்கள் தங்கள் தீர்ப்பை காசு வாங்காமல் அளிக்க வேண்டும்

Rate this:
Anandan - chennai,இந்தியா
18-பிப்-201905:34:40 IST Report Abuse

Anandanஅதான் உங்க கூட்டணி ஆளு அரசாங்க பணத்தை தேர்தலுக்காக 2000 தராரே, ஏன் தேசபக்தர்கள் கண்ணில் அது விழவே இல்லையா? ...

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X