வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மோடி போட்டி? Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மோடி போட்டி?

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இருந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி, தமிழகம், போட்டி


மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. வரும், ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், பா.ஜ.,வுக்கு பெரும் ஆதரவு இருந்தாலும், தென் மாநிலங்களில், கட்சிக்கு பெரும் வாக்கு வங்கி இல்லை. வரும் லோக்சபா தேர்தலில், பல வட மாநிலங்களில், முந்தைய தேர்தலில் பெற்றதைவிட குறைவான இடங்களில்தான், பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த

நிலையில், 39 தொகுதிகள் உள்ள தமிழகத்தில், வலுவான கூட்டணியை உருவாக்கி போட்டியிட, பா.ஜ., தயாராகி வருகிறது.
'தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வென்றால், வட மாநிலங்களில் குறையும் தொகுதிகளைஈடுகட்ட முடியும்' என, பா.ஜ., நினைக்கிறது. அதனால், பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் போட்டியிடுவது குறித்து ஆராயப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியதாவது: கடந்த, லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி, குஜராத்தின் வதோதரா தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் மோடி வென்றார்; அதில் வாரணாசி தொகுதியின், எம்.பி.,யாக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலிலும், மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கிறோம். வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது. அடுத்ததாக, தமிழகத்தில் இருந்து அவர் போட்டியிடுவது குறித்து ஆராயப்படுகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி, கோவை, திருப்பூரில் ஏதாவது ஒன்றில் அவர் போட்டியிடுவார். இதன் மூலம்,

Advertisement

தமிழகம் உள்பட தென் மாநிலங்களில், பா.ஜ.,வை காலூன்ற வைக்க முடியும் என, கட்சி மேலிடம் நினைக்கிறது. தமிழகம் மீது, மோடிக்கு தனி பார்வை எப்போதும் உண்டு. சமீப காலமாக பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்; கட்சித் தொண்டர்களிடையே, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமும் பேசி வருகிறார்.
கடந்த தேர்தலில், தமிழகத்தில் இருந்து, பொன். ராதாகிருஷ்ணன் வென்றார். வரும் தேர்தலில், பிரதமர் மோடி போட்டியிட்டால், 9 - 12 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இது மிகப் பெரிய பலமாக இருக்கும். அதனால், தமிழகத்தில் இருந்து, பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-பிப்-201912:01:31 IST Report Abuse

இந்தியன் kumarமோடிஜி போட்டி இட்டால் அவரை எதிர்த்து காங்கிரஸ் ராகுலை களம் இறக்குமா ???

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-பிப்-201912:00:28 IST Report Abuse

இந்தியன் kumarதமிழகத்தில் பிரதமர் போட்டி இட்டால் அது மாபெரும் சாதனை

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-பிப்-201911:59:48 IST Report Abuse

இந்தியன் kumarநல்லவர் மோடிஜியை நல்லவர்கள் ஆதரிப்பார்கள்.

Rate this:
மேலும் 98 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X