ராகுலுக்கு, 'நோபல்' : பா.ஜ., பரிந்துரை Dinamalar
பதிவு செய்த நாள் :
ராகுலுக்கு, 'நோபல்' : பா.ஜ., பரிந்துரை

புதுடில்லி: 'ரபேல்' போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக, பல கேள்விகளை எழுப்பியுள்ள, காங்., தலைவர் ராகுலுக்கு, பா.ஜ., பதிலளித்துள்ளது. 'ராகுலின் 10 பொய்களும், அதற்கு விளக்கமும்' என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பொய் சொல்வதில், ராகுலுக்கு நோபல் பரிசு வழங்கலாம்' என, பா.ஜ., கூறியுள்ளது.

ராகுல், ரபேல், நோபல், பா.ஜ.,



ஐரோப்பிய நாடான, பிரான்சிடம் இருந்து, விமானப்படைக்கு, 36, ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, காங்., தலைவர், ராகுல், தொடர்ந்துகுற்றஞ்சாட்டி வருகிறார். இந்த நிலையில், பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில், 'இந்த ஒப்பந்தத்தில், பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இருந்துள்ளது' என, நேற்று முன்தினம், ராகுல் குற்றஞ்சாட்டினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு, பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பா.ஜ., நேற்று பல பதிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: ரபேல் போர் விமானம் தொடர்பாக, காங்., தலைவர், ராகுல், பல பொய்களை கூறியுள்ளார். அவர் எவ்வளவு பொய்கள் சொல்லியுள்ளார்

Advertisement

என்பதை கணக்கிட முடியாது. இருந்தாலும், மிக முக்கியமான, 10 பொய்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பொய்களை சொல்வதற்கான நோபல் பரிசைப் பெற, அவருக்கு முழு தகுதி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ராகுல் பேசியதில், 10 முக்கிய அம்சங்களுக்கு, பா.ஜ., சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-பிப்-201903:22:28 IST Report Abuse

meenakshisundaramஅது இல்லை என்றாலும் அட் லீஸ்ட் 'கின்னஸ் 'புத்தகத்தின் என்ட்ரி க்காக வேனும் அனுப்பலாம்.

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-201917:51:59 IST Report Abuse

J.V. Iyer'பொய் சொல்வதில், ராகுலுக்கு நோபல் பரிசு வழங்கலாம்' - நோ-பல், பாப்புவுக்கு. கேவலம்.

Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
12-பிப்-201917:43:29 IST Report Abuse

kalyanasundarampappu cannot be disgraced more than this

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X