அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு நிம்மதி! : 'கிரீன் கார்டு' கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு Dinamalar
பதிவு செய்த நாள் :
நிம்மதி!
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு...
'கிரீன் கார்டு' கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமைக்கான, 'கிரீன் கார்டு' பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், அந்த நாட்டு பார்லிமென்டில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு நிம்மதி ஏற்படும்.

அமெரிக்கா, கிரீன் கார்டு, இந்தியர்கள், நிம்மதி

அமெரிக்காவில், குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி வேலை செய்வதற்கு, பிற நாட்டினருக்கு, 'எச் - -1பி' விசா வழங்கப்படுகிறது. நம் நாட்டைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள், பணியாளர்கள் அதிகளவில் இந்த விசாக்களை, பெற்று, அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இந்த விசா வைத்துஇருப்போர், அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் தங்கி பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக இருந்தால், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு விசாவை நீட்டிக்கலாம். ஆறு ஆண்டுகளுக்கு பின், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணியாற்றுவதற்கான, கிரீன் கார்டு பெற வேண்டும்.
ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கும் ஒதுக்கீட்டு முறையில், கிரீன் கார்டு கிடைத்தால், அவர் மீண்டும், அமெரிக்காவுக்கு வந்து, பணியை தொடர முடியும். அமெரிக்க அரசு,

ஆண்டுதோறும், 1.4 லட்சம் கிரீன் கார்டுகள் வழங்கி வருகிறது. இதில், ஒவ்வொரு நாட்டுக்கும், தலா, 7 சதவீத கிரீன் கார்டுகள் அளவில் தான்,மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிரீன் கார்டு பெறுவதற்கு, 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பலர் குடும்பத்தைப் பிரிந்து, அமெரிக்காவில் வாழ வேண்டிய நிலை உள்ளது. வேறு சில நாட்டினர், குறைந்த அமெரிக்காவுக்கு வருகின்றனர். சதவீத அடிப்டையில், இவர்களுக்கு, கிரீன் கார்டு உடனடியாக கிடைக்கிறது. ஆனால், சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிகமாக, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பதால், அவர்களுக்கு இடம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த நடைமுறைக்கு, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களும் அதிருப்தி தெரிவித்தன. இந்த நடைமுறையால், திறமையான பணியாளர்களை இழக்கும் நிலை, நிறுவனங்களுக்கு ஏற்படுவது தான், இதற்கு காரணம். இதையடுத்து, கிரீன் கார்டு வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், கிரீன் கார்டுகள் வழங்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில், புதிய மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவில், ஒவ்வொரு நாட்டுக்கும், கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள, 7 சதவீத கட்டுப்பாட்டை, ௧௫ சதவீதமாக உயர்த்தும் அம்சம் இடம் பெற்று உள்ளது. மேலும், 'முதலில் வந்தவருக்கு முன்னுரிமை' என்ற ரீதியில், கிரீன் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டால், அமெரிக்காவில் பணிபுரியும் ஏராளமான

Advertisement

இந்தியர்களுக்கு நிம்மதி கிடைக்கும். கிரீன் கார்டுக்காக, பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.

முக்கிய பங்கு உள்ளது :

இந்த மசோதா குறித்து, ஜனநாயக கட்சி சார்பில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரீஸ் கூறியதாவது: மற்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான், அமெரிக்காவின் பலம். திறன்மிக்க வெளிநாட்டினர், கிரீன் கார்டு கிடைக்காமல், குடும்பத்தை பிரிந்து வாழ வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து, பலர், தாயகத்துக்கு திரும்பி விடுகின்றனர். இதனால், அமெரிக்காவுக்கு தான் இழப்பு. ஏனெனில், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி யில், வெளிநாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்கு, முக்கிய பங்கு உள்ளது. அதிகம் குடியேறுகின்றனர் என்பதற்காக, ஒரு நாட்டைச் சேர்ந்தவருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது நியாயமல்ல. எல்லா நாட்டினரையும் சமமாகக் கருத வேண்டும் என்பதற்காக, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, பல தொழில் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-பிப்-201913:49:16 IST Report Abuse

Srinivasan Kannaiyaமுதியோர் இல்லம் பெருகும்

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
11-பிப்-201920:59:34 IST Report Abuse

Bhaskaranஅங்கேய் தூங்கிவிடுவார்கள் பெற்றோர்கள் இங்குதனிமையில் நொந்துசாகவேண்டியதுதான் பணம் மட்டுமேவாழ்கையாகிவிடாது

Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
10-பிப்-201917:14:52 IST Report Abuse

 nicolethomsonவாழ்த்துக்கள் கனவு கண்ட இந்தியர்களே

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-பிப்-201913:42:40 IST Report Abuse

Manianஎந்த புதிய கல்வி யம் இல்லாமல், வேலையும் இல்லாமல் இங்கே இருந்து அரசியல் கொள்ளையர்களாக மாறாமல், , லஞ்சம் வாங்காமல், வெளி நாடடு பணம் அநுபுவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு லட்ச்சம் லஞ்ச வியாதிகள் இஉர்வாக்கவில்லையேயெ என்று அவர்களை வாழ்த்த வேண்டும்....

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X