பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பொது துறை வங்கி வாராக்கடன் ரூ.8.64 லட்சம் கோடியாக சரிவு

புதுடில்லி: கடந்த ஆண்டு, டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 8.95 லட்சம் கோடியில் இருந்து, 8.64 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

வாராக்கடன், வசூல், சரிவு

இது குறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், ஷிவ் பிரதாப் சுக்லா, லோக்சபாவில் கூறியதாவது: பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 2018, மார்ச்சில், 8 லட்சத்து, 95 ஆயிரத்து, 601 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு, 2018 -- 19ம் நிதியாண்டில், ஏப்ரல் - டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 31

ஆயிரத்து, 168 கோடி ரூபாய் குறைந்து, 8 மற்றும் ஊழல்களால்,லட்சத்து, 64 ஆயிரத்து, 433 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. முந்தைய ஆட்சியில், கடன் வழங்கியதில் காட்டிய தீவிரம், சொத்து இருந்தும் கடனை திரும்பத் தராதது, மோசடி பொதுத் துறை வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, 2015ல், ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இடர்ப்பாட்டு கடன்களை, வாராக் கடன்களாக மாற்றும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், வாராக் கடன்களை மறுசீரமைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம், 2018, மார்ச் இறுதி வரை அமலில் இருந்தது. இந்த வகையில், இடர்ப்பாட்டு கடன்கள், வாராக் கடன்களாக மாற்றப்பட்டதால், பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் அதிகரித்தது. கடந்த, 2014, மார்ச் நிலவரப்படி, 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 264 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், 2017, மார்ச்சில், 6 லட்சத்து, 84 ஆயிரத்து, 732 கோடி ரூபாயாக

Advertisement

உயர்ந்தது. எனினும், மத்திய அரசு, 2015 -- 16ல் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடனை வெளிப்படையாக அங்கீகரித்து, அவற்றை திரும்பப் பெற எடுத்த நடவடிக்கைகள், நல்ல பலனைத் தந்துள்ளன.கடந்த ஆண்டு, டிசம்பர் வரை, பொதுத் துறை வங்கிகள், 3 லட்சத்து, 33 ஆயிரத்து, 491 கோடி ரூபாய் கடனை வசூலித்துள்ளன. பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க, மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
10-பிப்-201912:14:06 IST Report Abuse

Ramakrishnan Natesanஇது காங்கிரஸ் காலத்தில் 2 லக்சம் கோடி அது தெரியுமா நான்கு வருடத்தில் கொடுத்தது எவ்வளவு என்று பாருங்கள் இப்போ அது 8 .64 கோடி மோடி அரசின் நிர்வாக திறமை சாரி இது அவர் திறமையில் வராது நனமை வந்தால் அவர் திறமை இல்லை என்றால் காங்கிரஸ் காரணம்

Rate this:
natarajan s - chennai,இந்தியா
10-பிப்-201917:37:40 IST Report Abuse

natarajan s1991 களில் நமது வங்கிகள் தங்களது கடன்களுக்கு உத்திரவாதம் வேண்டும் அப்போதுதான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று basel norms follow செய்ய ஆரம்பித்தோம்.. ஆரம்பத்தில் IRAC norms 180 நாட்களாகலாதான்இருந்தது. (Income Recognition and Asset Classification ). பின்னர் Basel II , Basel III (தற்போது basel IV from 2020 ) என்று மாறியபோது 90 நாட்கள் என்று குறைக்கப்பட்டதால் நிறைய கணக்குகளை தவணையிலோ வட்டி செலுத்துவதிலோ தாமதம் ஏற்பட்டால் sub - standard ( Standard , Sub Standard , Doubtful , and Loss categorization ) என்று வகைப்படுத்தி மேலும் தவணை வரவில்லை என்றால் Doubtful என்று வகைப்படுத்தி வங்கிகள் தங்களது லாபத்தில் ஒரு பகுதியை (செக்யூரிட்டி value நீங்கலாக ) அந்த மாதிரி வகைப்படுத்தப்பட்ட கடன்களுக்கு provisioning norms படி தொகை ஒதுக்கியபின்னர்தான் லாப நஷ்ட (balance சீட்) கணக்கு காட் முடியும். எந்த ஒரு வங்கியும் சரியாக 90 நாட்களில் எந்த கணக்கையும் வரகடனாக அறிவிக்க மாட்டார்கள். பொதுவாக குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளாவது அதை restructure அல்லது reschedule செய்து standard asset category என்றே காட்டுவார்கள்.நிலைமை கைமீறி போகும்போதுதான், statutory auditor களின் சம்மதத்துடன் doubtful category அதிலும் வெளிவரவில்லை என்றால் loss category (100 % provision ) காட்ட வேண்டும். ஆகவே தற்போதுள்ள வாரகடன்கள் யார் ஆட்சியில் கொடுக்கப்பட்டிருந்தால் இப்பொது வெளியே வந்திருக்கும் என்பதை உங்கள் யுகத்திற்கே விட்டு விடுகிறேன். அப்புறம் தள்ளுபடி , எல்லா வங்கிகளும் தங்களது மூலதனத்தை(24 %) பொதுமக்களுக்கு பங்கு சந்தையில் விட்டிருப்பதால் மேற்படி காட்டிய (NPA ) வாரகடன்களை அப்படியே ஒவ்வொரு வருடமும் பாலன்ஸ் ஷீட்டில் காட்டமுடியாது.ஒரு கணக்கு இரண்டு வருடங்களாக NPA காடேகோரியிலுருந்து வெளியே வரவில்லை என்றால் அதை technical write off முறையில் பலன்செஷீட்டில் இருந்து வெளியே எடுத்துவிடுவார்கள் (இது உலக அளவில் நடைபெறும் ஒரு கணக்கிடும் முறை CMA முறையிலும் இது உண்டு) அதை தான் தவறாக தள்ளுபடி என்று புரிந்து கொள்கிறோம். உண்மையில் எந்த ஒரு கணக்கும் (சில சிறிய கணக்குகள் தவிர ) secured asset இருக்கும்பட்சத்தில் Accounts under Collection என்ற தலைப்பின் வைத்து அதில் recovery செய்யும் தொகையை லாப கணக்கில் காட்டுவார்கள் (இம்மாதிரியான கணக்குகளுக்கு ஏற்கனவே 100 % provision கொடுக்கப்பட்டு விட்டதால் ) ஆகவே balance sheet cleaning exercise தான் இந்த தள்ளுபடியே தவிர முடிஞ்ச அளவு கடைசி பைசா வரை recover செய்ய எல்லா முயற்சியும் எடுக்கப்படும். இது எல்லா ஆட்சிக்காலத்திலும் நடைபெறும் ஒரு accounting procedure . எதோ NDA மட்டும்தான் தள்ளுபடி செய்த மாதிரியும் இதற்குமுன் இது நடக்காதமாதிரியும் இந்த ஊடகங்கள் இதை பெரிது ப்படுத்திவிட்டன. இந்த நடைமுறை வங்கிக்கு வாங்கி அவர்களது board நடைமுறைப்படி மாறுபடும். அனால் procedure ஒன்றுதான்.மேலும் வங்கியில் Chairman பதவிக்கு கடந்த ஆட்சியில் பலர் எவ்வளவு பிரயத்தனம் பண்ணி வாங்கினார்கள் என்ற உண்மை பலருக்கு தெரியாது. ...

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-பிப்-201912:12:25 IST Report Abuse

Lion Drsekarவட்டிக்கடை நடத்தும் இந்த பாங்க் பாமர மக்கள் ஏதாவது அட்டஸ்டேஷன் கேட்டால் ஒரு தாளுக்கு ரூபாய் 25 வாங்குகிறார்கள், ஆனால் பல லட்சம் கோடி ஏமாற்றியவர்களுக்கு உதவிய ஊழியர்களுக்கு எந்த ஒரு தண்டனையும் இல்லை, வந்தே மாதரம்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-பிப்-201909:32:31 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்தள்ளுபடி எவ்வளவு லட்சம் கோடி.... சொல்லுங்கண்ணே சொல்லுங்க..

Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
10-பிப்-201915:45:02 IST Report Abuse

Sridharமொதல்ல இந்த நிலைமைக்கு காரணம் யாருன்னு கேளுப்பா ...

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X