பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆயுத புரோக்கருடன் தொடர்பு : வாத்ராவிடம் விசாரணை

புதுடில்லி: ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரியுடனான தொடர்பு குறித்து, சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று தீவிர விசரணை நடத்தினர்.

வாத்ரா, சோனியா, காங்கிரஸ், விசாரணை


காங்., முன்னாள் தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா. இவர், ஐரோப்பிய

நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், சொத்து வாங்கியதில், சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக,வாத்ராவிடம், 6 -8 தேதிகளில், டில்லியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், டில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில், வாத்ரா, நேற்று காலை மீண்டும் ஆஜரானார்.
சட்ட விரோத பண பரிமாற்றத்தில், சம்பந்தப்பட்டவர்கள் பற்றி, அவரிடம், அதிகாரிகள் விசாரித்தனர்.சர்ச்சைக்குரிய, ஆயுத புரோக்கர், சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு பற்றியும், அதிகாரிகள் கேட்டனர். 'பண்டாரியை யார் என்றே தெரியாது' என, வாத்ரா பதில் அளித்தார். ஆனால், 2012ம் ஆண்டில், ஐரோப்பிய நாடான பிரான்சின்

Advertisement

நைஸ் நகரிலிருந்து, டில்லி செல்வதற்கான விமான டிக்கெட்டை, வாத்ராவுக்காக பண்டாரி வாங்கி கொடுத்துள்ளதை, அதிகாரிகள் காட்டினர். இதற்கு, வாத்ராவால் பதில் சொல்ல முடியவில்லை என, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-பிப்-201908:43:08 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇந்திய அரசியலில் எந்த அரசியல்வாதி சிக்கி இருக்கான் .....................( ஜெ ,லாலு தவிர )

Rate this:
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
10-பிப்-201907:11:50 IST Report Abuse

Mannai Radha Krishnanசோனிய அண்ட் கோ இத்தாலிக்கு மூட்டையை கட்டிகிட்டு போயிட்ரேன், விட்டுடு சாமி என்று சொன்னால் ஒரு சமயம் இத்தோட நிப்பாட்டிப்பாங்க.....இல்லேன்னா மவனே....நோண்டி எடுத்துடுவாங்க

Rate this:
விவசாயி - Tiruppur,இந்தியா
10-பிப்-201903:50:55 IST Report Abuse

விவசாயி இதுவரை எந்த ஊழல்வாதி உண்மையை சொல்லி உள்ளார்கள்........இங்க மட்டும் உண்மை வருமா ..என்ன?? .சிபிஐ வேற வேலை இருந்த பாருங்களேன்............

Rate this:
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201905:33:48 IST Report Abuse

Manianமக்கள் உண்மை பேசினால் தானே, ஊழல்வாதிகளும் உண்மை பேச முடியும்.- வேதாந்தி வெட்டுமடியான். ...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X