தமிழகத்தில் கூலிப்படை ஆட்சி : சேலத்தில் ஸ்டாலின் பேச்சு Dinamalar
பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் கூலிப்படை ஆட்சி
சேலத்தில் ஸ்டாலின் பேச்சு

சேலம்: ''தமிழகத்தில், கூலிப்படை ஆட்சி நடக்கிறது. ஊழல், கொள்ளை, கொலை அதற்கு தேவை கூலிப்படை. அதை தயாரிப்பவர் முதல்வராக உள்ள பழனிசாமி,'' என, சேலத்தில் ஸ்டாலின் பேசினார்.

தமிழகம், கூலிப்படை, ஸ்டாலின், திமுக, ஆட்சி

சேலத்தில், நேற்று நடந்த ஆதி தமிழர் பேரவையின், அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிடர் இயக்கத்துக்கும், அருந்ததியர் இயக்கத்துக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. இது தேர்தல் நேரத்தில், வரக்கூடியதல்ல. ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வுடன் கலந்து கொள்கிறேன்.

கருணாநிதி சாமானியர்களுக்காக ஆட்சியை நடத்தி காட்டியிருக்கிறார். அவரது உத்தரவில், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றிய கம்பீரத்துடன் இங்கு நிற்கிறேன். மத்திய - மாநில ஆட்சியாளர்கள் அடித்தட்டுமக்களை பற்றி கவலைப்படுவதில்லை. கார்ப்பரேட்டுகளை பற்றி மட்டுமே, கவலைப்படுகின்றனர். விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என, 2014ல் மோடி வாக்குறுதி கொடுத்தார். ஆனால், இதுவரை இரண்டு மடங்கு வீழ்ச்சிதான் அடைந்துள்ளது. நாட்டின் தலைநகரில் நடந்த, விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம்தான் அவர்களின் சாதனை. இது மோடிக்கு மட்டுமின்றி, நமக்கெல்லாம் ஏற்பட்ட அவமானம்.
தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கும் போது, ஞானோதயம் ஏற்பட்டு,தமிழகத்துக்கு மோடி அடிக்கடி வருகிறார். அவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும், தமிழகத்தில் காலுான்ற முடியாது. விவசாயிகளுக்கு மொத்தமாக, 6,000 ரூபாய் உதவித்தொகை என, அறிவிக்கிறார். இது மறைமுகமாக ஓட்டுக்கு தரும் பணம். மாதம்,

Advertisement

60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் ஏழைகள் என, இடஒதுக்கீடு வழங்குகிறார்.
இது, உயர் ஜாதி ஓட்டுகளை பெற வேண்டும் என்பதே நோக்கம். மோடி அரசு சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, இந்துக்களுக்கு கூட கருணை காட்ட மாட்டார். மத்தியில் கார்ப்பரேட் நிறுவன ஆட்சி என்றால், மாநிலத்தில் கூலிப்படை ஆட்சி நடக்கிறது. ஊழல், கொள்ளை, கொலை அதற்கு தேவை கூலிப்படை. அதை தயாரிப்பவர் முதல்வராக உள்ள பழனிசாமி. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-பிப்-201903:45:31 IST Report Abuse

meenakshisundaramஐயோ இந்த மனுஷன் பழைய .காய்ந்து போன .காலாவதியான திமுக ஆட்சியை பத்தி நினைவூட்டுகிறானே ஆனா அப்போ நடந்தது காலி படை ஆட்சி அல்லவா?

Rate this:
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201905:24:47 IST Report Abuse

Manianதொளபதி அவனுகளுக்கு மருவாதையும் பண்ண ஒரு கூடடம் போடணும். பிரியாணி, குவார்டரும் கொடுத்தா எல்ல பயலகளுக்கும் ஒரு புது தெம்பு வரூம்லே. ஆப்பிள் லக்சினிலே நீங்க நின்னா நாங்களும் ஒங்களுக்கே ஓட்டு ஒட்டு போடுவோம். திருமங்கலம் பார்முலாபடி காசு தந்தா போதும்- -திருடர்கள் கழக தனி தனி மாவட்ட தொடர்கள் படை தலைவர்கள் ( எல்லோரும் கொள்ளைக்காரர்களும் சமம் என்பதே எங்கள் கொள்கை).

Rate this:
R S GOPHALA - Chennai,இந்தியா
11-பிப்-201915:10:42 IST Report Abuse

R S GOPHALAபப்பு நீ காலிப் படை... அவ்வளவுதானே வித்யாசம்... ஏன் கூவுகிறாய் ?? திமுகவின் அரசியல் முடிவுக்கு வரவுள்ளது. இனிமேலாவது ஜாக்கிரதையாக இருக்கவும். இல்லாவிடில் விரைவில் சிறையில் கேப்பை கூழ் சாப்பிடவேண்டிய கட்டாயம் ஏற்படும் பப்பு உனக்கு.

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X