எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அறுவடை!
அ.தி.மு.க., - தி.மு.க., எதிர்ப்பு ஓட்டு
அறுவடை செய்ய களமிறங்குகிறார் கமல்

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள், பா.ம.க.,வுக்கு, 4.5 சதவீதமும்; தே.மு.தி.க., வுக்கு, 5 சதவீதமும் கிடைத்தன. தற்போது, அந்த எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்வதற்காகவே, 40 தொகுதி களிலும், தனித்து போட்டி என்ற முடிவை, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர், கமல் எடுத்துள்ளார்.

திமுக, அதிமுக, கமல், அறுவடை, எதிர்ப்பு, ஓட்டுகள்லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சு தீவிரம் அடைந்துள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அ.தி.மு.க.,வுடனும், தி.மு.க.,வுடனும், ஒரே நேரத்தில், கூட்டணி பேச்சை, பா.ம.க., நடத்தி வருகிறது. தே.மு.தி.க., யாருடன் கூட்டணி சேரும் என்பது தெரியவில்லை.

கேள்வி :

அ.தி.மு.க., கூட்டணி யில், பா.ம.க.,வுக்கு இணையாக, தே.மு.தி.க.,வும் தொகுதிகளை எதிர்பார்க்கிறது. 2014 லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டி யிட்டது;

பா.ம.க., எட்டு தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., 5 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. ஆனால், பா.ம.க., 4.5 சதவீதம் ஓட்டுகளை தான் வாங்கியது. எனவே, வட மாவட்டங்கள் மட்டுமின்றி, பரவலாக ஓட்டு வங்கி உள்ள, தே.மு.தி.க., தரப்பில், பா.ம.க.,வுக்கு இணையாக தொகுதிகள் வழங்க வேண்டும் என, கேட்கப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க., அணியில், பா.ம.க.,வுக்கு, ஆறு தொகுதிகளும்; தே.மு.தி.க.,வுக்கு, மூன்று தொகுதிகளும் ஒதுக்கலாம் என, திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியை ஆதரித்து,தே.மு.தி.க., இளைஞரணி தலைவர், சுதீஷ் பேட்டி அளித்துள்ளார். எனவே, பா.ஜ., தலைமையில் தனி அணி அமையுமானால், அதில், தே.மு.தி.க., இடம் பெறுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், அ.தி.மு.க., அல்லது பா.ஜ.,வுடன், பா.ம.க.,வோ அல்லது தே.மு.தி.க.,வோ கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள், யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனித்து போட்டி :

கடந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர்களாக அன்புமணியும், விஜயகாந்தும் போட்டியிட்டனர். எனவே, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் எதிர்ப்பு ஓட்டுகளை, பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் அறுவடை செய்தன. இந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள், தனக்கு கிடைக்கும் என, கமல் கருதுகிறார். எனவே தான், அவர், கட்சி துவக்கிய நாளிலிருந்து, 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேர மாட்டேன்' என, கூறி வருகிறார். அதேநேரத்தில், காங்கிரஸ் பக்கம், கமல் சேருவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக, அவர் எந்த அணியிலும் சேராமல், தனித்து போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. சமீபத்தில், கமல் அளித்த

Advertisement

பேட்டியில், 'வரும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதி களிலும், தனித்து போட்டியிடுவோம். எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக, பலர் பேசுகின்றனர். 'சில கட்சிகளை, எங்களால் ஏற்க முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை, மக்களும் ஏற்க மாட்டார்கள். மக்கள் ஏற்கும் கட்சிகளுடன், கூட்டணி அமைக்கலாம்' என்றார்.

கூட்டணி :

கமலின், இந்த பேட்டி வாயிலாக, இரண்டு கருத்துக் களை தெளிவுப்படுத்தி உள்ளார். ஒரு கருத்து, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணியில், மக்கள் நீதி மையம் சேரப் போவதில்லை. அந்த கட்சிகளின் எதிர்ப்பு ஓட்டுகள், தனக்கு கிடைக்கும் என, கருதுகிறார். மற்றொரு கருத்து, அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன் உடன்பாடு ஏற்படாமல், வெளியேறும் கட்சி களுடன் சேர்ந்து, கூட்டணி அமைக்க தயார் என்பதை தான், மக்கள் ஏற்கும் கட்சிகள் என, கமல் கூறிஉள்ளார். அந்த வகையில், கூட்டணிக்கு எந்த கட்சிகளும் வராமல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள, அ.ம. மு.க.,வும்; எந்த அணியிலும் சேராமல், திரிசங்கு நிலையில் இருக்கும், த.மா.கா., வும் தான், கூட்டணி சேர முடியும். இவர்களில் ஒருவர், 'கை சுத்தம்' பற்றி, ஊருக்கே தெரியும். என்ன செய்யப் போகிறார் கமல்?


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
12-பிப்-201904:29:39 IST Report Abuse

oceசந்தேக கோபு கமலை இயக்குவது நீயல்ல. அவரது பிறப்பின் பலன் அவரை இயக்குகிறது.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
12-பிப்-201904:25:08 IST Report Abuse

oceராமர் ஒரு சக்கரவர்த்தி மகன். அவரது ஜாதகத்தில் பல உச்ச கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து நின்றதால் அவர் பட்ட துன்பங்களை வேறொவரும் அப்படி பட்டதில்லை. ராமருக்கே அந்த நிலை. கமல் ஜாதகத்தில் துலா சனி மகர செவ்வாய் கடக குரு மூன்றும் உச்ச நிலை பெற்ற கிரகங்கள். அவைகள் ஒன்றை ஒன்று பார்க்கின்றன. கருணாநிதிக்கு சந்திரன் செவ்வாய் சனி மூன்றும் உச்சமடைந்து ஒன்றை ஒன்று பாராது அவருக்கு நாட்டை ஆளும் விபரீதமான raja யோகத்தை கொடுத்தன. சந்திரன் தவிர மற்ற செவ்வாய் சனி துஷ்ட கிரகங்கள் உச்ச நிலை பெற்றதால் அவரால் மக்களுக்கு நல்லாட்சி தர முடியவில்லை. அவரை மட்டும் வளர்த்துக்கொண்டார்.

Rate this:
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
11-பிப்-201915:34:49 IST Report Abuse

Dhanraj Jayachandrenஇவரிடம் ஒரு குணம் உள்ளது, அது தோல்விய பார்த்து பயந்ததே கிடையாது, இந்த குணம் இவரை அரசியலில் பல கட்டத்தை கடக்க உதவும்....,கமல் மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கின்றார்...மக்கள் அவருக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு அளிப்பார்கள், அது வரை தாக்கு பிடிக்கும் பிடிவாதமும், போர் குணமும், தற்போதைக்கு உள்ள ஒரேய ஆள் கமல் சார்தான்...தி மு க மற்றும் ஆ தி மு க விற்கும் மாற்று கமல் சார்தான்...

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X