பொது செய்தி

தமிழ்நாடு

'பூச்சி' 'செவளைய' பார்த்தீங்களா... 'காரி' 'மயிலை' காத்திட்டிருக்கு! : கொங்கு மக்கள் அவசியம் காணவேண்டிய கால்நடைத்திருவிழா

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 'பூச்சி' 'செவளைய' பார்த்தீங்களா... 'காரி' 'மயிலை' காத்திட்டிருக்கு! :  கொங்கு மக்கள் அவசியம் காணவேண்டிய கால்நடைத்திருவிழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த சமத்துாரில் நடக்கும் கொங்குநாடு கால்நடைத் திருவிழாவில், கம்பீரமான பார்வையும், எடுப்பான திமில், அழகான கொம்புகளுடன் காங்கயம் காளைகள் அணிவகுத்து, பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. கொங்கு மக்கள் தவறாமல் குடும்பத்துடன் காணவேண்டிய இத்திருவிழா, இன்று நிறைவுபெறுகிறது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சமத்துார் சக்தி மில் மைதானத்தில், 'வாணவராயர் அறக்கட்டளை' சார்பில், ஐந்தாம் ஆண்டாக,'கொங்குநாடு வேளாண்மை மற்றும் கால்நடைத்திருவிழா' நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காங்கயம் காளைகளுக்கான அழகு போட்டிகள் நடந்தன.பொள்ளாச்சி, ஈரோடு, காங்கயம், திருப்பூர், கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 700க்கும் அதிகமான காங்கயம் உள்ளிட்ட பல்வேறு வகையான காளைகளும்; ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் மாநில மாடுகளும் அழைத்துவரப்பட்டுள்ளன.சிறந்த காங்கயம் இன கால்நடைகளுக்கான போட்டிகள் நேற்று நடந்தன. இதில், ஆறு பற்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள சிறந்த பெரிய பூச்சி காளைகள், நான்கு பற்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள சிறந்த இளம் பூச்சி காளைகள் என மொத்தம், 12 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கால்நடை மருத்துவர்கள் நடுவர்களாக இருந்து வயது, குணாதிசயங்கள், பராமரிப்பு உள்ளிட்டவை அடிப்படையில் சிறந்த காளைகளை தேர்வு செய்தனர்.குட்டை இன மாடுகள்அழிந்து வரும் இனங்களில் ஒன்றான குட்டை இன மாடுகள், கேரளாவை பிறப்பிடமாக கொண்ட வேச்சூர் இன மாடு, தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட தஞ்சாவூர் குட்டை இன மாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.காங்கயம் இன பூச்சிக்காளை, செவளை, காரி, மயிலை என காளைகள் ஒவ்வொன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. கம்பீரமான பார்வையும், எடுப்பான திமில், அழகான கொம்புகளுடன் கூடிய காளைகளை பார்வையாளர்கள் கண்டு வியந்தனர். அரசுப்பள்ளிகளைச் சேர்ந்தமாணவர்கள், கால்நடைத் திருவிழாவுக்கு ஆசிரியர்களுடன் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'கால்நடைகள் வளர்ப்பு, மாடுகள் இனம் அழியாமல் காக்கவும், இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கால்நடை திருவிழா நடத்தப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள், கால்நடை வளர்ப்பு குறித்து தெரிந்து கொண்டனர்,' என்றனர்.இன்று விசிறிவால் சேவல்சண்டைக்கிடாய் போட்டிகால்நடை திருவிழா நிறைவு நாளான இன்று, சண்டைக்கிடாய், குதிரை, எருமை, விசிறிவால் சேவல் உள்ளிட்டவைக்கான போட்டிகள், நாய்கள் கண்காட்சி, நடக்கிறது. நிறைவாக,அழகிய காளைகள், கம்பீரமான காளை, சிறந்த காளை மற்றும் கால்நடைகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k balakumaran - London,யுனைடெட் கிங்டம்
14-பிப்-201906:12:57 IST Report Abuse
k balakumaran நம்ம நாடு சரி, நம்ம நாடு காளையை பாதுகாக்கிறோம் என்று சிலர் வாங்கி அதன் விந்தணுவை கள்ளத்தனம் ஆக வெளிநாட்டுக்காரனுக்கு விற்கிறார்கள். அதை உபயோகித்து இன்று பெரிய காளை இனத்தை brahman என்று பிரம்மன் இந்து கடவுள் பெயரை வைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்கிறான் மேற்கு நாட்டு காரன். நம்ம மாட்டில் எஞ்சி நிற்பதையும் அழித்து ஒழிக்க Peta அமைப்பு மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்தார்கள். ஆனால், ஸ்பெயின் போன்ற நாடுகளில் காளையை துரத்தி ஈட்டியினால் குத்தி கொலை செய்து விடுவது ஜல்லிக்கட்டை விட மிக மோசம்.ஆனால் எந்த மேற்கு நாடும் அது பற்றி கண்டு கொள்ளாது. நம்ம நாட்டு மாடு இருந்தால் தான் மேற்கு நாட்டு மாட்டின் சினை ஊசி ஏற்றி கலப்பின பசுவை வளர்த்து தீமை தரும் அந்த பாலை குடித்து நாம் நோயில் விழுகிறோம். அந்த கலப்பின் பசுவும் கண்ட கண்ட நோய் வந்து திடீர் என்று இறந்து விடும். மீண்டும் நம்ம நாட்டு மாட்டுக்கு தான் அந்த சினை ஊசி போட்டு கலப்பின பசுவை உருவாக்கி பாலை கறக்கணும். நாட்டு மாடுகளை மறு புறம் இறைச்சிக்கு என்று வெட்டி அழித்து விட்டனர். நாட்டு மாடு இருந்தால் தான் இந்த முறையில் பால் உற்பத்தி செய்யலாம். ஆனால், சீமை, இறக்குமதி பசுக்கள் நமது தட்ப வெப்பத்துக்கு உயிர் வாழ முடியாதவை. ஆகவே, ஒரு லிட்டர் எடுத்தாலும் மண்ணுக்கு உரிய நாட்டு பசுக்களையே வளர்க்க வேண்டும். அவற்றின் சிறப்பே தனி. அந்த A2 பாலே மருந்து. இந்த விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-பிப்-201920:24:16 IST Report Abuse
Bhaskaran இதைபோல் அந்த அந்த வட்டாரங்களில் அதன் சூழ்நிலைகளுக்கேற்ப வாழும் கால்நடை இனங்களை வைத்து கண்காட்சிநடத்தி எதிர்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுகிறேன் அரசும் தனியார் அறக்கட்டளைகளையும் இணைந்து செயல்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
10-பிப்-201913:14:49 IST Report Abuse
OUTSPOKEN நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது கிராமத்தில் இருக்கும் எங்கள் அதை வீட்டிற்கு பள்ளி விடுமுறையில் செல்லும்போது இது போன்ற கம்பிரமான காளைகளை கிராமங்களில் அதிகமாக பார்த்திருக்கிறேன். அனால் இப்போது இது போன்ற காளைகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. எதிர்கால சந்ததிகளுக்கு இது போன்ற காளைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமா உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X