பொது செய்தி

தமிழ்நாடு

நல்ல பெயர் கெடைச்சிருக்கு!

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நல்ல பெயர்  கெடைச்சிருக்கு!

சீரியல் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ்

ஒரு காலத்தில், 'டெரர்' வில்லனாக, தமிழக சினிமா ரசிகர்களை மிரட்டிய விஜய் கிருஷ்ணராஜ், இன்று தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில், குணசித்திர நடிகராக கலக்கி வருகிறார்.சமீபத்தில், கோவை வந்திருந்த அவரிடம் பேசியதில் இருந்து...உங்கள் திரைப்பட பயண அனுபவம்?'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தேன். அது, சிவக்குமாருக்கு, 100வது படம்; எனக்கு முதல் படம். அதனை தொடர்ந்து, 'ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது', 'ராணுவ வீரன்', 'ஊரும் உறவும்', 'நெஞ்சங்கள்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினேன்.'கண்ணோடு கண்' படத்தை இயக்க வாய்ப்பு தேடி வந்தது. அடுத்து, சிவாஜி கணேசன் நடித்த, 'சிம்ம சொப்பனம்' படத்தை இயக்கினேன். பின், நடிப்பில் களமிறங்கினேன். 'நினைவுச்சின்னம்' படத்தில் எனது கேரக்டர் பெரிதளவு பேசப்பட்டது. பெரும்பாலும், அடிதடி வில்லன் வேஷத்தில் நடிப்பதில்லை. லொள்ளு பேசும் வில்லன் கேரக்டர்களில் மட்டும் நடித்தேன்.'சீரியல் என்ட்ரி' நிகழ்ந்தது எப்படி?ஒரு காலகட்டத்தில் என்னை போன்ற லொள்ளு பேசும் வில்லன்களுக்கும், அப்பா, மாமா வேஷங்களுக்கும் சினிமாவில் அதிக வேலை இல்லாமல் போய்விட்டது. அச்சமயத்தில், பாலசந்தரும் சீரியல்களில் இறங்கி, கலக்கிக்கொண்டிருந்தார். அதனால், சீரியல் பக்கம் நம்பிக்கையுடன் வந்தேன். 'குடும்பம்', 'கங்கா யமுனா சரஸ்வதி' ஆகிய சீரியல்கள் நல்ல பெயரை வாங்கித்தந்தன.சினிமா, சீரியல் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?சினிமா என்பது மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படத்தை நிறைய நேரம் எடுத்து தயாரிக்க வேண்டும். சீரியல் என்பது, விரிவாக சொல்லக்கூடிய கதையை, விரைவாக எடுத்து முடிக்க வேண்டும்.சினிமாவில் நடித்ததன் மூலம் பரவலாக பெயர் கிடைத்தது. இருந்தாலும், சீரியலில் நடிப்பதன் மூலமே பெண்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஒரு படம், 100 நாள் ஓடினால், கிடைக்கும் பிரபலம், ஒரு சீரியலில் கிடைத்து விடுகிறது.ரெண்டுமே வெவ்வேறு அனுபவம் என்றே சொல்ல வேண்டும். மக்கள் மனதில் இப்போது நெருக்கமாக இடம் பெறுகிறேன். அந்தந்த கேரக்டராகவே பார்க்கின்றனர். செல்லும் இடங்களில், நல்ல வரவேற்பும் கொடுக்கின்றனர்.-புன்சிரிப்புடன் விடை கொடுத்தார், விஜய் கிருஷ்ணராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-பிப்-201909:32:48 IST Report Abuse
Bhaskaran இவர் தீரன் சின்னமலை பற்றி தொலைகாட்சிப்படமோ திரைப்படமோ எடுக்க போவதாக முன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் வெளிவந்துவிட்டதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X