பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக்க தேவை புதிய சிந்தனைகள் ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன் வலியுறுத்தல்

Updated : பிப் 10, 2019 | Added : பிப் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மதுரை:''நேர்மையும் புதிய சிந்தனைத் திறனும் உள்ள இளைஞர்கள் வாழ்க்கையில் எளிதில் சாதிக்க முடியும்'' என மூத்த ஆடிட்டரும் சென்னை பி.கே.எப்.ஸ்ரீதர் மற்றும் சந்தானம் பர்ம் நிறுவன பங்குதாரருமான சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார்.மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ் (எஸ்.எல்.சி.எஸ்.) மற்றும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.) 25வது ஆண்டு விழா கல்லுாரி தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது.கல்லுாரி செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு நிர்வாக மேலாண்மையர் ஆர்.ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
சந்தானகிருஷ்ணன் பேசியதாவது:


மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 25ம் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு சென்னை பி.கே.எப். ஸ்ரீதர் அன்ட் சந்தானம் பர்ம் நிறுவன பங்குதாரர் (வலமிருந்து 3வது) சந்தானகிருஷ்ணன், கல்லுாரி செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு, தலைவர் 
டாக்டர் ஆர். லட்சுமிபதி பரிசு வழங்கினர். இடமிருந்து நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், முதல்வர் சரவணன், துணை இயக்குனர் புகழேந்தி.

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் 25ம் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு சென்னை பி.கே.எப். ஸ்ரீதர் அன்ட் சந்தானம் பர்ம் நிறுவன பங்குதாரர் (வலமிருந்து 3வது) சந்தானகிருஷ்ணன், கல்லுாரி செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு, தலைவர் டாக்டர் ஆர். லட்சுமிபதி பரிசு வழங்கினர். இடமிருந்து நிர்வாக மேலாண்மையர் ராம்குமார், முதல்வர் சரவணன், துணை இயக்குனர் புகழேந்தி.
படித்தவுடன் வேலை கிடைத்து விடும் என மாணவர்கள் கருதக்கூடாது. படிப்பு என்பது வேலைவாய்ப்புக்கான ஒரு தகுதி. தற்கால சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பத்திற்கேற்ற பிற தகுதி
களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இலக்கை முன்கூட்டியே நிர்ணயித்துக் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.தொழில்முனைவோராகவிரும்புவோர் சமு
தாயத்தில் எல்லோருக்கும் என்ன அதிகம் தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதுசார்ந்த தொழில்களை தேர்வு செய்தால் வெற்றி பெறலாம்.

சாதிக்க வயது ஒரு தடை இல்லை. 13 வயது சிறுவன் ஆதித்யா சர்மா துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் துவக்கினார். அலைபேசி 'செயலி' கண்டுபிடித்தபோது அவருக்கு 9 வயது. அதேபோல் சரக்கு போக்குவரத்து தொழில் துவங்கி பிரபலமடைந்த திலக் மேத்தாவிற்கு வயது 13. சாதிக்க புதிய சிந்தனைகள் அவசியம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:கல்விதான் சிறந்த வாழ்க்கைக்கான அடித்தளம். இதுவே இக்கல்லுாரியின் நோக்கம். தற்போது ஒரு பணிக்கு 100 இளைஞர்கள் போட்டியிடும் நிலை
உள்ளது. படிக்கும்போதே வேலைக்கான தகுதியை பலர் வளர்த்துக்கொள்வதில்லை. ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்கால தேவைக்கு ஏற்ற பாடத் திட்டங்களை கல்வி நிறுவனங்கள் கற்பிக்க வேண்டும் என்றார்.

எஸ்.எல்.சி.எஸ். முதல்வர் சரவணன் ஆர்.எல்.ஐ.எம்.எஸ். இணை இயக்குனர் புகழேந்தி ஆண்டறிக்கை வாசித்தனர். ஆலோசகர் (தொழில்நுட்பம்) சுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். பேராசிரியை பிரியா வரவேற்றார். பேராசிரியை அம்ருதா வீனா நன்றி கூறினார்.

இடமாற்றம் கிடையாது
திருவனந்தபுரம், பிப். 10--
கேரளா மாநிலத்தில்
கன்னியாஸ்திரியை
பாலியல் பலாத்காரம்
செய்த பிஷப்
பிராங்கோ முல்லக்
கல்லுக்கு எதிராக
போராட்டம் நடத்திய ஐந்து கன்னியாஸ்திரிகளை குருவிளங்காடு கான்வென்ட்டிலிருந்து இடமாற்றம் செய்யப் போவதில்லை என்று ஜலந்தர் கிறிஸ்தவ மத
நிர்வாகம் தெரிவித்து
உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-பிப்-201920:40:44 IST Report Abuse
Bhaskaran கல்லோரியின் வெள்ளிவிழா வாழ்த்துக்கள் உண்மையாகவே இம்மாதிரி சாதனையாளர்கள் வல்லுநர்களை அழைத்து மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய ஒரு குறிக்கோளை விதைப்பது குறித்து மிகவும் சந்தோசம் நடிகர்களை அழைக்காமல் இருப்பதே பாராட்டுக்குரியது ஐயா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-பிப்-201908:51:56 IST Report Abuse
Srinivasan Kannaiya படித்தவுடன் வேலை கிடைத்து விடும் என மாணவர்கள் கருதக்கூடாது. படிப்பு என்பது வேலைவாய்ப்புக்கான ஒரு தகுதி. தற்கால சூழல் மற்றும் புதிய தொழில்நுட்பத்திற்கேற்ற பிற தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்க்கு யார் உதவி செய்வது... ? லஞ்சலாவண்யம் இல்லமால் தொழில் தொடங்க அனுமதி கிடைக்குமா... மிஸ்ஸாஞ் கிடைக்குமா
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
10-பிப்-201908:29:29 IST Report Abuse
அம்பி ஐயர் ஆஹா.... கூத்தாடிகளையும்.... டிவி.க்காரர்களையும் பள்ளி, கல்லூரிகளின் விழாவுக்குக் கூப்பிடும் இக்காலத்தில்.... எஸ்.எல்.சி.எஸ் கல்லூரி நிறுவனத்தினர் ஆடிட்டர்களை விழாவிற்கு அழைத்திருப்பது பாராட்டுக்குரியது..... வாழ்த்துக்கள் கல்லூரிக்கும் / மாணவர்களுக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X