அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

லோக்சபா தேர்தல் செலவுக்கு, கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், தலா, ௨ கோடி ரூபாய் வசூலிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என, அனைத்து பணிகளும், ஸ்டாலின் தலைமையில் நடந்தன. அந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி பெறவில்லை. குற்றச்சாட்டுஇதற்கு காரணம், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களுக்கும், 'சீட்' கொடுக்கப்பட்டது தான் என, தி.மு.க.,வினரே குற்றம் சாட்டினர்.ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கட்சியில் சாதாரண நிலையில் உள்ள நபருக்கு, லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதுடன், தேர்தல் செலவுக்கும் பணமும் வழங்குவார். அவர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க, கட்சியினரும், சொந்த பணத்தை செலவழிப்பர்.உண்மையாக, தேர்தல் வேலை செய்தவர்களின் விபரத்தை, ஜெயலலிதா, உளவு பிரிவு போலீசார் வாயிலாக பெற்று, அவர்களுக்கு, வாரிய தலைவர், மாவட்ட செயலர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகளை வழங்குவார்.அதே, 'பார்முலா'வை வரும் லோக்சபா தேர்தலில் பின்பற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், சிலவற்றில், அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற, கட்சியில் நீண்ட காலமாக உள்ள, உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.விருப்பம்இது போன்றவர்கள், பெரும்பாலும் பணபலம் இல்லாதவராக இருப்பதால், அவர்களுக்கான தேர்தல் செலவை, கட்சியே ஏற்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, அதற்காக, தற்போது பதவியில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம், நிதி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், தி.மு.க.,வினருடன் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும், அரசு ஒப்பந்த பணிகள், மது கடை பார் உரிமம் எடுப்பது என, அனைத்திலும் ஆளுங்கட்சியினர் தான் ஆதிக்கம் செலுத்துவர்.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி வளர்ச்சி நிதி கூட, குறித்த காலத்தில் ஒதுக்கப்படாது. ஜெயலலிதா மறைவால், தற்போது, ஆளுங்கட்சியினருடன், தி.மு.க.,வினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி, அரசு ஒப்பந்த பணி எடுப்பது, வேண்டிய அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் பெறுவது போன்ற காரியங்களை, சத்தம் இல்லாமல் முடித்து கொள்கின்றனர்.அதேபோல, தொகுதிகளில் நடக்கும், அரசு ஒப்பந்த பணிகளில், உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில், தி.மு.க.,வினருக்கும், உரிய கமிஷன் போய் விடுகிறது.முடிவுஇதனால், தி.மு.க., ஆட்சி நடப்பது போன்ற உணர்வில் தான், அக்கட்சியினர் வலம் வருகின்றனர்.இந்த தகவல், கட்சி மேலிடத்திற்கும் தெரியும் என்பதால், லோக்சபா தேர்தல் செலவை, அவர்கள் தலையில் சுமத்த, முடிவு செய்துள்ளது.அதன் துவக்கமாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடமும், தலா, 2 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக வசூலிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
11-பிப்-201918:05:18 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj ஜெயலலிதாவை பின்பற்றித்தான் அரசியல் நடத்தப்போகிறாரா கலைஞரை பின்பற்றவில்லை போலும் ஆங்காங்கு நடைபெற்றுள்ள அத்துமீறல் ஆக்கிரமிப்புகள் குறிப்பாக காஞ்சிபுரத்தில் சாலைகள் பொதுஇடங்கள் போன்றவற்றின் மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட எந்த இடத்தில் பஞ்சாயத்து கூடடம் போடப்பட்டது ஏதேனும் ஒரு குரல் ஒலியாவது எழுப்பி அண்ணா மற்றும் அண்ணாமலையார் வாழ்த்த இடம் சின்னா பின்னமாக்கிக் கொண்டு போகும் இழிநிலை யாகிறதே என்ற என்னமோ கோவில்களின் நகரம் குப்பைகளின் நகரமாகிக்கொண்டு வருவதை தடுக்கவேண்டும் என்ற ஏக்கமோ இல்லாமல் குறிப்பாக அனைத்து நடைபாதைகளும் கடைமேடைகள் வாகன நிறுத்துமிடமின்றி வணிக வளாகங்கள் கார்பார்க்கிங் இல்லாமல் கல்யாண மண்டபங்கள் இருவழிசாலைகள் எல்லாம் ஒருவழி சாலை காவல் துறைதான் இங்கு இஷ்டப்படி ஆட்சி நடத்துகிறதே வொழிய மக்கள் ஆட்சியே இல்லை விதிகள் கடைப்பிடிக்கப்படாமல் இஷடப்படி கட்டுமானங்கள் வருவாய்த்துறை வருவாய் மட்டும் பார்க்கிறது ஊராட்சி ஊழலாட்சி புரிகிறது நகராட்சி நரக ஆட்சி செய்யும் விதத்தில் மகேந்திரபல்லவன் தெருவில் மத்தியில் ரோட்டின் அகலத்தை ஆக்கிரமித்து பாதிக்கும் மேலாக ரோட்டின் அளவினை குறைத்து சாக்கடை கிணறு ஒன்றும் மோட்டார் அறையினையும் கட்டி வாகன நெருக்கடி கொசுக்கடி துர்நாற்றம் ஆகியன அமுல்படுத்தியுள்ளது ஊராட்சியோ எம் பி நிதியினை அபகரித்து அதே மகேந்திரபல்லவன் தெருவின் மாமல்லன் பள்ளியிலிருந்து சாக்கடை நீர் தேக்கம் கட்டி ரோட்டின் அகலத்தினை குறைத்துள்ளது கீழ்க்கோடி முனையில் மகேந்திரபல்லவன் தெரு கே டி எஸ் மணி தெரு இணைக்கும் குறுக்கு இணைப்பு சாலையினையும் பொது இடத்தினையும் ஒரு முன்னாள் எம் எல் ஏ ஆக்கிரமிப்பு செய்து வருகிறார் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டு கொள்ளாமல் இருந்து விடுகின்றனர் மாவடட ஆட்சி தலைவரும் துணிச்சலுடன் விதிகளின்படி செயல்படுவதில்லை பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற இடம் கொட்டும் கொசுவுக்கு பெயர் பெரும் இடமாக மாறிவிட்ட்து எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளுவது இல்லை காரணம் வோட்டுகளும் நோட்டுகளும் தான் ரோடுகளை விட முக்கியம் என எண்ணி செயல்படுகின்றனர் ஆக்கிரமிப்பு விஷயத்தில் மட்டும் அனைத்து கட்சிகளும் கூட்டணி தான்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
11-பிப்-201914:53:38 IST Report Abuse
Girija திமுக என்றால் இந்த நிதி வசூல் தான் இனி ஒரு கடைக்காரன் நிம்மதியாக இருக்க முடியாது இதற்க்கு அதிமுக எவ்வளவோ தேவலை
Rate this:
Cancel
Kalyani S - Ranipet,இந்தியா
11-பிப்-201911:55:24 IST Report Abuse
Kalyani S ஜெயா கட்சிலிருந்து பணம் கொடுப்பார், ஸ்டாலின் கட்சியிலிருந்து பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கிறார், ஆனால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவதாக சொல்லும் தினகரன் எங்கிருந்து கொடுப்பர்/கொடுக்கப்போகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X