விருப்ப மனு தாக்கல் : அ.தி.மு.க., அவகாசம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விருப்ப மனு தாக்கல் : அ.தி.மு.க., அவகாசம்

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (1)

சென்னை: அ.தி.மு.க.,வில் விருப்ப மனு சமர்ப்பிப்பதற்கான அவகாசம், வரும், 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, விருப்ப மனு வாங்கும் பணி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், பிப்ரவரி, 4ல் துவங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர், 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்ப படிவம் வாங்கி, விருப்ப மனு கொடுத்தனர்.தற்போதைய, எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆர்வமுடன் மனு கொடுத்தனர். விருப்ப மனு சமர்ப்பிக்க, நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.நேற்றும் ஏராளமானோர் விருப்ப மனு கொடுத்தனர். அமைச்சர் ஜெயகுமாரின் மகனும், தென்சென்னை எம்.பி.,யுமான ஜெயவர்த்தன், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தார். நேற்று வரை, 1,200க்கும் மேற்பட்டோர், விருப்ப மனு கொடுத்துள்ளனர்.இந்நிலையில், கட்சியினர் விருப்பத்தை ஏற்று, விருப்ப மனு சமர்ப்பிக்கும் தேதியை, வரும், 14 வரை நீட்டித்து, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X