திரிணமுல் எம்.எல்.ஏ., கொலை : பா.ஜ., தலைவர் மீது வழக்கு | Dinamalar

திரிணமுல் எம்.எல்.ஏ., கொலை : பா.ஜ., தலைவர் மீது வழக்கு

Added : பிப் 10, 2019 | கருத்துகள் (3)
 திரிணமுல் எம்.எல்.ஏ., கொலை  : பா.ஜ., தலைவர் மீது வழக்கு

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ், எம்.எல்.ஏ., பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் முகுல் ராய் உட்பட, நான்கு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாடியா மாவட்டம், கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் திரிணமுல், காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், சத்யஜித் பிஸ்வாஸ்.நாடியா மாவட்டம், புல்பாரி பகுதியில், நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற பிஸ்வாசை, அடையாளம் தெரியாத சிலர், துப்பாக்கியால் சுட்டனர். இதில், பிஸ்வாஸ் இறந்தார். இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் முகுல் ராய் உட்பட, நான்கு பேர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.பா.ஜ.,வில் சேருவதற்கு முன், முகுல் ராய், திரிணமுல், காங்., கட்சியில், மம்தா பானர்ஜிக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, திரிணமுல்லிலிருந்து விலகி, பா.ஜ.,வில், கடந்த ஆண்டு சேர்ந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X